

ஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு பின் இணையத்தில் டிரெண்டாகி அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த பிரியா பிரஷாஷ் வாரியர்.
வெளிபாடிண்டே புஸ்தகம் ('Velipadinte Pusthakam') படத்தில் இடம்பெற்றிருந்த ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு, கேரளாவைச் சேர்ந்த இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆடிய நடனம் டிரெண்டாகி 2017-ம் ஆண்டில் யூடியூப்பில் பெறும் வரவேற்பு பெற்றது.
அதில் நடனம் ஆடிய ஷெரில் என்ற பெண் அதன் பின்னர் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்தன.
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மீண்டும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி இருக்கிறார். ’ஒரு அதார் லவ்’ என்ற படத்தில் இடபெற்றுள்ள மானிக்க மலராயா பூவி என்ற பாடலில் நடித்துள்ள பிரியா பிரஷாஷ் என்ற நடிகை அவரது குறும்புத்தனமான முகபாவனைகள் மூலம் இணையத்தில் டிரெண்டாகி இருக்கிறார்.
இதன் காரணமாக அப்பாடல் யூ டியூப்பில் 40 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நெட்டிசன்கள் பலர் அந்தப் பாடலில் இடப்பெற்றுள்ள அவரது முகபாவனனைகளை புகைப்படமாக பதிவிட்டு வருகின்றன. மேலும் இதுகுறித்து நகைச்சுவையான மீம்ஸ்களும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். இதோ அவற்றின் தொகுப்பு..