நெட்டிசன் நோட்ஸ்: முழு அடைப்பு - ஆளும் கட்சியை திணறடிக்கும் மாஸ் போராட்டம்

நெட்டிசன் நோட்ஸ்: முழு அடைப்பு - ஆளும் கட்சியை திணறடிக்கும் மாஸ் போராட்டம்
Updated on
2 min read

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தமிழகத்தில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியினர் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுகுறித்து தங்கள் கருத்தை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

சுபாஷினி 

ஆளுங்கட்சியை ஆட்டம் காண வைத்த போராட்டம்.   சாமானிய மக்கள் கூட வீதிகளில் இறங்கியதும், தாமாகவே உணர்ந்து கடைகளை அடைத்ததும் தான் இந்த போராட்டத்தின் மாபேரும் வெற்றி #TNBandh

R@SCal™

‏இன்னைக்கி நடந்துட்டு இருக்க அனைத்து கட்சி போராட்டம் உண்மையாவே மாஸ்...

இந்த அளவுக்கு எதிர்பாக்கல...

கௌதம்ராம்

‏உண்ணாவிரதம் இருந்து பிஜேபி எதிர்த்துஒரு வார்த்தை கூட

பேசாத அதிமுக விட  ஸ்டாலின் சிறந்தவர் தான்

RM Lokeshwaran

‏காவிரி விவசாயிகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இன்றைய போராட்டம் அமைத்து இருக்கும் கட்சிகளுக்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மட்டுமே  தீர்வை நோக்கிய நகர்வு அல்ல, இது அரசியல் நலன். தீர்வு எளிதில் வரவைக்க முடியும் ஆனால் வோட்டுக்காக அதை செய்ய மாட்டார்கள்.

Suresh Dhanasekar

‏ஸ்டாலின் இம்முறை காய்களை கச்சிதமாக நகர்த்துகிறார் என்றே தோன்றுகிறது...

Senthil

‏காவிரியில் வெள்ளம் கண்டதுண்டு காவிரிக்காக வெள்ளம் கண்டதுண்டா

குழந்தை அருண்

‏ஆனா எதிர்கட்சிகள் நடத்துற 'பந்த்'துக்கு 90% கடையெல்லாம் அடைச்சி ஆதரவு தருவது பெரிய விஷயம்தான்.

மக்களும் ஒரு வகையில் சப்போர்ட் பண்றாங்க.

கெத்துதான்

Ramya Leela

என்னங்கடா இங்க இருந்த அண்ணாசாலைய காணோம்

Marina  

‏ஆளுங்கட்சியை திணறடிக்கும் திமுக+ போராட்டம்

svenkadesh

‏தமிழகம் ஒன்றாக தனது எதிர்ப்பை பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

Sakthivel

‏தமிழ்நாடு எப்போதும் அமைதியானது... ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது நினைவில் வைக்க வேண்டும் மத்திய அரசு...

விஜய் ராஜசேகர்

‏நீண்ட காலத்திற்கு பிறகு திமுக தொண்டர்களிடையே உத்வேகத்துடன் கூடிய   அந்த பழைய போராட்ட குணத்தை பார்க்கமுடிகிறது..!

சிவராம்

‏இந்த மாதிரி ஒரு போரட்டத்த தான் திமுககிட்டேந்து மக்கள் எதிர்பார்த்தது...

ரொம்ப நாளா தமிழ்நாட்ல நடக்குற பிரச்சினைகளை அறிக்கை விட்டு ஒண்ணும் தீர்க்க முடியாது.. இப்படி பண்ணாதான் எறங்கி வருவானுங்க

ட்விட்டர்காரன்

‏போராட்டம்  நீர்த்து போகமால் இருக்க . யாருமே யோசிக்கா வண்ணம் அதிரடியாக  திரு ஸ்டாலின், முக்கொம்பில் இருந்து கடலூர் வரை  காவிரி மீட்பு நடைபயணம் என அறிவித்தது என்பது  தாராளமாக ஒரு மாஸ்டர் stroke எனலாம் !     

ஆல்தோட்டபூபதி

‏April 3 < April 5

அதிமுக உண்ணாவிரதம் < திமுக போராட்டம்

பசி

‏மெரினாவில் மிக சிறப்பான களத்தை அமைத்து தந்திருக்கிறது திமுக ஒன்றுபடுவோம். போராடுவோம்

Arunkumar Dhanaraj

‏கெத்து என்பது யாதெனில்! #திமுக

பார்திபன் சமர்

நீங்க மாஸ்தான் ஸ்டாலின் சார்..ஆனா, இது போதாது.. இன்னும் எதிர்பாக்குறோம்..

ஜெரி

திமுக.விற்கு ஆதிகாலம் என்பது இந்தி எதிர்ப்பு போராட்ட காலமே. அன்றைய காலகட்டத்திற்கு திமுக திரும்பியிருப்பது மகிழ்ச்சியே.

முத்து

‏பேரணி!

ஸ்டாலின் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு  அனைவரையும் #திமுக பக்கம் திரும்பி பார்க்கவைத்ததற்க்கு வாழ்த்துக்கள்

வா.மணிகண்டன்

எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டிருக்கிறார்கள். தமிழக அரசு திணறுகிறது. வசூல் ராஜாக்களாக இருப்பது மட்டுமே ஆட்சியில்லை; சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கத் தெரிய வேண்டும். மெரீனாவுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதைக் கூட கணிக்காமல் உளவுத்துறை கோட்டை விட்டிருக்கிறது. தமிழக, மத்திய அரசுக்கு எதிராக பெரும் அணி திரட்டல் நிகழ்ந்திருக்கும் இந்தப் போராட்டத்தைப் பொறுத்தவரைக்கும் ஸ்டாலினின் மூவ் சரியானதாக அமைந்திருக்கிறது. அவர் டி.டி.வியை இப்போதைக்கு ஓரம் கட்டியிருக்கிறார். ஆனால் ஒன்று - இந்திய அளவிலான எந்த செய்திச் சேனலிலும் தமிழகத்தின் போராட்டங்கள் குறித்து இதுவரையிலும் எந்தத் தகவலுமில்லை.

அருள் எழிலன்

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் இயல்புவாழ்க்கை முழுமையாக சீர்குலைந்துள்ளது. திமுக போராட்டத்தை ஒடுக்கப் போய் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in