

பிப்ரவரி காதலர் தினத்தையொட்டி நெட்டிசன்கள் தங்கள் கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றைப் பற்றிய தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸீல்...
ப்ரீத்தி ஜெயராமன்
குறும்பார்வை வேண்டும்
குறுஞ்செய்தி அல்ல
கைப்பேசி வீசி நாம்
கை வீசிச் செல்வோம்
தூரத்துக் காதல் என் கோப்பைத் தேநீர் அல்ல...
மின்முத்தம் ஏதும் உன் மெய்முத்தம் போலே அல்ல
நேரில் நீ நிற்பாயா
என் ஆசை எல்லாம் கேட்பாயா?
என் கை கோப்பாயா?
குறும்பார்வை வேண்டும் உன் குறுஞ்செய்தி அல்ல...
கைப்பேசி வீசி நாம் கைவீசிச் செல்ல”
திவ்ய பாரதி
எங்கெங்கு சுற்றி பறந்தாலும் இறுதியில் இளைப்பாற உன்னை தேடி வந்து விடுவேன்...!
அவ்வளவு தான் நாமிருவரும்...!
செல்லப்பா நம்பி
முதல் காதல் முறிந்தபோது நொறுங்கிப்போனான்
அடுத்த காதல் முறிவு அதிர்ச்சி தந்தது
அடுத்தடுத்த காதல் முறிவுகள் ஆசுவாசப்படுத்தின
இப்போதெல்லாம் சுவாசிப்பது போல்
இயல்பாகக் காதலிக்க முடிகிறது.
துஷ்யந்தன்
எதையுமே தேடும் போதுதான் ஆர்வம், சந்தோஷம் அதிகமாக இருக்கும்..... கிடைத்தபின் ஆர்வம் குறைந்து விடும். #single ஆக இருப்பதுதான் சுகமே.
Muralikrishnan Chinnadurai
சொல்லாத காதல்களும் சுகம் தான்...
RìojeevA
இருக்குறவனுக்கு சாதாரண நாளும்
#ValentinesDay தான்
இல்லாதவனுக்கு #ValentinesDay கூட
இன்னொரு சாதாரண நாளே...
சேதுபதி
ஆதலால் காதல் செய்வீர்...
பிகிலு
உக்கிரமான கனவு போல் பலர் வாழ்க்கையில் வந்து போகிறது காதல்... #HappyValentinesDay #ValentinesDay
ரமேஷ் ஆர்
காதல்
நறுமண மலர்களையும்
நறுக்கென்ற முட்களையும்
கொண்ட வாழ்வில்
சட்டென வந்த மின்னல்
காதல்.
புத்தன்
இந்த #ValentinesDay வை வெறும் Wednesday வாக கடப்பவர்கள் ஆர்டி செய்யவும்.
மெத்த வீட்டான்
காதலை சொல்ல பயப்படுறவங்க பயப்படாமல் காதலை சொல்வதற்காக டெவலப் பண்ணி கொண்டு வந்ததுதான் காதலர் தினம் !
விடியலைதேடி
என்னவளே நாம் சந்திக்கும் ஒவ்வொரு தினமும் காதலர் தினமே.
ஜானகிராமன்
இந்தக் காதல் கவிஞர்கள் எல்லோரும்,
கல்யாணம் ஆனவுடன் காலி டப்பா ஆகி விடுவார்கள்.
லதா கார்த்திகேசு
காதலை பார்த்து பயமில்லை
காதல் தரும் வலிகளை எண்ணியே பயம்
ஜிம்பலக்கடி பம்பா
துனைவியார்க்கு இன்னைக்கி என்ன கிப்டு வாங்கி குடுக்கலாம்?? அதான் என்னையே கிப்டா குடுத்திட்டேனே இதுக்கு மேலயா ஒரு கிப்ட்?
அசால்ட் Ledger
காதலர்கள் தினத்துல கையில அதிகமா காசு இருந்தா எதும் ஆனாதையா , பசிபட்டினியோட இருக்குறவங்ளுக்கு உதவி செய்துவாழ்வோமாக...
நிழலைநேசித்தவன்
வருடம்தோறும் வரும் துக்கமான நாள் இது சிங்கில்சுக்கு #காதலர்தினம்