Published : 31 Aug 2018 04:04 PM
Last Updated : 31 Aug 2018 04:04 PM

நெட்டிசன் நோட்ஸ்: யுவன் பிறந்த நாள் - என்றென்றும் நின்று பேசும் பிஜிஎம்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்களும், நெட்டிசன்களுக்கும் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

anandh krishnan

‏சிரிக்கின்ற போதிலும்

நீ அழுகின்ற போதிலும்

வழி துணை போலவே

நான் இசையுடன் தோன்றுவேன்

அசால்ட்டு ஆறுமுகம்

‏யுவன் வாய்சுல ஒரு மேஜிக் இருக்கு

Madhan   

‏அப்பா உதவியால வந்தாலும் தன்னோட தனி திறமையால தனுக்குன்னு பெரிய ரசிகர் கூட்டம் அமைச்சுக்கிட்டதுல  விஜய், யுவன் இருவருமே கவனிக்கத்தக்கவர்கள்.

 

Kallipattan கார்த்தி

‏ தமிழ்சினிமாவில் முதல்முறையாக கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு தீம் மியூசிக் போட்டு தெறிக்கவிட்டது இசைஞானி இளையராஜா,

அதன்பிறகு தமிழ்சினிமாவில்  தீம் மியூசிக் தெறிக்குதுனா அது #Yuvan தல அஜித்திற்கு போடுகின்ற தீம் மியூசிக்

❤நவீன புத்தர் ❤

‏வின்னர் கைப்புள்ள இன்ட்ரோ மியூசிக் மாஸ்டர் பீஸ் ஆஃப் யுவன்

VᴇɴᴋᴀᴛᴇsH™

‏மகிழ்ச்சி,சோகம், நட்பு, காதல், பிரிவு, காதலின் வலி,  மாஸ் , துள்ளல், குத்து சாங்ஸ்னு எல்லா வகையான உணர்வுகளையும் ம்யூசிக்ல கடத்தும் யுவனுக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள்..’

வேம்பை கிருஷ்ணா

ஈரநிலா

நினைத்து நினைத்து பார்த்தேன்

கண்பேசும் வார்த்தைகள்

சிறகுகள்

ஒருகல் ஒரு கண்ணாடி

முன்பனியா

Loner

‏ஃபெஸ்ட் ஆப் இளையராஜா எதுன்னு கேட்டா யுவன சொல்லலாம்  #HBDYuvan

Joyfermi (JF)

‏இசைத்தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ramஜி

‏யுவனிடம் பிடித்தது தன் அபிமாணிகள், பெரிய ஹீரோக்கள் பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் குவாலிட்டி ஆன இசையை சிறிய ஹீரோ சிறிய தயாரிப்பாளர் புதுமுக இயக்கனர்களுக்கும் வழங்குவதே!

Saravana Kumar

‏என்றென்றும் நின்று பேசும் பிஜிஎம்

 

 

யுவன் ரோலக்ஸ்

பாடலுக்காக திரையரங்கு சென்றக் கூட்டத்தை 

தனது பின்னணி இசைக்காக திரையரங்கு  வரவைத்தவர் இவர்!!

HBD yuvan   

‏யுவன் இசையில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது நா.முத்துக்குமாரின் வரிகள்

மொக்கச்சாமி

‏கதை பேசிக்கொண்டே

வா காற்றோடு போவோம் #HBDYuvan

Supramaniyam Thanuraj

‏தந்தை:-

தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும்

வரிகள்:- நா. முத்துக்குமார்

தாய்:-

ஆராரிராரோ நானிங்குபாட

வரிகள்:- சினேகன்

இசை:- யுவன்

 

 

Thalaiva      

‏யுவனின் சிறந்த பாட்டுனு டேக் போட்டுட்டு இருக்கானுக... யுவன் போடுற பாட்டு எல்லாமே சிறந்தது தான்டா

ஜெய்

‏இசை என் வாழ்க்கை ல பெரிய பங்கு இருக்கு!

அதும் யுவன் இசைக்கு மிகப்பெரிய பங்கு இருக்கு!

அவர் பாட்ட கேட்டுகிட்டே தான் படிப்பன் சாப்டுவன் தூங்குவன் படம் பாப்பன்

மறுக்காலத்து கள்ளன்

‏ஒருசில பாட்டு கேக்குரப்போவே இது யுவன் தான்னு தோணும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x