ஜூனியர் சூப்பர் சிங்கர் இறுதிப்போட்டி ரூ.60 லட்சம் வீட்டை வென்றார் ஸ்ரீநிதா

ஜூனியர் சூப்பர் சிங்கர் இறுதிப்போட்டி ரூ.60 லட்சம் வீட்டை வென்றார் ஸ்ரீநிதா
Updated on
1 min read

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாகும். சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசன் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. அன்று நடந்த இறுதிப் போட்டியில் ஸ்ரீநிதா, ஹர்ஷினி, ரிச்சா, அக்‌ஷரா, அனன்யா, மேக்னா ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா, மனோ, மால்குடி சுபா, இசையமைப்பாளர் தமன் நடுவர்களாக செயல்பட்டனர்.

இதில், டைட்டில் மற்றும் ரூ.60 லட்சம் வீட்டைப் பரிசாக வென்றார் ஸ்ரீநிதா. இரண்டாவது இடத்தை ஹர்ஷினி வென்றார். இவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது. மூன்றாவது இடத்தை வென்றவர் அக்‌ஷரா. அவருக்கு ஐந்து லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மற்ற போட்டியாளர்களான ரிச்சா, அனன்யா, மேக்னா ஆகியோருக்கு தலா மூன்று லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in