லச்சு மகாராஜ் பிறந்த தினம்: டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

லச்சு மகாராஜ் பிறந்த தினம்: டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்
Updated on
1 min read

உலகப் புகழ்பெற்ற இந்திய தபேலா கலைஞரான லச்சு மகாராஜின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை கவுரப்படுத்தும் விதத்தில் டூடுல் வெளியிட்டு கூகுள் சிறப்பு செய்துள்ளது.

1944 ஆம் ஆண்டு, அக்டோபர் 16 ஆம் தேதி இசை குடும்பத்தில் பிறந்த லச்சு மகாராஜின் இயற்பெயர் லஷ்மி நாராயண் சிங்.

 தபேலா கலைஞராக மட்டுமில்லாது டெபிஸ் டென்னிஸ் வீரராக லச்சு விளங்கினார்.இந்திர  காந்தி அறிவித்த அவசர காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட லச்சு மகாராஜன் சிறையில் இருந்தபடி அங்கு இருந்த மேசையை தபேலாவாக பயன்படுத்தி தனது போரட்டத்தை தொடர்ந்தார்.

மத்திய அரசு அறிவித்த பத்ம ஸ்ரீ விருது உட்பட பல விருந்துகளை லச்சு மகாராஜன் மறுத்திருக்கிறார். 1957 ஆம் ஆண்டு இசை கலைஞர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான, சங்கித நாடக அகடமி விருந்து வழங்கி லச்சுவை இந்திய  இசை மற்றும்  நாடக துறை சிறப்பித்தது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் உடல் நலக்குறைவால் லச்சு மகாராஜ் மறைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in