Published : 27 Jun 2018 11:34 AM
Last Updated : 27 Jun 2018 11:34 AM

நெட்டிசன் நோட்ஸ்: அர்ஜெண்டினா வெற்றி -"கோல் அடித்ததில் இல்லை மெஸ்ஸியின் ஆட்டம்..."

நைஜீரியாவுனான வாழ்வா, சாவா  ஆட்டத்தில்   2-1 என்று வீழ்த்திய அர்ஜெண்டினா வெற்றி  நாக் அவுட்  சுற்றில் பிரான்ஸை சந்திக்கிறது. அர்ஜெண்டினாவின் வெற்றிக்கும்  அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் மெஸ்சி, ரோஜோ முக்கிய காரணமாக இருந்தனர். அர்ஜெண்டினவைன் இந்த வெற்றி குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு இருக்கிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

 

#NoMoreMessi'ng

‏அர்ஜெண்டினா பர்ஸ்ட் ஆஃப் விளையாண்டத பாத்தா...

இப்டிபட்ட கேம்ம வச்சுக்கிட்டாடா 2 மேட்ச் மண்ண கவ்வுனுங்கனு தோணிடுச்சு.. கிராதகர்களா

புகழ்

கோல் அடித்ததில் இல்லை மெஸ்ஸியின் ஆட்டம்..அந்தப் பந்தை வாங்கி எடுத்துட்டுப் போனதில்தான் மெஸ்ஸி..க்ளாஸி.

‏பந்தை வாங்கி அடித்தால்..Messi

பந்தை வாங்காமலேயே

அடித்தால்..Rojo

மெஸ்ஸி..

க்ளாஸி.

கரன் கரடி

‏அர்ஜெண்டின போட்ட ரெண்டு கோலுமே செம்ம கோலு

அதுலயும் ரெண்டாவது மிகச்சிறப்பு

Angry Bird

‏போன வருஷம் பைனல்ல தோத்ததும் ரிடைர்ன்மண்ட் அறிவிச்சான் மெஸ்ஸி, இந்த வருசம் மெஸ்ஸியை கெஞ்சி உள்ள கொண்டு வந்தது

அர்ஜென்டினா நிர்வாகம். உலக பணக்காரர்கள் லிஸ்ட்ல மெஸ்ஸி இருப்பான். ஆனா நேத்து ஜெய்க்க வச்சான் பாருங்க அதுதான் பெரும்போதை, வெற்றிக்கு முன்னாடி பணம், மத்ததெல்லாம் சப்பை.

ஊமைத்துரை

‏#மெஸ்ஸி தன் கைபுள்ளைங்களோட ஒரு வழியா வந்து சேர்ந்தார்

வெங்கட் கிருஷ்

‏சும்மா சும்மா எல்லா மேட்ச்சும் மேஜிக் காட்ட முடியாது - மெஸ்ஸி

Leo

‏தோனி 100 அடிச்சாப்ள இருக்கு டைம்லைன்..

புட்பாலின் தோனி மெஸ்ஸி டா  

Randy Satha

‏ரொனால்டோ ஹாட்ரிக்  கோல்.அடிக்கும் போது கூட.டுவிட்டர் அமைதியா இருந்துச்சு... ஒரே கோல்... மாஸ்ஸ்...

தெறி.. மெஸ்ஸி....

Kevin de lukaku     

‏மெஸ்ஸி மேஜிக்     

  

குரு®

மெஸ்சி டா.. மாரடோனா டா.. அர்ஜென்டினா டா..  

ஆனா ஒன்னு டா, இந்த மாதிரி மொக்க டிபென்ஸ் வச்சிக்கிட்டு பைனல் போறது ரொம்ப கஷ்டம் டா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x