Last Updated : 03 Feb, 2018 03:08 PM

 

Published : 03 Feb 2018 03:08 PM
Last Updated : 03 Feb 2018 03:08 PM

நெட்டிசன் நோட்ஸ்: யு-19 உலகக் கோப்பை; இந்திய அணிக்கும், இந்தியப் பெருஞ்சுவருக்கும் வாழ்த்துகள்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு நெட்டிசன்  நோட்ஸில்....

பொறியாளர் கண்ணன்  

‏வாழ்த்துக்கள் இளம் இந்திய அணிக்கும், இந்தியப் பெருஞ்சுவருக்கும் (டிராவிட்)  

சாட் பூட் த்ரீ

டன்டனக்கா ஏ டனக்கு னக்கா   

U -19 அதிகமுறை சாம்பியன் என்ற சாதனை புரிந்தது ட்ராவிட் படை     

வம்பு 2.0

‏கங்காரு அணியை

பிரியாணி செய்தது

இந்திய அணி!

பட்டாசு

‏வயதிற்குரிய வேகமும், வயதை மீறிய நிதானமும் கொண்டதாக இந்தியஅணி வல்லமையுடன் கோப்பையை வெல்கிறது.    

தாந்தோனி

‏ட்ராவிட் சக்தே இந்தியா மொமண்ட்... அவர் விளையாண்டப்ப கப் வாங்க முடியுல...ஆனா அவர் தயார் பண்ற டீம் கப் வாங்குது...  

 

 

திருட்டுகுமரன்

‏'இந்த சுவர் இன்னும் எத்தன டீம காவு வாங்க போகுதோ'  #RahulDravid

தீக்குச்சி

‏சுவரு சுவர்தான் டா. #U19CWC

நைனா 

‏காலைல மேட்ச் பார்க்கும் போது என்னாங்கடா ஆஸ்திரேலிய U19ல பேட்டிங் பன்றவன் பூராபயலும் பாண்டிங், கிளார்க் மாதிரி ஆடுரானேன்னு பார்த்தா இப்ப நம்ப பசங்க சச்சின் கங்குலி போல பயமே இல்லாம ஆடி அசத்திட்டானுக   #U19worldchampionIndia

 

Sa.Na. Kannan

‏மன்ஜோத் கல்ராவின் பேட்டிங்கில் கங்குலியின் வசீகரம் தென்படுகிறது. அதிரடியாகவும் ஆட வருகிறது. வருங்காலத்தில் ஷிகர் தவனின் இடத்தைப் பிடிக்க அவருடைய ஊரிலிருந்தே ஒருவர் தயாராகி வருகிறார்

 

Viki

‏டீம் ஜெய்க்கும் போது கோச்சர்க்கு க்ரெடிட் கிடைக்குறது, கேரி கிரிஸ்டன்'க்கு அப்புறம் ட்ராவிட்க்கு தான் நடக்குது   

நாதஸ்

‏இந்த வெற்றி இந்தியப் பெருஞ்சுவர் டிராவிட்டின் உழைப்பிற்குக் கிடைத்த ஊதியம்

அஜய்

‏Champions Trophy கோட்ட விட்டோம்.. பசங்க புடிச்சுட்டாங்க.. அடுத்த 2019 world Cup தட்டி தூக்கணும்  

Sharjil

‏திராவிட் நினைத்ததை சாதித்தார் #INDvAUS #U19CWC #U19CWCFinal

Nino

‏அண்டர் 19 ஜெயிச்சாச்சு, நம்ம அடுத்த டார்கட் 2019.. ஜெய் ஹோ. #CWCU19 #INDvAUS

Arun Virat‏

ஸ்ட்ரைக் ரேட் 99 வச்சி பைனல்ல செஞ்சூரி அடிக்கிறதெல்லாம் வேற லெவல்     

Rascal Talks™

‏இன்னைக்கு ட்ராவிட்ட பாக்கும் போது .. இறுதி சுற்று மேடி ,

டங்கல் அமிர் கான் ,

சுல்தான் சல்மான் கான் எல்லாம் என் கண்ணு முன்னாள வந்து போரானுங்க , ஏன்னு தெர்ல   

ganesan_anb

‏Rahul Dravid ஒரு நல்ல மனுஷன். நல்ல கிரிக்கெட்டர். இளம் தலைமுறையை மிகச் சரியாக வழிநடத்தும் நல்ல பயிற்சியாளரும் கூட.

 

 

Dr.Rockstar AK™      

‏Rahul Dravid... சென்ற இடமெல்லாம் சிறப்ப்ப்ப்பு... :)

புலி

‏இந்தியப்பெருஞ்சுவர் #டிராவிட் தலைமையிலான

u19 இந்திய அணி

ஆஸ்திரேலிய அணியை அலேக்காக அசால்ட் செய்து

தோல்வியே காணாமல்

கோப்பையை 4 ஆவது முறையாக வென்று சரித்திரம் படைத்தது

சூப்பர்ஸ்டார் ரசிகன்      

‏இந்திய இளையோர் கிரிக்கெட் அணி வெற்றிக்கு வாழ்த்துக்கள்  

இந்தியாவே கொண்டாடுகிறது. வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிகின்றன. ஏன் மற்ற விளையாட்டுகளை இதைப்போல் நாம் அங்கீகரிப்பதில்லை. ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை கூலி தொழிலாளியாகவே இன்னும் வாழ்கிறார்.

Vinoth

‏செடி முளைக்காததற்கு விதை தூங்குகிறது என்று ஆர்த்தம் இல்லை: அது தன்னை தயார் செய்துகொண்டிருக்கிறது என்று பொருள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x