

90ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத நினைவலைகளில் ‘டபிள்யூ டபிள்யூ எஃப்’ நிகழ்ச்சிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இந்த சண்டைப் போட்டியில் பல ‘சூப்பர் ஸ்டார்கள்’ உருவாகி மறைந்திருந்தாலும் சண்டை வீரர் ஜான் சீனாவுக்கான ரசிகர் பட்டாளம் மிகப் பெரியது. தன்னுடைய தனித்துவமான சண்டைப் பாணியால் உலக அளவில் ரசிகர்களைக் கவர்ந்த ஜான் சீனா, சண்டைப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2025-ல் ‘ஃபேர்வெல் டூர்’ புறப்பட ஆயத்தமாகும் அவர் இந்த ஆண்டின் இறுதி வரை சில போட்டிகளில் பங்கேற்று ஓய்வு பெற உள்ளார். டபிள்யூ டபிள்யூ சண்டைப் போட்டிகளின் பிரத்யேக நிகழ்ச்சியான ‘ரா’ இனி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. ஒரு பக்கம் ஜான் சீனாவின் ஓய்வு, இன்னொரு பக்கம் தொலைக்காட்சியில் இருந்து ஓடிடி-க்கு புரொமோட் ஆகும் சண்டை நிகழ்ச்சி என அடுத்தடுத்து 90ஸ் கிட்ஸ்களின் நினைவலைகள் முடிவுக்கு வருவதால் பழைய நினைவுகளைக் தோண்டிப் பார்த்து சோகமான பதிவுகளைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். - தீமா