

கடந்த ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த 'பிக் பாஸ் சீசன் 2' தமிழின் வெற்றியாளராக ரித்விகா அறிவிக்கப்பட்டார். இதில் இரண்டாவது இடம் ஐஸ்வர்யாவுக்குக் கிடைத்தது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள பிக் பாஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
மலையாள 'பிக் பாஸ் 2' நிகழ்ச்சியை நடிகர் மோகன் லால் தொகுத்து வழங்கி வந்தார்.
மலையாள 'பிக் பாஸ் 2' வெற்றியாளராக பிரபல தொகுப்பாளரும், நடிகருமான சாபுமோன் அறிவிக்கப்பட்டார். இதில் இரண்டாவது இடம் பிரபல தொகுப்பாளினி பேலி மானேவுக்கு கிடைத்தது.
தெலுங்கு 'பிக் பாஸ் சீசன் 2'-வைப் பொறுத்தவரை அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நானி, ஆந்திர மக்களிடம் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்த கவுசல் மண்டாவை வெற்றியாளராக அறிவித்தார். இதில் இரண்டாவது இடம் கீதா மாதுரிக்குக் கிடைத்தது.
மூன்று மொழிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ’பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் தற்போது ’பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.