Published : 09 Dec 2017 03:19 PM
Last Updated : 09 Dec 2017 03:19 PM

நெட்டிசன் நோட்ஸ்: ‘சத்யா’, ‘கொடிவீரன்’- யார் ஹீரோ?

சிபிராஜின் நடிப்பில் தெலுங்கு வெற்றிப்படத்தின் ரீமேக் ‘சத்யா‘ மற்றும் மண் சார்ந்த படங்களை அதிகம் எடுக்கும் முத்தையாவின் ‘கொடிவீரன்‘ ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாகியுள்ளன. அவை குறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்…

Rajkumar Anbalagan

'சத்யா' படம் முடிஞ்சு வெளியே வரும் போது கண்களில் ததும்பி நிற்கும் நீர் நம்மை அறியாமல் சில சொட்டுகள் வெளியேறுகிறது. ஸ்டைலிஷ் சிபி கெடைக்கும் இடங்களிலெல்லாம் ஸ்கோர் செய்கிறார். பழைய காதலியை ஆழ்ந்து நேசிக்கும் எல்லோருக்கும் இந்த படம் சர்க்கரைப் பொங்கல்.

Lakshmi Saravanakumar

நீ விட்டுச்சென்ற வாழ்வின் மிச்சம் நான் சத்யா.

Dr.S.Raja‏ @S198714

'சத்யா'- நல்ல திரைப்படத்துடன் இன்னொரு நல்ல நடிகரும் கிடைத்துள்ளார். வாழ்த்துக்கள் சார். உங்கள் புதிய கதை தேர்வு தொடரட்டும்.

Subutweetz

'சத்யா' செம படம். கடைசியா சதீஷ சீரியஸ் ரோல்ல நடிக்க வச்சுட்டாங்க.

Ag Sivakumar

அருமையான கதைகள் எல்லாம் இப்படிப்பட்ட ஹீரோக்களிடம் மாட்டிக்கொள்வது தமிழ் சினிமாவின் சாபம். இதுவும் விதிவிலக்கல்ல. பிரசன்னா, விஜய் சேதுபதி, அருண் விஜய் போன்றவர்கள் நடித்திருந்தால் இந்தப் படத்தின் லெவல் வேறுமாதிரி இருந்திருக்கும். நாகூர் பிரியாணி சிபிக்குத்தான் கிடைக்கும் என்றிருந்தால்?

Ranjith‏ @Ranjith03737693

இன்று 'சத்யா' படம் பார்த்தேன், அருமை. ரம்யாவின் ராட்சச நடிப்பு பிரமிப்பையும் இறுதி முடிவு ஒருவிதமான வலியை ஏற்படுத்தியது.

சி.பி.செந்தில்குமார்‏ @senthilcp

சிபிராஜின் 'சத்யா' (தெலுங்கு ரீமேக்) ஹிட் என தகவல். கேரளாவில் ரிலீஸ் ஆகலை. 'ஏ' சென்ட்டரில் இவர் படம் ஹிட் ஆனது இதுவே முதல் முறை. வாழ்த்துகள்!

Joseph Vijay‏ @vjay2832

'சத்யா' திரைப்படம் தமிழ் சினிமாவின் போற்றப்பட வேண்டிய படம். கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

*

jayachandhiran‏ @imjaiindian

பேய், கொலை, கொள்ளை, கடத்தல், திகில் என குடும்ப உறவுகளையே மறந்து போயிருக்கும் நிலையில் அண்ணன், தங்கை பாசத்துடன் பாசக்கொடி உயர்த்தியிருக்கிறார் கொடிவீரன் சசிகுமார்.

Gurubaai @ItsGurubaai

தமிழ் சினிமாவில் முதன்முதலில் மச்சான்களின் காதலைப் பேசிய படம் 'கொடிவீரன்'.

gifman @Tamilbull1

'கொம்பன்'+ 'குட்டிப்புலி'+ 'மருது'= 'கொடிவீரன்'.

திசைமாற்றான்‏ @im_dgk

மாமனார காப்பாத்துனா 'கொம்பன்'; மச்சான காப்பாத்துனா 'கொடிவீரன்'.. முத்தய்யா பரிதாபங்கள்.

RamKumar‏ @ramk8059

கொடிவீரன் 'சி' சென்டர்ல படம் பிச்சிக்கும். 'கொம்பன்' படத்துக்கு அப்பறம் கொடிவீரன் முத்தையாவுக்குக் கைகொடுக்கும் நினைக்கிறேன்

தங்கச்சி சென்டிமென்ட் நல்லா இருக்கு, பஞ்ச் டயலாக் பறக்குது, பைட் சீன்ஸ் பக்கா மாஸ்.

பென்னாகரம்ஷக்தி‏ @TheShakthiLR

#கொடிவீரன்- குடும்பத்தோடு பார்க்கும் திரைப்படம்.

அண்ணன் தங்கை பாசத்தைக் கருவாக வைத்து எடுத்துள்ளனர். அங்கங்க போர் அடிச்சாலும் கதை விறுவிறுப்பாக இருக்கு, குடும்பத்தோடு சென்று படத்தை பார்க்கலாம். எங்கேயும் முகம் சுழிக்கும் காட்சிகள் இல்லை

Raja Sundararajan

கொடிவீரன் என்பது ஓர் உம்மைத்தொகை என்று கொண்டால், கொடியும் வீரனும் என்று பொருள்தரும். கொடி- தங்கை; வீரன்- அண்ணன்.

ஆமாம், பாசமலர். ஒன்றல்ல, மூன்று.

வாசுகிபாஸ்கர்

முத்தையாவின் அடுத்தபடம் 'கொடிவீரன்'.

தமிழகத்தில் இன்றும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய முக்குலத்தோர் சமூக மக்கள் ஏராளமாக உள்ளனர், சமூக ரீதியாக சில தேவையில்லாத சாதி அடையாளங்களை சுமந்து இந்த சமூக அரசியல் எதைக் கொடையாய் கொடுத்து, எதை பறித்தது, வீரம் என்கிற பெயரில் சில விஷயங்களைப் பூதாகரமாக்கி எந்த அரசியல் அறிவை இழக்க செய்தது, சமூகம் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என பல விவகாரங்களை குறியீடாகவோ நேரடியாகவோ பேச ஆயிரம் விவகாரம் உள்ளது.

அதை விட்டு, யதார்த்தத்தில் இல்லாத கொம்பனையும், கொடிவீரனையும் தூக்கிப் பிடித்து என்ன சொல்ல வருகிறார் முத்தையா?

கே. என்.சிவராமன்

கன்வர்டட் காஸ்மோபொலிடன் மக்களுக்கும், முகநூல் உலகப்பட தாசர்களுக்கும், 'நாகரீக' வாழ்க்கைமுறையை பின்பற்றுவதாக நம்புபவர்களுக்கும் இப்படம் பிடிக்காது. #கொடிவீரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x