

பெரியவர்களுக்கு தற்பொழுது வீட்டில் உரிய மரியாதை கிடைப்பதில்லை. நகர்புறத்தில் சில குடும்பங்களில் முதியவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இது இலை மறை காய் மறையாக பல குடும்பங்களில் நடந்து வருகிறது. ஆனால் கிராமத்தில் இன்னமும் பெரியவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.
முதியவர்களின் அதிகமான இளைஞர்களிடமிருந்து எதிர்பார்ப்பும், இளைய தலைமுறையினரின் படிப்பறிவும், பணப்புழக்கமுமே தலைமுறை இடைவெளிக்கு காரணமாகிறது. இதைத் தவிர வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள இளைய சமுதாயத்தினரின் வறுமை காரணம், மது மற்றும் போதை பொருட்கள் போன்றவற்றாலும் முதியோரை மதிக்காத ஒருநிலை ஏற்பட காரணமாகிறது. முதியோர் அவமதிப்பு என்பது வயதானவர்களுக்கு ஊறு அல்லது மன இறுக்கத்தை ஏற்படுத்தும் செயலாகும். உதாரணம்:
அவமதிப்புகள் பலவிதம்
முதுமையில் யார் எல்லாம் அவமதிக்கப்படுகிறார்கள்?
முதியவர்கள் யாரால் அவமதிக்கப்படுகிறார்கள்?
என்ன தான் தீர்வு?
எல்லா பள்ளி மாணவ - மாணவியர்கள் "முதியோர் அவமதித்தலை’ எதிர்த்து ஜூன் 15-ம் தேதி உறுதிமொழியை எடுத்துக் கொள்ளலாம். உறுதிமொழியை வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது. ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி அனைத்து பள்ளி மாணவ - மாணவியர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறுதிமொழியை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
‘ஹெல்பேஜ் இந்தியா’ எனும் தொண்டு நிறுவனம் 2014 லில் நடத்திய கணக்கெடுப்பில் சுமார் 32 சதவீத முதியவர்கள் இளைய சமுதாயத்தினரால் அவமதிக்கப்படுகிறார்கள் அல்லது தக்க மரியாதை இல்லாமல் நடத்தப்படுகிறார்கள். இதைவிட இன்னமும் அதிர்ச்சி ஊட்டும் செய்தி, 56 சதவீத முதியவர்கள் தனது மகன்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள் மற்றும் 23 சதவீத முதியவர்கள் தனது மருமகள்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
ஏதோ ஒரு வீட்டில் வயதானவர்களை சரியாக கவனிப்பதில்லை அல்லது புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று எண்ணிவிடக்கூடாது. அது போலவே நம் வீட்டில் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம். ஆகையால் இது ஒரு வீட்டுப் பிரச்சனையாக யாரும் எண்ணக்கூடாது. இதுவே விரைவில் ஒரு சமுதாயப் பிரச்சினையாக உருவெடுத்தாலும் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. முதியோர்களை மதிப்போம். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வோம். அவர்கள் நிம்மதியாக, கௌரவமாக வாழ எல்லோரும் துணை போவோம்.
இளைய சமுதாயத்தினர் இடமிருந்து முதியோரை மதிக்கும் பணியை ஒரு சில வாரங்களிலோ அல்லது மாதங்களிலோ மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. மேற்கண்ட வழிமுறைகளை தொடர்ந்து பல ஆண்டுகள் கடைப்பிடிப்பதினால் வருங்கால சமுதாயம் ‘முதியோரை மதிக்கும்’ சமுதாயமாக மாறும் என்பது நிச்சயம்!
உறுதிமொழி: ‘முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்து வகை கொடுமைகளையும் - இவை வாய்மொழியாகவோ. வன்முறை மூலமாகவோ, பொருளாதார ரீதியாகவோ - எந்த உருவில் வந்தாலும் - அவற்றைக் களைவதற்காக - முளையிலேயே கண்டுபிடித்துத் தலையிட்டுத் தடுக்கவும், அறவே நீக்கவும், என் சொந்த முயற்சியாலும், தேவைப்பட்டால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணையோடும் பாடுபடுவேன்.
மேலும், அவர்களுடைய அனைத்து வகையான தேவைகளுக்கும் - அதாவது உடல் வளத்துக்கும், பாதுகாப்புக்கும், அன்பு மற்றும் மனவளத்துக்கும், மதிப்பிற்கும், மரியாதைக்கும், உரிய அங்கீகாரத்துக்கும் இடையூறு ஏற்பட்டால் அவற்றைத் தடுத்து பாதுகாப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.’
- பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன், முதியோர் நல மருத்துவர், சென்னை