நெட்டிசன் நோட்ஸ்: டிக் டிக் டிக் - நல்ல முயற்சி

நெட்டிசன் நோட்ஸ்: டிக் டிக் டிக் - நல்ல முயற்சி
Updated on
2 min read

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாகவும், நிவேதா பெத்துராஜ் நாயகியாகவும் நடித்துள்ள 'டிக்:டிக்:டிக்' இந்த வாரம் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

Karthik

‏படம்னாலும் கதைல ஒரு நியாய தர்மம் வேணாமாடா #TikTikTik

GauthaM

‏#TikTikTik பாத்தாச்சு.. அட்டெம்ப்ட் பாராட்டக்கூடியது..

பிஜிலி ஹிட்லர்

‏இந்த பட்ஜெட்ல வி எப் எக்ஸ் ஹாலிவுட் தரத்துல எடுத்திருக்காங்க

உங்க #டிக்டிக்டிக் படம் பார்த்தேன் நல்ல இருக்கு super

ஒரு hollywood படத்தை தமிழ்ல கொடுக்கும் போது எது எது எவ்வளவு இருக்கணும் அதை கனகச்சிதமாக கொடுத்ததற்கு நன்றி.

நீங்களும் நல்ல நடிச்சி இருக்கீங்க super.

மொத்தத்தில் இந்த படம் ரொம்ப நல்ல இருக்கு super

kumaravel Rajagopal

‏#TikTikTik  பாராட்டுக்கள் நல்ல முயற்சி

Muthu Siva

‏டிக் டிக் டிக்...

இந்த மாதிரி ஒரு நகைச்சுவைப் படம் பாத்து  சிரிச்சி ரொம்ப நாளாச்சி..

ஃப்ரண்ட்ஸோட போங்க.. 100% Entertainment Guaranteed.. !!          

எப்பவுமே தனுஷ் தான்™

‏கிளைமேக்ஸ்ல இந்தியன் கொடி பறக்குது

சில்றைய சிதற விடுவானுங்கன்னு டைரக்டர் நினைச்சி இருப்பார்

ஆனா ஒருத்தன் கூட கை தட்டலன்றது வேற விசயம்    

கிங்மேக்கர் ..♔

‏எதுவுமே நம்புற மாதிரி இல்லங்க...

meenakshisundaram

‏நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் வரிசையில் , ஆசியாவின் முதல் விண்வெளி படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன். காட்சிகள் கண்களுக்கு விருந்து திரைக்கதை விறுவிறு . ரசிக்கலாம்

Viki

‏ ப்ரோ, ஒரு வாரத்துக்குள்ளயே ட்ரைன்-அப் ஆகி ஸ்பேஸ்க்கு போக முடியுமா ???  

Binu kumar

‏ஒரு சில லாஜிக் குறைகள் இருந்தாலும் அருமையான படம்...

வழக்கமான மசாலா குப்பைப் படங்களுக்கு மத்தியில் ஒரு புதுமையான அனுபவம்....

இடையிடையே தேசியமும் பேசுகிறார் இயக்குநர்..

சி.பி.செந்தில்குமார்

‏ஆர்னிகா நாசர் நாவலை ராமநாராயணன் டைரக்ட் பண்ணுன மாதிரி ஒரே லாஜிக் சொதப்பல்கள் ,இடைவேளை.தேறுவது கஷ்டம் #tiktiktik

JOHN GA

‏நிலாவில் கால் வைத்த

முதல் இந்திய விண்வெளி வீரர்.

ஜெயம் ரவி.

Sugandaram

‏ டிக்.டிக்.டிக் திரைப்படம் அருமை. தமிழ் சினிமாவில் புதிய முயற்சி. விண்வெளிக் காட்சிகள் அருமை. புதிய கதைக்களத்தை தேர்வு செய்யும் ஜெயம் ரவி சாருக்கு வாழ்த்துகள்.

HBD Bommai  

‏வித்தியாசமான கதைக்களம். விறுவிறுப்பு கம்மி. அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னுநம்மால யூகிக்க முடியற அளவுக்கு டைம கொடுத்தது தப்பா தெரியுது. ஜெயம் ரவி குடும்பத்தைப்  பத்தி சொல்லவே இல்ல பட். பையன் எப்படின்னு தெரியல. இது தமிழ் சினிமாவுக்கு புது முயற்சி இன்னும் வேகமா கொண்டு போக.

நாத்திகன்

டிக்டிக்டிக் நல்ல அட்டெம்ப்ட் .ஆனா இங்கிலிஷ் படம்ல அதிகம் பாக்காத எனக்கே சில லாஜிக் இடிக்குது இங்க உலகப் பட ஆர்வலர்கள் அதிகம் அவனுங்க சிரிச்சிடுவானுங்கன்னு நினைக்கிறேன்.

மாஸ் ரசிகன்

‏டிக் டிக் டிக் .

.தமிழ் சினிமாக்கு இன்னொரு மைல் கல் ... அச்சு பிசிராம அழகா செதுக்கிறாங்க .. ❤❤ குறிப்பா ஸ்பேஸ் வர்ற சீன்லாம் நம்ம தமிழ் சினிமா நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு அழகா பண்ணிருக்காங்க

Made in செல்லூர்

‏டிக் டிக் டிக் - மூளைய கழட்டி வச்சுட்டு பார்த்தா புடிக்கும்

ரெட்டைசுழி®  

‏வித்தியாசமான முயற்சி. படுபயங்கர லாஜிக் சொதப்பல்.

ஒரு சின்ன செல்போன்லயே மெமரிகார்ட் இருக்கா இல்லையானு ஈஸியா பார்க்க முடியறப்போ, அவ்ளோ முக்கிய ராக்கெட் லாக்கர்ல இருக்கறது வில்லனுக்குத் தெரியலேங்கறது காதுல பூ. நகைச்சுவையே படத்தை தாங்கிப் பிடிக்கிறது. பார்க்கலாம்.

JSK.GOPI

‏டிக் டிக் டிக் அருமையான திரைப்படம்..

விண்வெளி பற்றி படம் எடுத்த இயக்குநரின் இந்த புதுவித முயற்சிக்கு நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

The Rockstar AK™      

‏லாஜிக் மீறல் தான் கடைசி வர படத்தோட ஒட்டவே விடல.. எதிரி ஆர்மி space ship க்குள்ள போவானுக ஒரு ப்ளாக்ல.. அதெல்லாம் கொடூரமா மொழம் மொழமா பூ சுத்திருப்பானுக காதுல..   ஆரம்பத்துல இருந்து எதையாச்சும் நம்பறாப்ல காட்டினீங்களான்னு இருக்கும்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in