நெட்டிசன் நோட்ஸ்: புதிய தலைமுறை மீது வழக்குப் பதிவு - அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளதோ?

நெட்டிசன் நோட்ஸ்: புதிய தலைமுறை மீது வழக்குப் பதிவு - அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளதோ?
Updated on
2 min read

கோவையில் கடந்த 8-ம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்களிடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள், அரங்கில் அமர்ந்திருந்த ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த  நிகழ்ச்சி நடத்திய புதிய தலைமுறை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் மாணவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துவதாக தவறான தகவல் தெரிவித்து அரங்கை புக்கிங் செய்த செய்தியாளர் மீது, மோதலைத் தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதியைப் பாதிக்கும் வகையில் பேசுதல், பொது சொத்துகளைச் சேதப்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Muhammed Muneer

‏புதிய தலைமுறை மற்றும் அமீர் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், புதிய தலைமுறை சேனல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பத்திரிகை சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் செயலாகும்.

Syed Zakiuddin

‏அரசு கேபிள் செட்டாப் பாக்ஸில் 124-வது இடத்தில் இருந்த புதிய தலைமுறை 499-வது இடத்துக்கு மாற்றம். தமிழ்மொழி சேனல் வரிசையிலிருந்த புதிய தலைமுறை பிறமொழி சேனல் வரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Thamizh vanan

மீண்டு எழுவாய்

செங்கோடன்

‏புதியதலைமுறை மீதான நடவடிக்கையை

"பூ கட்டுவோர் சங்கம்" மட்டுந்தான் இன்னும் கண்டிக்கல...

சம்யுக்தா ராணி

‏அரசு கேபிள்ல எங்கடா புதிய தலைமுறை  சேனல காணோம் ..!!!

ஷாகுல் புதுவை

எந்தவொரு எதிர்வினை ஆற்றினாலும் ஊடக சுதந்திரத்திற்கு திமுக என்றும் துணை நிற்கும்..

SειναGαηαρατhι  

‏என்னடா இது புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வந்த சோதனை (உங்க மேல கேஸா? )#புதியதலைமுறை சத்தியசோதனை

Karthick Sampath

‏எதிர்த்துப் பேசினாலே வழக்கு என்பது பாசிசம் தானே....பின்ன வேறென்ன இது...

உரிமைகள் இப்படிதான் மறுக்கப்பட்டு பின் பறிக்கப்படும்...

புகழ்

‏புதிய தலைமுறை ஓரளவுக்காவது நடுநிலையாக இருந்திருக்கிறார்களென்பது..கோவையில் நிரூபணமாகியுள்ளதுபோலும்..

கோ. கார்த்திக் பாரதி

‏தனிநபர் கருத்தும் ஊடக கருத்தும் பறிக்கப்படுகிறது!

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளதோ?

நெல்லை அண்ணாச்சி

‏வேலியில போற ஓணான பிடித்து வேட்டிக்குள் விட்ட கதை...

# புதிய தலைமுறை...

J Rofina Subash

‏புதிய தலைமுறை மீது நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தின் முக்கிய அங்கம்

கருத்து சுதந்திரம்

வாழவந்தார்    

‏புதிய தலைமுறை மீதான வழக்கிற்கு புதிய தலைமுறை தவிர மீதி அத்தனைபேரும் கண்டனம் தெரிவிச்சிட்டாங்க

தமிழன்

‏புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தடை விதிக்க விடமாட்டோம் ....

Sengottai S kannan

‏மாற்றுக் கருத்து கொண்டவர்களை மிரட்டும் போக்கு

srinivasan Rangasamy

‏ஊடகம் மீது வழக்கு போடுவது ஜெ. பாணி அரசியல்! அவர்கள் வழி வந்தவர்கள் பின்தொடரத்தான் செய்வார்கள். இது கண்டிக்கத்தக்கது.

Tamil

‏புதிய தலைமுறை மீது வழக்குப் பதிவு - கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்

தரமான மறுகீச்சு

‏நெரிக்கப்படுவது ஊடகத்தின் குரல் அல்ல.. மக்களின் குரல்வளை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in