

பொங்கல் பண்டிகை என்றாலே மூன்று நாள்கள் விடுமுறையும், கரும்பும், இனிப்பும்தான் சட்டென நினைவுக்கு வரும். இந்தக் கொண்டாட்ட மனநிலை எல்லாம் பள்ளி, கல்லூரி படிப்பு முடியும் வரை மட்டுமே. வேலைக்குச் செல்வோருக்கு அவரவர் பணியின் தன்மைக்கேற்ப விடுமுறை கிடைக்கும். பெரும்பாலானோருக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை, சில நிறுவனங்களில் இரண்டு நாள்கள் பொங்கல் விடுமுறை என மாறி வருவது வழக்கம். எது எப்படியோ பண்டிகை சமயத்திலும் ‘மீம்ஸ்’ பதிவிட இணையச்சமூகம் மறப்பதில்லை.
விடுமுறை மீம்ஸ், கரும்பு மீம்ஸ், மாட்டுப்பொங்கல் கோலம் மீம்ஸ் என இந்தப் பொங்கலைக் கொண்டாட நெட்டிசன்கள் தயாராகிவிட்டனர். களைகட்டி வரும் பொங்கல் பதிவுகளில் ஒன்று - ‘ஆபீஸ்ல பொங்கல் வைப்பாங்களா?’ என ஒருவர் கேட்க, ‘பொங்கலுக்குத்தான் ஆபீஸ் வைப்பாங்க’ என இன்னொருவர் பதிலளிக்கிறார். இந்த மீம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. - மார்க்கி