

மனிரத்னம் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா,ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ள ’செக்கச் சிவந்த வானம்' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.
இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
திருச்சி-சிவா
ஆயுத எழுத்து மேக்கிங்ல பட்டி டிங்கரிங் பாத்த மாதிரி இருக்கு. புதுசா ஒண்ணுமில்ல.
Vijay497
உனக்கு யாராவது பழைய நண்பர்கள் இருக்காங்களா.... நம்பாத
Raj
அப்பாவின் மறைவுக்கு பிறகு..., சகோதரர்களிடம் நடக்கும் அதிகார போட்டியில், ஒரு காவல் அதிகாரி சூழ்ச்சி செய்து, ஒவ்வொருத்தராக காலி செய்து, தான் அந்த இடத்துக்கு வருகிறார்
ՏҽղԵհíӀƘմʍɑɾ
மணிரத்னம் படம் மீது நமக்கு அவ்வளவு இண்ட்ரெஸ்ட் கிடையாது..
ஆனா.. இந்த படம் விதிவிலக்கா இருக்குமோனு தோணுது.
Being Human®
ரொம்ப நாளைக்கு அப்றமா மணிரத்னத்தோட பெட்ரோமாக்ஸ் லைட்டு வாடகைக்கு போகும்னு தோணுது!
சி.பி.செந்தில்குமார்
மணிரத்னம் இயக்கத்தில்"செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்"குட்,ஆனா மணிரத்னத்தை நம்ப முடியாது,ஆய்த எழுத்து போல் சொதப்பாமல் சராசரி மசாலா லெவலுக்கு இருந்தாலே போதும்.அர்விந்த்சாமி,விஜய்சேதுபதி க்காக
வசீகரன்☭
ஆயிரம் சொல்லுங்க..!! எனக்கு லாம் விஜய் சேதுபதியை பாத்ததும் தான் கூஸ்பம்ப் வந்துச்சு !!
Indian Monk
மணி இருட்டுல படம் எடுப்பவர் இல்ல படம் முழுக்க வெயிலையும் வெளிச்சத்தையும் வச்சி எடுப்பேன்ன்னு ஒவ்வொரு ஃப்ரேம்லயும் எடுத்துருக்கார்.
saravanan
பழைய ஃபார்ம்க்கு வரமாட்டாரானு ஏங்கி பல படங்களில் ஏமாந்த என் போன்றோர்க்கு பிடித்த படமா இருக்குமென நம்புகிறேன்.
Rooba :)
மணிரத்னம் படம் என்றாலே ஒரு தனிப் பிரியம்.. அதுலயும் ஏ.ஆர். ரஹ்மான் இசையும் சேர்ந்துட்டா கொள்ளைப் பிரியம்...
SURESH EAV
வந்தா
ராஜாவாதான் வருவேன்
ராஜாவா வந்தா..?
ராஜாவுக்கு நூறு தோஸ்த்து!
Annamalai Unique
மீண்டும் எங்கள் மணிரத்னம்
The Fandom Rasigai
இந்த வருஷம் வந்த மத்த எல்லா ட்ரைலரையும் அலேக்கா தூக்கி மலேக்கா முழுங்கிடுச்சு
Loner
ட்ரைலர் கட்ஸ்னா எப்படி இருக்கும்னு மணி இப்போ க்ளாஸ் எடுப்பாரு