‘ஸ்பாட்டிஃபை ராப்’ அலப்பறைகள் - நடந்தது என்ன?

‘ஸ்பாட்டிஃபை ராப்’ அலப்பறைகள் - நடந்தது என்ன?
Updated on
1 min read

இசைப்பாடல்கள், ‘பாட்காஸ்ட்’ ஆகியவற்றின் தொகுப்பைக் கொண்டது ‘ஸ்பாட்டிஃபை’ செயலி. உலக அளவில் பிரபலமான இந்த ஆடியோ செயலியைக் கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் இச்செயலி அதன் பயனர்களுக்கு ‘ஸ்பாட்டிஃபை ராப்’ (Spotify wrap) எனும் தகவல்களை வழங்குகிறது.

அதாவது, அந்த குறிப்பிட்ட ஆண்டில் உங்களது விருப்பப் பாடல் எது? ரிப்பீட் மோடில் கேட்ட பாடல் எது? மொத்தம் எவ்வளவு நேரம் இச்செயலியைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள் போன்ற தகவல்கள் அடங்கிய தொகுப்பைத் தனித்தனியே ஒவ்வொரு பயனரிடமும் பகிர்கிறது. சுவாரஸ்யமான முறையில் பகிரப்படும் இந்தத் தகவல்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்வதும், வைரல் ஆவதும் வழக்கம்.

இந்த ஆண்டும் ‘ஸ்பாட்டிஃபை’ செயலி 2024-ம் ஆண்டுக்கான தகவல் தொகுப்பை அண்மையில் வெளியிட்டது. ஆனால், இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மைக்கு மாறாக இருப்பதாகவும், சரியான தரவுகளை வழங்கவில்லை எனவும் இணையவாசிகள் ‘ஸ்பாட்டிஃபை’ நிறுவனத்தை வறுத்தெடுத்தனர்.

இத்தளத்தில் பாடல்களைக் கேட்கவும், தகவல்களைப் பார்க்கவும் பயனர், குறிப்பிட்ட தொகையைச் சந்தாவாகச் செலுத்த வேண்டும். தகவல்கள் சரியாக இல்லாததால் ஏமாற்றம் அடைந்த பயனர்கள் பலரும் ‘ஸ்பாட்டிஃபை’ செயலியில் இருந்து வெளியேறி வருகின்றனர் - தீமா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in