Published : 22 Jun 2018 14:17 pm

Updated : 22 Jun 2018 14:17 pm

 

Published : 22 Jun 2018 02:17 PM
Last Updated : 22 Jun 2018 02:17 PM

நெட்டிசன் நோட்ஸ்: விஜய் பிறந்த நாள் - "அவர் ஜெயித்தால் நான் ஜெயித்த மனநிலை"

நடிகர் விஜய் தனது 44வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்களும், நெட்டிசன்களும் தங்களது வாழ்த்தை பதிவு செய்து வருகின்றனர். அவற்றின் தொக்குப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Surya Born To Win

‏வாரிசு நடிகராவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் வெற்றிபெற திறமை வேண்டும். அவ்வகையில் நடிப்பு, நகைச்சுவை, நடனம், பாடகர் என்று பல முகம் கொண்ட விஜய் திறமைசாலி என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!

Fazil

‏எதிர்ப்புகளை ஏனிப்படிகளாக்கி, உயரத்தின் உச்சியிலும் தலைக்கனம் இல்லாமல் இருக்கவும் கற்றுக்கொடுத்த அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Abi

‏தன் பணிவான அமைதியால்,

எளிமையான அன்பால்,

உறுதியான கொள்கையால் உச்சம் தொட்டு உயர்ந்து பறக்கும்...... மக்களின் கலைஞன்,

இளைய தளபதி விஜய் அண்ணா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!!!

aravind

‏தன் தோல்விகளையும் எதிரிகளையும் தன் அமைதியான சிரிப்பிலையே தோர்க்கடித்தவன்....என்னுல் என்றுமே மாறாத ஒரே விசயம் தளபதி ரசிகன் என்பது தான்..... பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

வாழவந்தார்

‏ரசிக சண்டைக்காக வேண்டுமென்றால் இதை மறுக்கலாம்.. சந்தேகத்துக்கு இடமின்றி மாஸ்,கலெக்சன்,ஆக்சன்,க்ளாஸ்னு இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் விஜய்தான் #HappyBirthdayThalapathy

சினிமா தாண்டி தனக்கு வாழ்வளித்த மக்கள் சார்ந்த விஷயங்களில் ஒரு தமிழனாக விஜய் மற்ற நடிகர்களைவிட பல படி மேல #HBDThalapathiVIJAY

Ramஜி

‏விஜய் அவரின் ரசிகர்கள் மேல் வைத்திருக்கும் அன்பு,ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் முறை,இவன்லா ஒரு மூஞ்சினு விமர்சித்தவர்களை வெற்றிகள் மூலம் பதிலடி தந்த போராட்ட குணம் மிகவும் பிடித்தது

r.m.murugesan.

‏கிட்டத்தட்ட

10,15வருஷமா

கொஞ்சம்கூட

வித்தியாசமில்லாம

இவர்மெயின்டேன்

பண்ணிட்ட வர்ர

இவரோட"Fittness"

திரைப்படங்கள் தவிர்த்து

பொது வெளிகளில் இவரோட"Dressingsense"

மெல்லிய புன்சிரிப்புடன்

இவர்பேசும் ஆர்ப்பட்டமில்லாத

அமைதியான"Speech "

இதெல்லாம்

எனக்கு

ரொம்பபிடிக்கும்

Vignesh Waran

‏பூவே உனக்காகவில் துவங்கி இன்றுவரை , இத்தனை வருடங்களில், ஏற்றத்தாழ்வுகளில், வாழ்க்கையின் இழப்புகளில், தனித்து விடப்பட்ட தருணங்களில் துணை நின்ற பிடித்தம், மனதிற்கினிய நெடுங்கால நட்பைப்போன்ற பிடித்தம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சர்கார் சிலுவை

‏அவர் ஜெயித்தால் நான் ஜெயித்த மனநிலை..

அவர் தோற்றால் நான் தோற்ற மனநிலை..

இவ்வளவு தான் விஜய்க்கும் எனக்குமான பந்தம் :)

வந்தியத்தேவன்

‏விஜய்கிட்ட ரொம்ப பிடிச்சதே இவ்வளவு பெரிய இடத்துல இருந்தும் தன் ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சி படம் நடிக்கறது... தன் ரசிகர்களுக்கு அவர் தரும் உச்சக்கட்ட மரியாதை அது... இந்த விசயத்தில் பின்வாங்காதவரை விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்திலேயே தான் இருப்பார்.... #வாழ்க

Thalapathy Shadow

‏இங்க பல கோடிக்கனக்கான ரசிகர்கள சந்தோஷப்படுத்திட்டு அண்ணன் எங்க அமைதியா இருக்காறுனு தெரில

joseph Thalapathy

‏திரையில் இவர் கால் ஆடும்

நிஜத்தில் இவர் நிழல் கூட ஆடாது

கர்வம் என்னவென்று தெரியாத எங்கள் தளபதி

Shree Ram

‏எங்கு பார்த்தாலும் #விஜய்

எது கேட்டாலும் #விஜய்

இன்று முழுவதும்|#தளபதிக்கே

டீ

‏விஜய், 90களின் ரஜினியை ஞாபகப்படுத்துகிறார். படங்களுக்கிடையில் சீரான இடைவெளி. தன் ஆடியன்ஸ் தன்னிடம் என்ன எதிர்பார்த்து வருகிறார்களோ அதை சரியாக கொடுப்பது. தயாரிப்பு, இயக்கம், இசை, crew members வரை கவனத்துடன் தேர்ந்தெடுப்பது என.

Frank

‏"ஏன் இவர மட்டும் இப்டி கரிச்சுக்கொட்ராங்க "

To

"என்ன இவ்ளோபேர் வாழ்த்துராங்க "

சமரன்  

‏ஒரு மூனு வருஷத்துக்கு முன்னாடி இருந்த வெறுப்பு இப்ப துளி கூட இல்ல..இவன்லாம் உருப்படவா போறான் இனினு ஒருத்தன பாத்து நாம சொன்ன ஆளு தன் குறைகள சரி செஞ்சு மேல வந்து தன்ன புடிக்காத ஒருத்தன் கிட்ட பெரும் மரியாதைய சம்பாதிக்கறதுன்றது செம சூப்பரான விஷயம் ல்ல?

மீனம்மா

‏எல்லா போட்டி பொறாமைகளையும் எதிர்கொண்டு உழைத்துயர்ந்து இன்று திரைத்துரையில் தனிப்பெரும் சக்தியாக திகழும் தளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

எந்த வேர்வைக்குமே

வெற்றி வேர் வைக்குமே !!

குணா யோகச்செல்வன்

‏சினிமா தாண்டி தனக்கு வாழ்வளித்த மக்கள் சார்ந்த விஷயங்களில் ஒரு தமிழனாக விஜய் மற்ற நடிகர்களைவிட பல படி மேல

 

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

விஜய்விஜய் பிறந்த தினம் நெட்டிசன் நோட்ஸ்சமூக வலைதளங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author