ஈழ நாடக ஆளுமைக்கு அஞ்சலிக் கூட்டம் | திண்ணை

ஈழ நாடக ஆளுமைக்கு அஞ்சலிக் கூட்டம் | திண்ணை
Updated on
1 min read

இலங்கையின் நாடக இயல் முன்னோடியான குழந்தை சண்முகலிங்கம் கடந்த வாரம் காலமாகிவிட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார் அவர். நாடக அரங்கக் கல்லூரியை நிறுவியவர் அவர். ‘அன்னை இட்ட தீ’, ‘எந்தையும் தாயும்’, ‘மண் சுமந்த மேனியர்’ உள்ளிட்டவை இவரது பிரபலமான நாடகங்களாகும். நாடகவெளி அமைப்பு இன்று (26.01.25) காலை 11 மணிக்கு சென்னை கூத்துப்பட்டறையில் அஞ்சலிக் கூட்டத்தை ஒருங்கிணைக்கிறது. தொடர்புக்கு: 94448 18922

மின்னங்காடி பதிப்பகக் கடை - எழுத்தாளர் தமிழ்மகன் நடத்தும் பதிப்பகம் மின்னங்காடி. இப்போது சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் நெல்சன் பிளாசாவில் ஒரு புத்தக விற்பனை பிரிவைத் தொடங்கியிருக்கிறது இந்தப் பதிப்பகம். இந்தப் புத்தகக் கடையில் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் கூட்டத்தில் கவிஞரும் ஆய்வாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதம் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in