

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள, தீபிகா படுகோன், சாகித் கபூர், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'பத்மாவத்'. திரைப்படத்தில் ராஜப்புத்திர ராணி. பத்மாவதியின் வரலாறு திரித்து சொல்லப்பட்டுள்ளதாகக் கூறி எதிர்ப்பு கிளம்பியது.
ராஜபுத்திர கர்னி சேனா உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. எதிராக வழக்குகளும் தொடுக்கப்பட்டன. இந்த நிலையில் பல எதிர்ப்புகள் மத்தியில் கடந்த ஜனவரி 25-ம் தேதி பத்மாவத் திரைபடம் வெளியானது.
பல போராட்டங்களுக்கு இடையே வெளியான பத்மாவத் திரைப்படம் பற்றி நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள் அதன் தொகுப்பு இன்றைய நெட்டிசப் நோட்ஸில்..
Hello RJ Kallky
பெண்களைப்போல் ஆண்களும் கண்ணியம் காத்திருந்தால்...
வரலாற்றில் பல போர்கள் நிகழாமல் இருந்திருக்கும் !!!
MD SHA
அடேய் அந்த படத்துல பத்மாவதியை ரொம்ப உயர்வா தான்டா பேசி இருக்கானுக...
முதல்பக்கம் முக்கி
போர்ல வென்றத கூட கொண்டாடாம பத்மாவதிய பார்க்க ஆவலா ஓடி வந்த அலாவுதீன் கில்ஜிய விடவா ராடன் சிங்கின் காதல் பெருசு #பத்மாவதி
Manikandan MK
தீபிகா ஜூவாலையில் மட்டும் அல்ல எண்ணுளும்...
இறங்கி விட்டாள்.!!
குழந்தை Talks
#பத்மாவதி பாடாவதி
எதுக்கு இவ்ளோ பில்டப் குடுக்குறானுங்கன்னு தெரியல.
sakthi Dinakaran
வருட ஆரம்பத்தில் ஒரு வைரம்
சஞ்சய் பன்சாலியின் தேடலில் மீண்டும் ஒரு அழகி பத்மாவதி
மறக்காமல் உங்கள் கண்களுக்கு விருந்து வையுங்கள்
மரியாதைக்குரிய உண்மையான ராணி பத்மாவதிக்கும், நடிக்காமல் வாழ்ந்த தீபிகாவுக்கு வணக்கம்..
ஆல் இன் ஆல் அழகுராஜா
நல்லாத்தானே ஓடிகிட்டு இருக்கு...
கலவரம், கல்வீச்சு ன்னு சொன்னாய்ங்க..
Neander Selvan
#பத்மாவதி பார்த்த நண்பர் விமர்சனம். “இதில் ராஜபுத்திரகளை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தியும், அலாவுதீன் கில்ஜியை சைக்கோ ரேஞ்சுக்கும் காட்டியுள்ளனர். மாலிக் கபூர் கில்ஜியின் காதலி என்பது போல காட்சிகள் வருகின்றன. இதுக்கு ஏன் போராட்டம் செய்தார்கள்
Karthik Rana
என் #வாழ்வில் நான் கண்ட #மிகச்சிறந்த_படங்களில் ஒன்று #பத்மாவதி பன்சாலிக்கு என் Salute
Havijithan(Rockey)
இக்காலத்தைச் சேர்ந்த அனைவரும் பார்க்க கூடிய, பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். சமீபகாலமாக
அலிபாபாவும் டிவிட்டரும்
போராட்டம் பண்ணியே
கடைசில என்னையும்
தியேட்டர்ல படம் பார்க்க வைச்சீட்டீங்களே...!!!
Kathir.P.Selvam
உலகின் மிகச்சிறந்த பரிசு
- ஆசீர்வாதம்
வெங்கடேஸ்வரன் S
"பெருமைகள் நிறைந்த #பத்மாவத்"
அழகு
பிரமாண்டம்
காதல்
திருமண பந்தம்
தேசப்பற்று
பாராட்டு சொல்ல வார்த்தைகளே இல்லை,
Murali France
சூழ்ச்சியின் - துரோகத்தின் தோல்வியிலும்; “பத்மாவதி” தான் வென்றாள்
காந்து
ஒரு பொண்ணுக்கு இவ்ளோ போரா
♏.கார்த்திக்
3D தொழில்நுட்பம் சூப்பர்.
சாங் சூப்பர்....
SPARTAN™
#பத்மாவத் படம் எடுத்ததற்காக ராஜபுத்திரர்கள் சஞ்சய் லீலா பான்சாலியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருக்க வேண்டும்... ஆனால் யார் பேச்சையோ கேட்டுட்டு போராட்டம் பன்னியிருக்கானுவ... அதுவும் ஒரு வகையில் நல்லதுக்கே.. படத்திற்கு ஃப்ரி பப்ளிசிட்டி கிடைச்சிருக்கு..
ℳsᴅ பிளேடு
துரோகத்திற்கு ஆளான ஒரு அரசனின் கதை
#பத்மாவத்
நேசன்
பேராசை ரன்வீர்
வீரன் ஷாகித் கபூர்
பேரழகி தீபிகா
அப்பாவி அதிதி ராவ்
இரு தளபதிகளின் விஸ்வாசம்
இவைகளே திரைப்படத்தை மிக சுவாரசியமாக நகர்த்துகிறது...
நான்
ராஜ புத்ரனின் வால் வீரத்திற்கு இணையாக ராஜ புத்ரியின் காப்பில் உள்ளது அவள் வீரம்
ஆர்வத்துடன் அவள் வீரத்தை காண
#பத்மாவத்
மருது காளை
இந்த படத்த விட ராஜபுத்ர வம்சத்த யாராலும் கௌரவிக்க முடியாது..
உயிர்தியாகம் ராணி பத்மாவதி climaxscene சூப்பர்
மண்ட பத்தரம்
#Padmavat - பிரச்சினை செய்ய வேண்டியவர்கள் சும்மா இருக்காங்க.
பெருமைப்பட வேண்டியவர்கள் பிரச்சனை பண்றாங்க
HtnasarP
#Padmaavat #ரன்வீர் சிங் மிரட்டிற்கான்.ஒவ்வொரு ஃரேம்லயும் #அலாவுதின் கில்ஜியா வாழ்ந்திருக்கிறான்.#தீபிகா கண்னே அப்படி ஒரு நடிப்பு.#ஷாகித் பாடி லங்குவேஜ் ராஜாவா கச்சிதம்.இவங்க மூனு பேரும் ஒப்பற்ற நடிப்பு.கிளைமேக்ஸ் அவ்வளவு அழுத்தம்.