Published : 13 Jan 2018 15:46 pm

Updated : 13 Jan 2018 15:48 pm

 

Published : 13 Jan 2018 03:46 PM
Last Updated : 13 Jan 2018 03:48 PM

நெட்டிசன் நோட்ஸ்: தானா சேர்ந்த கூட்டம் - பண்டிகைக்கான படம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தை பற்றிய நெட்டிசன் நோட்ஸ் இன்றைய தொகுப்பில்,

ஹிட்மேன்

‏சூர்யாவ இப்புடி மாத்தி கொண்டுவந்ததுக்காகவே #Anbaanadirector க்கு கெடா வெட்டி விருந்து வைக்கலாம்

@mangathadaww

இந்த உயரம் முக்கியமில்ல உயரம் (மனசு) தான் முக்கியம் !!

Well-done Surya

Prem‏

கறுப்புப் பணம், லஞ்சம் என்று எமக்கு அலுத்துப் போன கதைக் களம் தான், எனினும் சூர்யாவின் இளமை ததும்பும்...

@SfcRoshan

தட் கேர்ள் - எனக்கு லஞ்சம் ஊழலே பிடிக்காது

சூர்யா - உன் பேர் என்ன

தட் கேர்ள் - சஷிகலா

#TSKFDFS

TSK Zio

இது வலியால் வாடிய கூட்டமடா

ஒரு புதிதான போராட்டமடா

இது தேடிசேர்த்த கூட்டம் இல்லை

தானா சேர்ந்த கூட்டமடா

#lyrics_that_tells_a_story

Mersal Kumaran

#TSK

சூர்யா செம்ம ஸ்மார்ட்

படம் செம்ம

அனிருத் இசை நிறைய இடத்துல படத்த தூக்கி நிறுத்துச்சு.

விஸ்வாசம்

பட் இங்க இணையதுல சொல்லற மாதிரி #TSK பொங்கல் வின்னர் 2018 first blockbuster நெக்ஸ்ட் அயன் அவளோ அற்புதமான படம் இல்ல just ok ரகம் என்ன கேட்டா suriya stuff ku இதுல்லம் ஒரு படமே இல்ல

வினோத்

‏ரம்யாகிருஷ்ணன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை. அருமையான பேக்ட்ராப்பில் அமைந்தும், கீர்த்திசுரேஷ் போர்ஷன் பெப்பியாக இல்லை. கலையரசன் ப்ளாஷ்பேக் அவ்ளோ சோகமாவெல்லாம் இல்லை. பல கிளைக்கதைகள் நிலைபெறவேயில்லை. கார்த்திக்குக்கு ஸ்கோப்பு இல்லை. க்ளைமேக்ஸ் நம்பும்படி இல்லை. #TSK

meenakshisundaram

சூர்யாவின் சமூக ஆர்வம். கீர்த்தி சுரேஷின் அப்பாவித்தனம், ரம்யாகிருஷ்ணனின் கம்பீரம், அனிருத் இசை, நறுக் வசனம், விறுவிறுப்பான திரைக்கதை...இதெல்லாம் சேர்ந்த கலவை தானா சேர்ந்த கூட்டம். குடும்பத்துடன் ரசிக்கலாம்

Mersal Kumaran

‏#TSK - CLIMAX மட்டும் நல்லா எடுத்துருந்தா படம் சூப்பர் னு சொல்லிருக்கலாம்

அப்படியே அவசரத்துல முடிக்கணும் னு முடிச்ச மாதிரி ஆகிடுச்சி

V I P E R™

‏"எவ்ளோ உயரமா இருக்கோங்குறது முக்கியம் இல்ல.. எவ்வளவு உயர்றோம்னுதான் முக்கியம்"..

#தானாசேர்ந்தகூட்டம்...

புலி

#புலிவிமர்சனம் :

#தானாசேர்ந்தகூட்டம்

"எளியோரை வலியோர் வாட்டினால்

வலியோரைத் தெய்வம் வாட்டும்"

Lion பாலாஜி

‏நல்லா படிச்சு இன்டர்வியூக்கு போயி யாரோ ஒருத்தனால வேலை கிடைக்காத ஒருத்தன் பன்ற தில்லாலங்கடி வேலைதான் #தானாசேர்ந்தகூட்டம்

அதித்தியன்

சூர்யாவும் படத்தின் பிற நடிகர்களும் ஒரு சுமாரன படத்தை காப்பாற்றிவீட்டார்கள். முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி சுமார்.

@Adithyanhere

அரவிந்த்

விஜய் எப்படி ஆளப்போறான் தமிழனோ.. அது மாதிரி சூர்யாவுக்கு சொடக்கு மேல ...

Filmy Folks

#TSKPongalWinner 5 காரணங்களுக்காக இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்

Suriya_offl என்றும் இளமையான வேடத்தில் சூர்யா. சொடக்கு பாடல் ஆரம்பித்து இறுதி வரை படத்தை தன் தோளில் சுமந்து வெற்றி பெறச் செய்திருக்கிறார். தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளார் சூர்யா…

வைசாக் பத்மநாபன்

சூர்யா அண்ணா வேற லெவல் #TSK

சிந்து

ஜாலியான படம். பண்டிகைக்கான படம்... சூர்யா அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

சூர்யா தானா சேர்ந்த கூட்டம் #TSKகீர்த்தி சுரேஷ் ரம்யா கிருஷ்ணன்நெட்டிசன் நோட்ஸ்விக்னேஷ் சிவன் செந்தில்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author