Published : 24 May 2018 09:36 AM
Last Updated : 24 May 2018 09:36 AM

விளையாடவந்த எந்திரபூதம்

ஒரு வார்த்தைக்கு ஒரு குண்டு

இரண்டு வார்த்தைக்கு இரண்டு குண்டு

மூன்று வார்த்தைக்கு மூன்று குண்டு

அதற்கு இது

இதற்கு அது

நாம் பரிமாறிக்கொள்வோம்

உன் மாமிசம்

என் பசிக்கு

கணக்கு சரிதானே?

நீ வார்த்தையைக் கொண்டு வா

நான் குண்டைக் கொண்டு வருகிறேன்

நீ வாயைத் திறவேன்

நான் வாய்க்குள் சுடுவேன்

நீ சாகேன்

நான் கொல்வேன்

நான் கொல்லக் கொல்ல

நீ சாகச் சாக

வாயேன்

நாம் விளையாடுவோம்

எனக்கு அசிங்கமான முகம்தான்

ஆனால் ஆவலோடு விளையாடுவேன்

எங்கே ஓடுகிறாய், வாயைக் காட்டு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x