‘அவர் ஜாகிர் ஹுசைன் அல்ல...’ - தீர விசாரிப்பதே மெய்!

‘அவர் ஜாகிர் ஹுசைன் அல்ல...’ - தீர விசாரிப்பதே மெய்!
Updated on
1 min read

டிசம்பர் 15-ம் தேதி, உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை உஸ்தாத் ஜாகிர் ஹுசைன், தனது 73-வது வயதில் காலமானார். அவரது மறைவையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி பலரும் அவருக்கு இரங்கலைத் தெரிவித்திருந்தனர். ஜாகிர் ஹுசைன் தபேலா வாசிப்பது போன்ற பழைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகின. அப்போது, ‘பாடகர் உஸ்தாத் நுஸ்ரத் ஃபதே அலி கானுடன் உஸ்தாத் ஜாகிர் ஹுசைன்’ எனும் தலைப்பில் வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

பலரும் நுஸ்ரத் ஃபதே அலி கானுடன் இருப்பது ஜாகிர் ஹுசைன் என எண்ணி வீடியோவைப் பகிர்ந்திருந்த நிலையில், அதில் இருப்பது பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல தபேலா கலைஞர் உஸ்தாத் தரி கான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பார்ப்பதற்கு ஜாகிர் ஹுசைனும் தரி கானும் ஒத்த முகச் சாயலில் இருந்ததால் இந்தக் குழப்பம். இதனால், ‘சமூக வலைதளங்களில் வரும் தகவல்களைக் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே நம்பாமல், தீர விசாரிப்பதே மெய்’ என இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். - வசி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in