

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம், திண்டுக்கல் இலக்கியக் களம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் திண்டுக்கல் புத்தகத் திருவிழா டட்லி மேனிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் புத்தகக் காட்சி வரும் அக்டோபர் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்கள் இந்தப் புத்தகக் காட்சியில் தி இந்து ஆங்கில நாளிதழ் அரங்கு (எண்:83), வாசுகி புத்தகச் சாலை (எண்: 97), எஸ் டி அரங்கு (எண் - 113, 114) ஆகிய அரங்குகளில் கிடைக்கும்.
பழனியில் இந்து தமிழ் திசை புத்தகக் காட்சி
பழனி குமுதம் புக் செண்டர், ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகத்துடன் இணைந்து பிரத்யேகமான புத்தகக் காட்சியை நடத்துகிறது. காந்தி சிலை அருகே, பழனி பேருந்து நிலைய வெளி வளாகத்தில் அமைந்துள்ள குமுதம் புக் செண்டரில் இந்தப் புத்தகக் காட்சி வரும் அக்டோபர் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 10 சதவீத தள்ளுபடி விலையில் இந்து தமிழ் திசை பதிப்பகப் புத்தகங்கள் கிடைக்கும். தொடர்புக்கு: 9842843479.