Published : 07 Feb 2018 04:12 PM
Last Updated : 07 Feb 2018 04:12 PM

நெட்டிசன் நோட்ஸ்: தர்மயுத்தம் 1.0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை தமிழகத்தில் மீட்டெடுக்கும்வரை எங்களது தர்மயுத்தம் தொடரும் என்று  ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக கடந்த வருடம் இதே நாளில் போர்க் கொடி உயர்த்தினார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக கட்சி இரு அணிகளாக பிரிந்தது. அதன் பிறகு பல்வேறு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணி எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்தது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஓ. பன்னீர் செல்வம் தர்மயுத்தம் அறிவித்து ஒரு ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Bharath Manogaran

#தர்மயுத்தம் நடந்த தினம் இன்று,

இவர் செய்ததில் ஒரே நன்மை சசிகலாவை ஒரு நாள் கூட முதல்வர் நாற்காளியில் உட்காரவிடாததுதான்.

 

 

Quality Sankar

#தர்மயுத்தம் எனும் நாடகம் முதலாம் ஆண்டு நிறைவு நாளையொட்டி.

தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைகிறார் .

சிவாஜி கமல் போன்ற நடிகர்களை பின்னுக்கு தள்ளி சிறந்தமுறையில் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர்.

Rajini Kanth Arupathy

வருஷம் ஒடுவதே

தெரியவில்லை

#தர்மயுத்தம்

Karuvai G Sathishkumar

#தர்மயுத்தம் முதலாம் ஆண்டு நிறைவு நாள்

அரசு சார்பில் ஏதாவது விழா ஏற்பாடு உண்டா ?...

 

 

தளபதி படிக்காசு

#பேச்சிமுத்து பேச்சு மூச்சு இல்லாம இருந்த தினம் இன்று

#தர்மயுத்தம் 1.0

Yabes S

#நெடுவாசலை மறக்கடிக்க #தர்மயுத்தம் நடைபெற்ற நாட்கள் இவை...

Arul Ramasamy

‏#உத்தமனா வாழ்வதைவிட உத்தமனா நடிப்பது எம்புட்டு கஷ்டம் என்பது நடிச்சவருக்குத்தான்யா தெரியும்

புலி  

‏சூது வாழ்வு தனை!

தர்மயுத்தம்  ‍கவ்விய தினம்!

முறுக்கோடைக்காரன்

‏குடும்ப ஆட்சிய அகற்ற தர்மயுத்தம் நடத்திய நாள் இன்று.

வேலை இல்லாதவன்

‏தர்மயுத்தம் துவங்கிய தினம்........

யுத்தத்தில் அழுது வென்ற ஒரே ஆண்மகன்....

என்னா நடிப்பு....#தர்மயுத்தம்

கர்வம் கொண்ட தமிழன்

‏இலவசங்களுக்காக அலைகின்ற மக்கள் இருக்கும் வரை பல "தர்ம யுத்தங்கள்" நடைபெறும்.

மக்கள் திருந்தாமல் அரசியல் மாற்றம் நிகழாது!

Kirubakaran Srinivas

‏பன்னீரின் #தர்மயுத்தம் தொடங்கிய நாள் இன்று !

முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

Vignesh Masilamani

‏இன்ஸ்பெக்டர் ஏட்டான நாள்

Senthil guru

‏தியானம் செய்வதால் கிடைக்கும் பலன்களை தமிழகம் கண்கூடாக கண்ட தினம் இன்று!!!

எனவே தியானம் செய்யவும்.

தமிழரசன்

‏ சதி முறியடிக்கப்பட்ட நாள் இன்று!!!

வேல்ஜெயராம் (வேல்முருகன் )

‏ இன்னைக்கு தான் அது தமிழக #ப்ரேக்கிங்நீயூஸ் நாயகன் நடிகர் திலகம் #OPS சமாதிக்கு போன தினம்

ராஜா.க (Raja K.S)

‏ தர்ம யுத்தம் செய்து

துணை முதல்வர் பதவியை வென்ற

ஒப்பற்ற தலைவர்

ஒபிஸ் !!!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x