Last Updated : 27 Jul, 2018 05:30 PM

Published : 27 Jul 2018 05:30 PM
Last Updated : 27 Jul 2018 05:30 PM

நெட்டிசன் நோட்ஸ்: பொன்விழாத் தலைவர் கருணாநிதி - தமிழக மக்களைத் தாங்கும் கட்டுமரம்..

திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று  50-வது ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில் அவரது சாதனைகள் குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

அரவிந்தபோசு

‏எல்லாப் பாதைகளிலும் குளிர்ச் சோலையும் இருக்கும் சுடும் பாலையும் இருக்கும்,  பாலையைக் கண்டவுடன் பதுங்கி ஓடுபவன் நானல்ல..

#பொன்விழாத்தலைவர்கலைஞர் #Karunanidhi

N. Balaguru

‏நீ பயணித்த பாதையை நெஞ்சுக்கு நீதியாக தந்தாய்..!!

என்னுள் நீ பயணித்ததை என் நெஞ்சின் சேதியாக எங்கே தருவது???

Arunkumar

கலைஞரைப் புறக்கணித்து வாழ நினைத்தால் தமிழகத்தில் ஒரு மணி நேரம் கூட உன்னால் கழிக்க இயலாது. எங்கு காணினும் என் தலைவனின் திட்டங்கள் தான் உன் தலையை உயர்த்திப் பார்க்க வைக்கும்...

சமூகவிரோதி

93 வயதிலும் 2016-ல் தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்த எம்.எல்.ஏ.

5 முறை தமிழக முதல்வர்.. 13 தொடர் தேர்தல்களில் வெற்றி பெற்றுவருபவர்..

அனைத்துக்கும் மேலாக அரைநூற்றாண்டு காலத்திற்கு திமுக தலைவர்

Ram Thirumurugan

‏13 முறை வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்

Rajesh

‏அவர் கட்டிய ஐடி பார்க்கில் உட்கார்ந்து கொண்டு ஸ்டேட்டஸ் அப்டேட் செய்தான்.

கலைஞர் எதுவுமே செய்யவில்லை என்று...

Manigandan Srikalikapuram

‏ராவணன் முதல் நரகாசுரன் வரை அழித்த அவர்களால்

அழிக்க முடியாத பேரரக்கர்.

aravindhan

‏சங்கத் தமிழே..!

சாயாத புகழே.! சிங்கக் குரலே

செந்தமிழே ..! நீ வாழ்க...!

kdnl thangal

‏தன்னைப் பற்றி இழிவாகப் பேசினால் சிறைவாசம் என்பது ஜெயலலிதா காலம்,

தன்னைப் பற்றி இகழ்ந்து தரங்கெட்டுப் பேசினாலும் தன்மானத்தையும் சுய மரியாதையும் இழந்துவிடாமல் தமிழக மக்களைத் தாங்கும் கட்டுமரம்..

வெட்டி பய  

‏வடமொழி கலந்த வசனங்களை மாற்றி,

வீரம் செறிந்த,

உணர்ச்சிமிக்க

சமூக கருத்துகளை முதன்முதலில்

தமிழ் சினிமாவில் புகுத்தி,

தமிழ் உச்சரிப்பு கற்றுத் தந்த

கதை வசனகர்த்தா

பள்ளிக்கல்வி போதாதெனினும்,

தமிழ் மீது தீராக்காதல்

கொண்ட படைப்பாளி!

karthick

‏நீங்கள் வாழும் காலத்தில் நான் வாழ்கின்றேன் என்கிற ஒற்றை பெருமை போதும். #கலைஞர்

Kamaraj.gks

‏உலகிலேயே அரை நூற்றாண்டு காலம் அரசியல் கட்சித் தலைவராக தொடர்ந்த ஒரே ஒரு தலைவன் ஒப்பாரும் மிக்காரும் இலாத கொள்கைக்குன்று எம் கலைஞர்.

Aj Nirmal

‏அடிமைப்பட்டு கிடந்த பல தலைமுறைகளின் குடும்பத்தில் பட்டதாரிகளை உருவாக்கிய மாமேதை...

குடும்பத்தில் முதல் பட்டதாரிகக்கு சிறப்பு சலுகைகள் வழங்கியவர் எம் தலைவன்!!!

Natraj

‏பொதுவாழ்வில் 80 ஆண்டுகள்,

முரசொலி நிறுவனராக பவளவிழா,

கலைத்துறையில் 70 ஆண்டுகள்,

சட்டமன்றப் பணிகளில் வைர விழா,

கழகத் தலைவராய் பொன்விழா!

அரசியலின் அசைக்க முடியாத சக்தியான அருமைத் தலைவரின் புகழை போற்றிப் பாதுகாப்போம்!

Arunprasath Arumugam

‏வாழ்த்தியவர்களை விட தூற்றியவர்களை வாழவைத்த மாபெரும் தமிழினத்தலைவர்

கரூர்_வால்_பையன்

‏ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இந்திய அரசியலை சுழலவைத்த மாபெரும் வரலாற்று நாயகன்..

திமுக தலைவராக 50 -வது ஆண்டில் தலைவர்  

கவண்_ட்வீட்ஸ்

‏#பொன்விழாத் தலைவர் கலைஞர்

எந்த கடைநிலை தொண்டனையும் இதனால் வரை அடிமையாக நடத்தவில்லை என்பதே அவரின் மிகப் பெரிய சாதனையும் ,பெருந்தன்மையும் கூட ..

சம்யுக்தா ராணி

‏திராவிட  சூரியனே

பசுமேக்கி M.ராம்

‏கலைஞர் வெறும் பெயர் இல்லை ஒரு நூற்றாண்டின் வரலாறு......,,

அன்புடன் பாரதி

‏நினைத்தாலோ

பேசினாலோ

உடலெல்லாம் எப்போதும்

ஒரு பரவசம்!!

ஒரே ஒரு ஒற்றை சொல்அது.. #கலைஞர்

Prabhu Selvamani

‏கலைஞர், தமிழக அரசியலில் மட்டும் அல்ல தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர். இன்று தமிழ்நாடு கல்வியில், மருத்துவத்தில், உள்கட்டமைப்பில், இந்தியாவில் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் கலைஞர். அவர் கொண்டு வந்த பல திட்டங்களை இந்திய அரசும் பின்பற்றியது #kalaignar50

மெத்த வீட்டான்

‏ட்விட்டர், ஃபேஸ்புக் இல்லாத காலகட்டத்தில் கலைஞர் ட்விட்டராகவும் ஃபேஸ்புக்காகவும் விளங்கினார் தமிழகத்துக்கு !

PANNEERSELVAM

‏தன்னைத் தாக்க வந்த மின்னல்களிலிருந்து தனக்குத் தேவையான மின்சாரத்தை எடுக்கும் கலை தெரிந்தவர் கலைஞர். அதனால் தான் மிகப்பலம் வாய்ந்த எதிரிகளையும் தன்பால் ஈர்த்தார். இந்திய அரசியலின் முக்கிய அத்தியாயம் அவருடையதாகவே இருக்கும்.

Chandru MayaS

‏மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களில் இன்னும் உள்ள நிலையில், 1973களிலேயே  தமிழகத்தில் அதைத் தடை செய்தார் #கலைஞர்...!

Gopinath

‏சுதந்திரத் திருநாளில் மாநிலத் தலைநகரங்களில் தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்கு பெற்றுத் தந்தவர்   அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி.

RâjâsêkârChêm®

‏1967 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுதான் திமுக முதன்முதலாக ஆட்சியை பிடித்தது.  சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20,484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

அம்பேத்கர் சமத்துவ இயக்கம்

பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம்

மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்ஷா ஒழிப்பு 

கண்ணொளி திட்டம்

சமத்துவபுரங்கள்

உழவர்சந்தைகள்

தமிழ்தாய் வாழ்த்து

133 அடி திருவள்ளுவர் சிலை

வள்ளுவர் கோட்டம்

கண்ணகி சிலை

பூம்புகார் நகரம்

பேருந்துகள் நாட்டுடைமை

லிஸ்ட் பெரிசு! #பொன்விழாத்தலைவர்கலைஞர்

கலர் பாஸ்.

‏அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆலமரமாக இருப்பவர் நம் கட்டுமரக் கலைஞர் மட்டுமே

வாழ்க கலைஞர்

Indiavaasan

‏கருணாநிதி!

வெளிப்படையான காரணங்களுக்காகப் போற்றப்பட்ட, சொல்லமுடியா ரகசிய வெறுப்பின் காரணங்களுக்காக தூற்றப்பட்ட உன்னத தலைவர்.

KP KARUNA

‏ஐம்பது ஆண்டுகாலம் தலைவர்!

ஐந்து முறை முதல்வர்!

எதையும் வழக்கம் போல

அவர்தான் முடிவு செய்வார்.

தொண்டர்கள் பதறுவதை தலைவர் விரும்ப மாட்டார்.

Raju N

‏பண்போங்கும் கருணாநிதி கொடும் பகை வெல்லும் கருணாநிதி. இமயத் தோள் கொண்ட கருணாநிதி.

பார்புகழும் கருணாநிதி, என்றும் பேர் நிலைத்த கருணாநிதி.......... 

Chandru MayaS

‏ பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் #கலைஞர் செல்வாக்கு செலுத்தியிருந்தாலும் ஒரு போதும் நாடாளுமன்றத் தேர்தலில் #கலைஞர்_கருணாநிதி போட்டியிட்டதில்லை...!

ஸ்வீட்டி

‏இது தமிழ்நாடு இல்லைடா......

இது கலைஞர் கருணாநிதி நாடு.....

அவர் ஒவ்வொரு செங்கலா

பார்த்து பார்த்து கட்டின வீடு...

Gobi Ganesh

‏பெரியாரின் மாணவன் கருணாநிதி,

அண்ணாவின் தம்பி கருணாநிதி,

"திமுக தலைவர் கருணாநிதி" ஆன நாள் இன்று!

Ramesh

‏14 வயதில் களப்போராளி.

17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்ற தலைவர்.

19 வயதில் பெரியாரின் குடியரசில் துணை ஆசிரியர்.

24 வயதில் திரைப்பட வசனகர்த்தா.

26 வயதில் திராவிட முன்னேற்றக்கழக பிரச்சாரக்குழு செயலாளர்களில் ஒருவர்.

95 வயதிலும் எம்.எல்.ஏ. அரைநூற்றாண்டு காலத்திற்கு கழகத்தலைவர்.

 

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x