

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா, சதிஷ் ஆகியோற் நடித்திருக்கும் 'கஜினிகாந்த்’ திரைப்படம் இந்தவாரம் வெளிவந்திருக்கிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில் . ...
கில்லி
பில்லா ரங்கா பாட்ஷான்னு கெத்தா வருவேன்னு பாத்தா இப்டி தர்மத்தின் தலைவன்ல வர்ற செத்து போன ரஜினிகாந்த் கேரக்டர் மாறி எல்லாத்தையும் மறந்துட்டு வந்து நிக்கிறியேடா நீ ரஜினிகாந்த் இல்ல கஜினிகாந்த்
MANOJKUMAR K
தியேட்டரில் அமர முடியவில்லை , பிளேடு கப்பெனியே வைக்கலாம்
Kabeer Hm
#Ghajinikanth படம் பாத்துட்டு வந்துட்டன் கொடுத்த காசுக்கு படம் #வர்த்து
இயக்குனர்: நீங்க இந்த மாதிரியும் படம் எடுப்பிங்கன்னு காமிச்சிட்டிங்க.
ஆர்யா: வழக்கம் போல அவரோட நடிப்பை காமிச்சிருக்காரு.
சாயிஷா: என்னம்மா #Dance ஆடுது.
சதிஷ்: காமடியை தெரிக்க விட்டுள்ளார்.
The Rockstar AK™
சில விஷயங்கள் தெலுங்கு ஆடியன்ஸ்கு செட்டாகும்..அதயே இங்க எடுத்தா கண்றாவியா இருக்கும்..அதுக்கு நம்ம ஆடியன்ஸ் டேஸ்ட் தெரிஞ்சு அதுக்கேத்தாப்ல மாத்தி ரீமேக்கற கூறு வேணும்..வெறும் 6 நாள் Pre Production 38 நாள்ல படத்த முடிச்சோம்றதா சாதனை? உக்காந்து பாக்கறாப்ல எடுங்கடா
பிரகாஷ்
இடைவேளை - பரவாயில்லை எதிர்பார்த்ததை விட நல்லா இருக்கு..
ஒரிஜினல சொதப்பாம எடுத்திருக்காங்க..
#BHALEBHALEMAGADIVOY தெலுங்கு படம் பார்க்காம புதுசா இதை பார்க்கிறவங்களுக்கு செமயா இருக்கும்
ஒளி (
கஜினிகாந்த் பார்த்தேன், தமிழில் சந்தோஷை, ‘சன்தோஷ்’ என்று கூட எழுதலாம் என தெரிந்துகொண்டேன்..
Joseph Vishnu
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்
Aniketh Shankar
சுமரான படம்.
Jenith Michael Raj
கொடுத்த காசுக்கு... நல்ல நிறைவான படம்