

2025 புத்தாண்டு பிறந்துவிட்டது. வாழ்த்துகளுடன் ‘இந்த ஆண்டுக்கான உங்கள் ரெசல்யூஷன் என்ன?’ என்பதுதான் அதிகம் கேட்கப்படும் கேள்வியாக உள்ளது. உடல் நலத்தைப் பாதிக்கும் பழக்கங்களைக் கைவிட வேண்டும், பயணம் செய்ய வேண்டும், திறன்பேசி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் பதில்களாக இருக்கின்றன. இதில் ஹைலைட்டான ஒன்று, ‘இந்தப் புத்தாண்டில் எப்படியாவது ஜிம்மில் சேர வேண்டும்’ என்பதுதான்.
கடந்த சில ஆண்டுகளாக ஜிம்மில் சேர்ந்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதிலும், டயட் இருப்பதிலும் இளைய தலைமுறை கவனம் செலுத்துகிறது. இதனால் புத்தாண்டு தொடக்கத்தில் ஜிம்மில் இணைபவர்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவே இருக்கும்.
ஆர்வ மிகுதியால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஜிம்மில் சேரும் கூட்டத்தில் பலர் தொடர்ந்து மூன்று மாதங்களாவது ஒர்க் அவுட் செய்வார்களா என்பது சந்தேகமே! ஒரு சில வாரங்களுக்குப் பிறகு ஜிம்கள் வெறிச்சோடி காணப்படும் என இந்தப் போக்கைக் கிண்டல் செய்து நெட்டிசன்கள் ஜிம் மீம்களைப் பதிவிட்டு சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர். - சிட்டி