Last Updated : 15 Jan, 2018 04:11 PM

 

Published : 15 Jan 2018 04:11 PM
Last Updated : 15 Jan 2018 04:11 PM

நெட்டிசன் நோட்ஸ்: ஞாநி மறைவு - ‏ஓர் எழுதுகோலில் மை தீர்ந்தது

பத்திரிகையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். ஞானியின் மறைவையடுத்து சமூக வலைதளங்களில் அவரை பற்றி நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றன அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸ்ஸில்....

Gopal Narayanan

சென்று வாருங்கள் #ஞாநி! ஆற்றிய சேவை அளப்பெரிது!

Adhi.suresh

‏தோழர் #ஞாநி யின் மறைவால் "பொங்கல்" விழா எடுக்க மனம் இல்லை..

குட்டி பையன் :)

‏ஒரு சிலர் இறந்ததுக்கு அப்புறமாத்தான் அவர்களைப்பத்தி நிறைய பேசுறாங்க. இத்தனை நாளா டிஎல்ல இவரைப்பத்தி படிக்கக் காணாதது வேதனையே!

#GnaniSankaran #ஞானி #RIPGnani

Nellaiseemai

‏#ஞாநி இளைஞர்களுக்கு அறிவுரை.

திறமையை வளர்த்துக்கொள்வதை விட நல்லவனாக இருப்பதே முக்கியம்.

நல்லவன் திறமைகளை எப்போது வேண்டுமானாலும் வளர்த்துக்கொள்ளலாம்.

திறமையான கெட்டவன் நல்லவனாக மாறவே முடியாது என்பதை அரசியலில் பார்த்து வருகிறோம்.

Asha Srinivasan

‏அத்தனை வாரப் பத்திரிகைகளும் முதலில் வாவா என அழைத்து அவர் துணிந்து அரசியல்வாதிகளைச் சாடியதும் விரட்டிவிட்டு _அநேகமாக சிலரைத்தவிர எல்லா பத்திரிகைகளுமே இதை செய்தது.

Gnanakuthu

சினிமா செய்திகள்,சுஜாதா,ஹாய் மதனுக்குக்கா விகடன் வாசித்துக்கொண்டிருந்த காலமது.. ஒ பக்கங்களில் முதல் பகுதி வந்தது மனித மலங்களை மனிதனே அள்ளும் முறையை சாடி எழுதியிருத்தார் பின் ஒ பக்கங்களுக்குக்கா விகடன் படிக்க நேர்ந்தது அன்று முதல் #ஞாநி பால் ஈர்ப்பு கொண்டவன் நான்.

ஒருமுறை கூட பத்திரிகையாளர் சந்திப்பு செய்யாத பிரதமரை பத்திரிகையின் பவள விழாவுக்கு அழைப்பது இன்றைய மீடியா உலகத்தின் அறம் எப்படிப்பட்டது என்பதையே காட்டுகிறது - #ஞாநி

MD SHA

‏2014 NDTV விவாதத்தில் பங்கேற்பாளர் ஒருவர் ஆங்கிலம் தெரிந்திருந்தும் ஹிந்தியில் பேசிக் கொண்டிருக்க உடனே ஞாநி தமிழில் பேசி பதிலடி கொடுப்பார். இது எனக்கு மிகவும் பிடித்த விவாதம்.

அம்புலி

ஓர் எழுதுகோலில் மை தீர்ந்தது #ஞாநி

Jenish

‏40+ ஆண்டுகள் பணி.எழுத்துலகின் பேரிழப்பு.திரு.#ஞாநி அவர்களது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

தமிழன்டா

எழுத்தாளர் சகோதரர் ஞானி அவர்கள் காலமானது ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

படத்தில் அவரது கடைசி முகநூல் பதிவு, யாரை அம்பலப்படுத்த வேண்டும் என அவர் எண்ணினாரோ அது நடந்தேரட்டும்

சிந்தனைவாதி

சிந்தனையாளர்கள் ஜாதியில் தனக்கென்று தனியொருவராக வாழ்ந்த மாபெரும் சிந்தனைவாதி

#ஞாநி இன்று மறைந்தார்

என்றும் அவரது சிந்தனைகளில் வாழ்வாங்கு வாழ்வார்

சரவணன்

#RIPGnani நி-க்கும், னி-க்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அஞ்சலியே செய்ய வேண்டாம். #ஞாநி

Rathinavel Rajan S

‏ஞானத்தோடும்

நிதர்சனத்தோடும்

படைத்தவன் நீ!!

Ashokkumar‏

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் #ஞாநி அவர்கள் காலமானார் #ஞாநி அவர்களின் விருப்பத்தின்படி அவரது உடல் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது #RIPGnaniSir

Naren

‏அறிந்தும் அறியாமலும், ஓ போடு மூலம் எங்கள் வெகுஜனத் தலைமுறையை பெரிதும் பாதித்தவர்.

‘நோட்டா’, ‘குட் டச்’ சொற்களை புழக்கத்தில் விட்டவர். கோவை சந்திப்பில் அவரின் அடித்தொண்டை பேச்சிற்கு முன் வரிசையில் இளைஞனொருவன் தொடை தட்டி பொங்கிக் கொண்டிருந்ததை என்றும் மறவேன் #ஞாநி

/ யதார்த்தவாதி //

‏குதூகலக் கொண்டாட்டங்களின் நடுவே...

ஒரு இலக்கியச் சூரியனின் அஸ்தமனத்தை அறியத் தவறிவிட்டோம்

உண்மையில் தவறவிட்டோம் - நெஞ்சுயர்ந்த இலக்கியத்தை!

RJ Rofina Subash

‏வாழ்க்கையில் எல்லாமே பழக்கத்தில் வருவதுதான்.

#ஞாநி

இம்ரான்

‏முற்போக்கு சிந்தனையாளர்,

மது மற்றும் மதவெறியர்களின் எதிர்ப்பாளர்,

தோழர் #ஞாநி அவர்களின் இழப்பு,

பாசிச எதிர்ப்புப் போராளிகளுக்கு பேரிழப்பு.

Perur Hariharan

‏#ஞாநி என்னும் #எழுதுகோல் இனி எழுதாது....

ஞாநி என்னும் #ஆணித்தரமான_குரல் ஒலிக்காது...

‏ராஜ்மோகன்..!

‏நேர்மையான போலீஸ்காரனுக்கு எப்படி அடிக்கடி இடமாறுதால் கிடைக்குமோ

அப்படியே ஞாநிக்கும் நடக்கும்

எந்த பத்திரிகைகளிலும் நிரந்தரமாக எழுதியில்லை

#ஞாநி

KOLAPPA THANDESH

‏அந்த காலத்தில் #ஞாநி யின் அந்த மொழிபெயர்ப்பு அத்தனை அட்சர சுத்தமாக இருந்தது.அனைவரின் பாராட்டையும் பெற்றது.

#ஞாநிக்கு_அஞ்சலி

இட ஒதுக்கீடு பற்றிய என் தவறான பார்வையை ஒரே கட்டுரையால் மாற்றியவர். பிறப்பால் பார்ப்பனர்; ஆனால் வாழ்வால் தமிழர்! எழுத்தால் மட்டுமின்றி சமூக மாற்றத்துக்காகக் களப் பணியும் ஆற்றிய செயல்பாட்டாளர்! என் மானசீக ஆசான்களில் ஒருவரான #ஞாநி அவர்களுக்குக் கண்ணீர் வழியும் தமிழ் வணக்கம்!

கொள்ளிடத்தான்

‏கொண்ட கொள்கையில் நேர்மையானவர் ஒரு புள்ளயில் #மரு_அன்புமணியின் நிர்வாக திறமையை பாராட்டி தமிழகத்தை ஆளும் தகுதிபடைத்தவர் என்று பாராட்டிய பத்திரிக்கையாளர் #ஞாநி காலமானார்..

புன்னகை மன்னன்

‏இலக்கியப்புள்ளிகளில்

ஒரு புள்ளி தன்னை விலக்கிக்கொண்டது

உயர்குல பிறப்பிலும்

நடுநிலைப்புள்ளி வீழ்ந்தது

இலக்குகள் மாறினாலும்

உனது இலக்கியம் நிற்கும்

மறைவின் பிரிவோ

மனதுக்கு சொல்லொன்னா வருத்தம்.... #ஞாநி

ravithambi ponnan

‏இருப்பிடமற்று அலைந்து திரிந்தவனுக்கு 17/2 பீட்டர்ஸ் காலனியில் இருக்க இடம் கொடுத்து சோறூட்டி என் இளம் பருவ சிந்தனை போக்கை சீராக்கி வளர்த்தெடுத்ததில் #ஞாநி நட்புமானார் என்பதை விட ஞானத்தந்தையுமானார்.சமரசமற்று வாழ்ந்து சமரசமற்று மறைந்த #ஞாநி மறக்க முடியா #மாமனிதர் என் வாழ்வில்.

Nirmal Selvaraj

அசாத்திய குணநலன் மற்றும் கூர்மயான பார்வை கொண்ட ஒரு சிறந்த மனிதர் நெருங்கி பழக வில்லை புத்தக கண்காட்சி காலத்தில் பேசியது உண்டு அவரின் படைப்பு களை தாண்டி ஏதும் இல்லை...... இலைபருங்கள் ஐயா... #ஞாநி .....

Ram Moorthi

உங்களில் எத்தனை பேர் டிவி பார்ப்பீர்கள்?

அனைவரும் கைகளை உயர்த்தினோம்

உங்களில் எத்தனை பேர் நாளிதழ் படிப்பீர்கள்?

அரங்கமே அமைதியாய் இருந்தது..

கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் பொழுது தேசிய மாணவர் இயக்கத்தின் பயிற்சி வகுப்பு நடைபெற்றபோது

பத்திரிக்கையாளர் ஞாநி அவர் கேட்ட முதல் இரண்டு கேள்விகள் இது..

#இதயஅஞ்சலி #ஞாநி

Raj Sekar

சமரசம் செய்து கொள்ளாத மனிதர்

#ஓ........#ஞாநி........

Navratnam Paraneetharan

விவாதமேடைகளில் அடிக்கடி காணலாம், ஓ பக்கங்களில் தன்னை வெளிக்காட்டியவர், கடந்த வாரம்கூட வைரமுத்துவின் ஆண்டாள் விவகார விவாதமேடையில் தன் முகம் காட்டியவர்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x