Last Updated : 30 Nov, 2017 10:11 AM

 

Published : 30 Nov 2017 10:11 AM
Last Updated : 30 Nov 2017 10:11 AM

வாழ்க்கை அழைக்கிறது 03: வனாந்தரங்களில் அல்ல; வாசலுக்கு முன்!

 

த்திரிகையாளர் சோலை சோவி யத் நாட்டுக்குச் சென்று வந்த அனுபவம் குறித்து ‘புதிய உலகம்; புதிய பறவைகள்’ என்னும் தலைப்பில் தொடர் கட்டுரை எழுதினார். பின்னர் அந்தத் தொடர் தனி புத்தக மாக வெளியிடப்பட்டது.

வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சோவியத் கலாச்சார மையத் தில் நடந்தது. முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வி.பி. சிந்தன், கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டார் கள்.

முன்னதாகப் பேசிய ஒரு பேராசிரியர் சோலையின் புத்தகத்தைக் கூடப் படிக்காமல், மக்களாட்சி குறித்துப் பேசிப் பேசிக் கிழிந்துபோன அமெரிக்கக் கருத்தை வெகுவாகச் சிலாகித்தார் இப்படி:

‘‘மக்களுக்காக (For the People)

மக்களால் ஆன (By the people)

மக்களுடைய ஆட்சி (of the People).’’

தோழர் வி.பி. சிந்தன் இந்த மாதிரி யான கவித்துவ ஒப்பனைகளை எல்லாம் வெறுப்பவர். அவர் பேராசிரியரின் மூவடி முழக்கத்துக்குப் பின்னே கசிந்தொழுகும் ரத்தச் சிதறல்களை விவரித்தார்.

‘‘ஆங்கிலத்தில் For, By, Of என்று மூன்றுக்கு மேல் வேற்றுமை உருபு கிடையாது. மக்களாட்சி குறித்துத் தமிழில் சொல்வதானால் ‘மக்களை, மக்களால், மக்களுக்கு, மக்களிலிருந்து, மக்களினுடைய, மக்களில், மக்களே’ என்று ஏழு வேற்றுமை உருபுகளுடனும் இணைத்து, கேட்போர் வியக்க விரித்துப் பேசலாம்.

ஆனால், எத்தனை உன்னதக் கவிதைகளைப் பிழிந்து ஒப்பனை செய்தாலும் பொய்மையின் கோரத்தை மறைத்துவிட முடியாது!’’ என்றார்.

எம்.ஜி.ஆர். உட்பட அனைவரும் வி.பி. சிந்தனின் பேச்சை மிகவும் ரசித் தார்கள்.

நினைவுக்கு வந்தார் கோ.கேசவன்

மேற்கண்ட நிகழ்ச்சியைப் பற்றி தியாகராய நகரில் உள்ள இந்தியன் குளம்பியகத்தில் - (இந்தியன் காபி ஹவுஸ்) நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, தவிர்க்க முடியாமல் பேராசிரியர் கோ.கேசவன் நினைவுக்கு வந்தார்.

வி.பி.சிந்தன் எழுத்தாளரோ, தமிழ றிஞரோ அல்ல. அவர் தமிழின் இலக்கணத்துக்குள் புகுந்து தமது கருத்தை விவரிக்கிறார். ஆனால், கோ.கேசவன்? அவர் ஓர் எழுத்தாளர். தமிழைப் பல சந்தர்ப்பங்களில் பிழைபட எழுதுவார்.

‘எதிர்ப்புரட்சியின் புலர்காலைப் பொழுதில்...’

‘பஞ்சம் அடிக்கடி பூக்கும்’

- என்று தனது கருத்துக்கு எதிரான முறையில் சொற்பிரயோகம் செய் வார்.

‘புரட்சியின் புலர்காலைப் பொழுது’ என்றால் சரி.

அது என்ன எதிர்ப்புரட்சியின் புலர்காலைப் பொழுது?

‘வசந்தம் பூக்கும்’ என்றால் சரி, பஞ்சம் எப்படிப் பூக்கும்?

ஆனா ரூனாவின் கொடையுள்ளம்

லூயீ போனபார்ட்டின் ‘பதினெட் டாம் புரூமேர்’ என்கிற தலைப்பில் மார்க்ஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

‘புரூமேர்’ என்பது பிரெஞ்சு மொழியில் பிப்ரவரி மாதத்தைக் குறிக்கும். பிப்ரவரி மாதம் 18-ம் தேதி போனபார்ட் முடிசூட்டிக் கொண்டான். அந்த 18-ம் தேதியில் நடந்த அரசியல் மாற்றங்கள் குறித்த விமர்சனம்தான் லூயீ போனபார்ட்டின் ‘பதினெட்டாம் புரூ மேர்’. ஆனால், பேராசிரியர் கோ.கேசவன் பதினெட்டாம் புரூமேர் என்கிற மன்னன் என்று எழுதி பெரும் சர்ச்சையில் அடிபட்டார். தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர் மீது கடும் விமர்சனம் வைத்தார். கேசவனைக் காப்பாற்ற நான் பெரும்பாடுபட்டேன்.

இவற்றையெல்லாம் நண்பர்களு டன் நான் பேசிக் கொண்டிருந்தபோது, நந்தனம் கலைக் கல்லூரியில் இருந்து கவிஞர் அக்னிபுத்திரனும் வேறு இரு பேராசிரியர்களும் வந்தனர்.

‘‘கேசவன் சிறுநீரகக் குறைபாடு ஏற்பட்டு மிகவும் சிரமப்படுகிறார். உடனடி யாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். நான்கு லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மருத்துவச் செலவுக்காக நிதி திரட்டிக் கொண்டிருக்கிறோம். உங்கள் நண்பர் ஆனா ரூனாவிடம் சொல்லி பத்துப் பதினைந்து ஆயிரம் பெற்றுத் தர முடியுமா?’’ என்றார்கள்.

பதறிப்போய், ஆனா ரூனாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். ‘‘கொள்கைப் பிடிப்புள்ள ஒரு போராளியை நாம் இழந்துவிடக்கூடாது’’ என்றேன்.

‘‘35 ஆயிரம் ரூபாய் எடுத்து வைக்கிறேன். காலையில் வந்து பெற்றுக்கொள்ளச் சொல்லுங்கள்...’’ என்றார் அவர்.

அக்னிபுத்திரனும் பேராசிரியர்க ளும் ஆனா ரூனாவின் கொடையுள்ளத்தைப் பாராட்டினார்கள்.

நானே பொறுப்பேற்கிறேன்

அந்த நேரத்தில் காம்ரேட் சுமிதா வின் நினைவு வந்தது. தோழர் கேசவனைப் பற்றிச் சொல்லி அவருக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன்.

சுமிதாவுக்கு கம்யூனிஸ்ட்களை மிகவும் பிடிக்கும். நக்சலைட் என்றால் மிகமிகப் பிடிக்கும். ‘‘மருத்துவச் செலவுக்காக நிதி எதுவும் திரட்ட வேண்டாம். கேசவனின் மருத்துவச் செலவுக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்’’ என்றார்.

‘‘நீங்களே நந்தனம் கல்லூரிப் பேராசிரியர்களிடம் சொல்லுங்கள்...’’ என்று சொல்லியபடியே, தொலைபேசியை பேராசிரியர் ஒருவரிடம் கொடுத்து ‘‘நடிகை சில்க் சுமிதா பேசுகிறார்...’’ என்றேன்.

சுமிதா என்னிடம் சொல்லிய விவரங்களை அவர் சொல்லக் கேட்ட பேராசிரியர்கள், நம்ப முடியாமல் வியந்து ‘‘இதென்ன அதிசயம்!’’ என்றார்கள்.

ஒரு கவர்ச்சி நடிகைக்குள் இருக் கும் புரட்சிக்காரரை அவர்களுக்கு நான் விவரித்தேன்.

விடிந்ததும் சுமிதாவிடம் செல்வ தாக இருந்தோம். நண்பர்கள் நிம்மதி யாக வீட்டுக்குச் சென்றார்கள்.

ஆனால், அன்று இரவே தோழர் கேசவன் எழுதுவதில் இருந்தும், சர்ச்சைகளில் இருந்தும் விலகிக் கொண்டார்.

koo.kesavan கோ.கேசவன் rightவாழ்வை விட இனிமையானவர்கள்

தோழர் கேசவனின் மறைவுச் செய்தியை சுமிதாவிடம் சொன்னேன். கொஞ்ச நேரம் அமைதியாக இருந் தார்.

‘‘கம்யூனிஸ்ட்களைப் பற்றி அடிக் கடி சொல்வீர்களே, அதை மறுபடியும் ஒருதரம் சொல்லுங்கள்’’ என்றார்.

‘‘வாழ்வை விட இனிமையானவர்கள். மரணத்தை விட உறுதியானவர்கள். ஆனால், இது நான் சொன்னதில்லை. ஹரீந்திராந் சட்டோபாத்யாயா எழுதியது!’’ என்றேன்.

‘‘இந்த மாதிரியானவர்களுக்கு நம்மால் உதவ முடியாமல் போவது எவ்வளவு கொடுமையானது!’’ என வருந்தினார்.

ஆனால், கம்யூனிஸ்ட்களுக்கு மாத்திரமல்ல; பல எளியோருக்கும் சுமிதா உதவி செய்தார் என்பது எனக்குத் தெரியும்.

சுமிதாவுக்கு மத நம்பிக்கை உண்டு. ‘‘தர்மத்தை நிலைநாட்டக் காலந்தோறும் அவதரிப்பேன் என்று பரமாத்மா சொன்னாரே... அது பொய்யல்ல; நமது காலத்தில் அவர் நக்சலைட்களாக அவதரித்திருக்கிறார்!’’

‘கீதை’ சுமிதாவின் பார்வையில் வணக்கத்துக்குரியதுதான்.

பரந்தாமன் போர் முழக்கமும் செய்வான், புல்லாங்குழலும் இசைப்பான். அவன் போர்களற்ற உலகுக்காகவே போர் செய்கிறான்.

ஆயுதபாணியாய் அவன் வனாந்தரங்களில் மறைந்து திரிவதால் பயங்கரவாதி என்று சொல்லிவிட முடியுமா?

அவன் - துப்பாக்கிகளை நம்புவதில்லை. மக்களை நம்புகிறான். நெஞ்சு நிறைய அன்பைச் சுமந்துகொண்டு எளியோரின் வாசலுக்கு முன் நிற்கிறான்.

காம்ரேட் - நடிகை - சில்க் சுமிதா எத்தனையோ பேரின் கதவைத் தட்டி நின்றவர்!

- அழைக்கும்...

படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x