

இந்து தமிழ் திசை வெளியீடான ‘என்றும் தமிழர் தலைவர்’ நூலைத் திராவிடப் பள்ளி மாணவர்கள் இணைய வழிக் கூட்டத்தில் (Zoom Meeting) திறனாய்வு செய்கிறார்கள். திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி நிறைவுரையாற்றுகிறார். இன்று (17.03.2024) மாலை 4 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இணைய வழிக் கூட்டதின் சுட்டி: https://us02web.zoom.us/j/85327377145?pwd=VmhDNjd1YWlpMTNFeUkweTB3R3lzZz09. ஸூம் மீட்டிங் ஐடி: 853 2737 7145. பாஸ்வேர்டு: 123456
பால்வண்ணம் இலக்கிய விருது
இலக்கிய வாசகரும் புத்தகக் கொடையாளருமான பால்வண்ணம் பெயரில் இந்தாண்டு முதல் இலக்கிய விருது வழங்கப்படவுள்ளது. 2023இல் வெளிவந்த மூன்று சிறந்த சிறுகதைத் தொகுப்புகளுக்குத் தலா ரூ.10,000 விருதுத் தொகையாக அளிக்கப்படும். திருநெல்வேலியில் இந்தாண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள விழாவில் விருது அளிக்கப்படவுள்ளது. 2023இல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகள் விருதுப் பரிசீலனைக்கு வரவேற்கப்படுகின்றன. ஏப்ரல் 10க்குள் சிறுகதைத் தொகுப்புகள் இரண்டு பிரதிகள், அனுப்ப வேண்டிய முகவரி: நாறும்பூநாதன், 747ஏ, 28ஆவது தெரு, சாந்தி நகர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627002. தொலைபேசி: 96294 87873.