Published : 24 Feb 2018 03:16 PM
Last Updated : 24 Feb 2018 03:16 PM

நெட்டிசன் நோட்ஸ்: ஜெயலலிதா சிலை - இதிலும் மர்மமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட்டது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன்  நோட்ஸில்...

Karthikeyan‏

அட போங்கப்பா.. ஜெயலலிதா சிலைய வையுங்கடான்னா காந்திமதி சிலையை வச்சிருக்கானுங்க.. #Jayalalithaa

நெல்சன் சேவியர்

காந்திமதியை அவமானப்படுத்த வேண்டாமே பிரண்ட்ஸ் !

தமிழன்டா

‏ஜெயலலிதா சிலைய செய்ங்கடானா, ஏதோ தாய் கெழவிய கூட்டிட்டு வந்து இதுதான் ஜெயலலிதா னு ஏமாத்துறானுக

Emman (SK fan)

‏இது ஜெயாவா..

கார் டயரையும் ஹெலிகாப்டரையும் கும்பிட வச்சதுக்கு பலி தீர்த்துட்டாய்ங்க..

அடேய்.. அந்த அம்மா மட்டும் உயிரோட இருந்து இதை பார்த்திருந்தா உங்களையெல்லாம் கார் டயர் முன்னாடி உருட்டி விட்டு வண்டியை ஏத்திருக்கும்டா.. ;)

A1 ஆகிய நான்

‏#ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 1500 கைதிகள் விடுதலை.

#இந்தியாவிலே ஏன் #வோல்ட் லேயே ஒரு குற்றவாளி க்காக கைதிகளை விடுவித்தது நம்ம ஆட்சியில் தான்.

ஒருவன்

‏இது #ஜெயலலிதா மூஞ்சா இல்ல #சசிகலா மூஞ்சாடா

Bairawi   

‏சொல்றதுக்கு ஒன்றுமில்லை #ஜெயலலிதாசிலை

 

பாபு சீனிவாசன்

‏உங்களின் துணிச்சல், வீரம், ஆளுமை இனி தமிழகத்தில் யாருக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. #Jayalalithaa

 

Siraj

‏ஆயிரம் விமர்சனம் இருந்தாலும்

#ஜெயலலிதா அரசாங்கம்

தனித்தன்மை பெற்றது தான்

யாருக்கும் பயப்படாமல் தனக்கு

சரி என்று பட்டதை துணிந்து

செய்யும் அந்த குணம்

Dinesh Kumar

‏OPS-EPS திறந்து வைத்துள்ள சிலையில் உள்ள முகவடிவத்திற்கும் ஜெயலலிதாவின் முகவடிவத்திற்கும் சம்பந்தமே இல்லை!

மோடி தாயின் முகவடிவம் போல் உள்ளது.

Rj CastroRahul

‏ஜெயலலிதா சிலையை பார்த்தா  வளர்மதிக்கு சிலை திறந்து வைச்சமாதிரி இருக்கு   

SK_Kamal

‏என்னங்கடா அம்மா மூஞ்சையே மாத்திட்டிங்க  நெத்தியில எழுதி ஒட்டுங்கடா "ஜெயலலிதா" அம்மாதான்னு.

என் மனச்சாரல்     

‏127 திரைப்படங்களில்  நடித்து புகழ் பெற்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் சட்டமன்ற முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்தல் மூலமாக வெற்றியடைந்த முதல் பெண் முதல்வராகவும் திகழ்ந்ததோடு 5 முறை தமிழக முதல்வராக பதவியேற்ற செல்வி J #Jayalalithaa

αθλητής

‏சாவுலதான் மர்மம்னானுங்க இப்ப சிலைலயுமாடா

k

‏இதுவரை நடைபெற்ற சிலை ஆராய்ச்சியில்

தேவரயா

நிர்மலா பெரியசாமி

வளர்மதி

என்று கீச்சகர்கள் பதிவு செய்துள்ளனர்

 

 

புதுமனை பூச்சாண்டி

‏இவனுங்க அப்பல்லோவில் மட்டும் அல்ல ஆட்சியில் இருந்த போதும் ஜெயலலிதா முகத்தை பார்க்கவில்லை என்பதற்கு இந்த சிலையே சாட்சி.

ஆல்தோட்டபூபதி

‏முகத்தை பார்த்து வளர்ந்திருந்தா ஒழுங்கா செஞ்சிருப்பாய்ங்க. இவங்க, கடைசி வரை காலை பார்த்துள்ள வாழ்ந்தாய்ங்க :-/

Sais Lakshmanan

எந்த ஆங்கிள்ல பாத்தாலும் இது ஜெயலலிதா மாதிரி தெரியலையே

 

Umamaheshvaran Panneerselvam

மன்சூர் அலிகானை முன்மாதிரியாக வைத்து சிலைவடித்து அதை ஜெயா சிலை என்று சொல்ல ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும்.

அது தமிழக அரசிடம் நிறையவே இருக்கிறது.

இளஞ்சூரியன்

‏நீங்க மக்களுக்கு தான் நல்லது எதுவும் செய்வதில்லை, உங்களால் உங்கள் தலைவியின் சிலையை கூட அவர் மாதிரி வைக்க முடியாது?!

பாவம் #ஜெயலலிதா

 

 

muralikrishnan chinnadurai

எடப்பாடி பழனிச்சாமி பாட்டிக்கு அஇஅதிமுக சார்பில் சிலை வச்சிருக்காங்க!

சுவாமிநாதன் பாரதி

குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு சிலை வைத்து எதிர்காலத்தில் சிக்கலில் சிக்கி விடக் கூடாது என ஏதோ ஒரு உருவத்தை செதுக்கி ஜெயலலிதா என்கிறார்கள் என நினைக்கிறேன்.

அதை செஞ்சவனுக்கும் வாழும் கைவினை பொக்கிஷம்ந்னு கையோட விருது கொடுத்துருக்க. அம்மா பக்கத்துலயே விடாததால பிள்ளைங்களுக்கு பாவம் அடையாளம் தெரியல போல!

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x