Published : 17 Jan 2024 04:14 PM
Last Updated : 17 Jan 2024 04:14 PM

இயற்கை சீற்றம் முதல் புதிய பதவியேற்பு வரை: உலகின் முக்கிய நிகழ்வுகள் 2023

இயற்கைச் சீற்றம்:

# பிப்ரவரி 6 அன்று துருக்கி, சிரியாவில் 7.8 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாயினர்.
# மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
# ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் இடிபாடு களில் சிக்கி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
# நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 157 பேர் உயிரிழந்தனர்.

முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி

# குனா நாணயத்துக்கு மாற்றாக யூரோவை ஏற்ற குரேஷியா, யூரோ மண்டலத்தின் 20ஆவது உறுப்பினராக இணைந்தது.
# ஈக்வடார், ஜப்பான், மால்டா, மொசாம்பிக், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC)-இல் இணைந்தன.
# கோவிட் காலத்துக்குப் பின் சீனா தனது எல்லைகளைத் திறந்து பயணக் கட்டுப்பாடுகளை முற்றிலும் தளர்த்தியது.
# சியர்ரா லியோனில் பாலின சமத்துவ சட்டம் நிறைவேறியது.
# கோவிட் நெருக்கடிநிலை முடிவுற்றதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

பிப்ரவரி

# பிரிட்டன் பணவீக்கம் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது
# வனாட்டு நாட்டில் எரிமலை வெடித்தது.
# சீனாவினால் பறக்கவிடப்பட்ட உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
# பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத் துக்கும் இடையே பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வணிக ஏற்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.

மார்ச்

# அமைதிக்கான நோபல் பரிசை வென்ற அலெக்ஸ் பியாலியாட்ஸ்கிக்கு எதிராக கள்ளக்கடத்தல், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் சக்திகளுக்கு நிதி உதவி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஏப்ரல்

# 2016இல் பாலியல் பட நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில், அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜரான அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கைதாகி, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
# நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைந்தது.
# தைவான் அருகே விமானம் தாங்கிக் கப்பலை நிறுவியது சீனா.
# ஆப்கனுக்கான ஐநா குழுவைச் சேர்ந்த 400 பெண்களுக்குத் தாலிபான் தடை விதித்தது.
# உக்ரைன் உடனான போரில் பாக்முக்தா நதியை ரஷ்யா கைப்பற்றியது.
# 20 க்கும் மேற்பட்ட ஜெர்மானியத் தூதர்களை ரஷ்யா வெளியேற்றியது.
# பிரிட்டனில் சட்டவிரோத குடியேற்ற மசோதா நிறைவேற்றப்பட்டது.

மே

# ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைக் கொல்லும் நோக்கத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்தது.
# கோவிட்-19இன் உலக சுகாதார நெருக்கடி என்னும் நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
# அமெரிக்காவும் தென் கொரியாவும் வாஷிங்டன் பிரகடனத்தில் கையெழுத்திட்டன. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இது.
# நேட்டோ சைபர் பாதுகாப்பு அமைப்பில் உக்ரைன் இணைந்தது.
# கிரீன்பீஸ் அமைப்புக்கு ரஷ்யா தடை விதித்தது.

ஜூன்

# வடக்கு அட்லாண்டிக் கடலில் மாயமான ‘டைட்டன்’ என்கிற நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த ஐந்து பேர் உயிரிழந்ததாக அமெரிக்கக் கடற்படை அறிவித்தது.
# ரஷ்யாவின் சார்பில் உக்ரைனில் போரிட்டுவந்த வாக்னர் என்கிற தனியார் ராணுவக் குழு, ரஷ்ய அரசுக்கு எதிராகத் திரும்பி ரஷ்ய அரசின் தலைமையகமான கிரெம்ளினை நோக்கி அணிவகுத்துச் சென்றது.
# தேசவிரோத நடவடிக்கைகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் என்று ஜிம்பாப்வே அறிவித்தது.
# தென் கொரியாவில் மரண தண்டனைக்குத் தடை விதிக்கப்பட்டது.
# பால் புதுமையினருக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கும் அவர்களைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்குமான சட்டம் ஜப்பானில் நிறைவேறியது.
# உலகின் மிகப் பழமையான செய்தி இதழ்களில் ஒன்றான வீனர் ஸீட்டங் (Wiener Zeitung) வெளியீடு நிறுத்தப்பட்டது. 1703 முதல் இந்த இதழ் வெளியிடப்பட்டுவந்தது.

ஜூலை

# ரஷ்யா நடத்திவரும் போருக்கு நிதி அளிப்பதன் காரணமாக யூனிலீவர் நிறுவனத் துக்கு உக்ரைனில் தடை விதிக்கப்பட்டது.
# பொருளாதார நெருக்கடியிலிருந்து பாகிஸ்தானை மீட்க முதல் கட்டமாக 700 மில்லியன் டாலர் கடன் அளிப்பதற்கான ஒப்பந்தத்துக்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்தது.
# கையிருப்பில் இருந்த ரசாயன ஆயுதங்களை முற்றிலும் அழித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
# திருநர்கள் திருமணத்துக்கு ரஷ்யா தடை விதித்தது.
# வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை இத்தாலி குற்றமாக்கியது.
# திரெட்ஸ் (Threads) என்னும் புதிய சமூக வலைதள செயலியை அறிமுகப்படுத்தியது மெட்டா நிறுவனம்.
# சமூக வலைதளமான ட்விட்டர் ‘எக்ஸ் (X)’ என்று பெயர் மாற்றம் பெற்றது.

ஆகஸ்ட்

# பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ‘பிரிக்ஸ்’ அமைப்பில் புதிதாக 6 நாடுகளை உறுப்பினர்களாகச் சேர்க்க முடிவெடுக்கப்பட்டது.
# இஸ்ரோ ராக்கெட் சிதைவுகளைக் கண்டறிந்தது ஆஸ்திரேலியா.
# தங்க விசா திட்டத்தைத் தொடங்கியது இந்தோனேசியா.
# பெலாரஸ் மீதான பொருளாதாரத் தடைகளை நீட்டித்தது ஐரோப்பிய ஒன்றியம்.
# வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களின் குழந்தைகள் ஜெர்மானியக் குடியுரிமையைப் பெற அனுமதிக்கும் குடியுரிமைச் சட்டம் ஜெர்மனியில் நிறைவேறியது.
# ஜப்பானிலிருந்து கடல்சார் உணவு இறக்குமதிக்கு சீனா தடை விதித்தது.

செப்டம்பர்

# உலகில் முதன்முதலில் திறன்பேசி செயலி அடிப்படையில் செயல்படும் டிஜிட்டல் பாஸ்போர்ட்டை பின்லாந்து அறிமுகம் செய்தது.
# போரில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டிருந்த போய்கோ டவர்ஸ் பகுதியை உக்ரைன் மீட்டெடுத்தது.
# ஆப்ரிக்க ஒன்றியத்தைப் புதிய உறுப்பினராகச் சேர்க்க ஜி20 நாடுகள் ஒப்புதல் அளித்தன, ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதற்காகப் பரிந்துரைத்திருந்தார்.
# நைஜரில் தனது ராணுவத்தை நீக்கிக்கொண்டது பிரான்ஸ்.
# நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கு வதற்கான திட்டத்தை ஜப்பான் தொடங்கியது.

அக்டோபர்

# பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது அக்டோபர் 7 அன்று ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
# வடக்கு காசாவிலிருந்து மக்கள் உடனே வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் மீண்டும் எச்சரிக்கை விடுத்தது.
# பாலஸ்தீனத்தின் காசாவில் உடனடியாகப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஐக்கிய நாடுகள் பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
# சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்த 124ஆவது நாடானது அர்மீனியா.
# பிணைக் கைதிகள் விடுவிக்கப் படுவதற்காக 4 நாள்களுக்கு ஹமாஸுடனான போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது.
# ஆவணப்படுத்தப்படாத ஆப்கன் அகதிகளை, பாகிஸ்தான் நாடுகடத்தத் தொடங்கியது.
# காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டிக்கும் விதமாக ஹோண்டுராஸ், துருக்கி, சாட் உள்ளிட்ட எட்டு நாடுகள் இஸ்ரேலுக்கான தமது தூதரைத் திரும்பப் பெற்றன.
# காசா நகரத்தில் அல்-ஃபா மருத்துவ மனைக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
# காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதிலிருந்து 4,000க்கு மேற்பட்ட பாலஸ்தீனியக் குழந்தைகள் கொல்லப் பட்டிருப்பதாக அல் ஜஸீரா ஊடகம் தெரிவித்தது.
# பாகிஸ்தானின் லாகூரில் நச்சுத்தன்மை வாய்ந்த புகை பரவியதால் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பள்ளிகள், சந்தைகள், பூங்காக்கள் மூடப் பட்டன.
# அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் சமத்துவத்தின் சிலை என்னும் பெயரில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டது.
# தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ் பர்கில் உள்ள டால்ஸ்டாய் பண்ணையில் எட்டு அடி உயர காந்தி சிலை திறக்கப்பட்டது.

பதவியேற்புகள்:

# செக் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார் பீட்டர் ஃபியலா.
# வங்கதேச அதிபர் ஆனார் முகமது சஹாபுதீன்
# சீன அதிபராக மூன்றாவது முறையாக ஷி ஜின்பிங் பதவியேற்றார்.
# கத்தார் பிரதமர் ஆனார் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி.
# நேபாள அதிபர் ஆனார் ராம் சந்திர பவுடெல்.
# சீனாவின் பிரதமர் ஆனார் லீ ஜியாங்.
# ஸ்காட்லாந்து பிரதமர் ஆனார் ஹும்ஸா யூசஃப்.
# துருக்கி அதிபர் ஆனார் தய்யீப் எர்டோகன்.
# கிரீஸ் பிரதமர் ஆனார் கிரியகோஸ் மிட்சோடாகிஸ்.
# சிங்கப்பூர் அதிபர் ஆனார் தர்மன் சண்முகசுந்தரம்.
# நியூசிலாந்து பிரதமர் ஆனார் கிறிஸ்டோபர் லக்ஸன்.
# பாகிஸ்தானின் பொறுப்பு பிரதமராகப் பதவியேற்றார் அன்வர் உல் ஹக் கக்கர்.
# உக்ரைன் ராணுவத் தலைவர் ஆனார் கைலோ புடனாவ்.
# உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ் பதவி விலகியதை அடுத்து அஜய் பங்கா அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
# உலக சுகாதார நிறுவனத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அர்ஜென்டினாவின் செலஸ்டி சாலோ. இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவர்.

இந்தியா - சீனா

# மக்மோகன் கோட்டினை சீனாவுக்கும் அருணாசல பிரதேசத்துக்கும் இடையிலான சர்வதேச எல்லையாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியது அமெரிக்கா.
# அருணாசலப் பிரதேசத்தில் 11 இடங்களின் பெயரை மாற்றியது சீனா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x