Published : 16 Nov 2017 02:35 PM
Last Updated : 16 Nov 2017 02:35 PM

நெட்டிசன் நோட்ஸ்: நாச்சியார் டீஸர்- எது பிரச்சினை?

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'நாச்சியார்' படத்தின் டீஸரில், ஜோதிகா பேசியுள்ள வசவுச் சொல்லால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. இதுகுறித்த நெட்டிசன்களின் கருத்துத் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Viveka

ஒரு ஆண் செய்த தவறுக்குமா, பெண் பொறுப்பேற்பாள்? #நாச்சியார்

Jeeva Sagapthan

ஆண்கள் கெட்ட வார்த்தை பேசினாலும், பெண்கள் பேசினாலும் அது பெண்ணை இழிவுபடுத்துற விசயமாதான் காலங்காலமா இருக்கு.

#ஜோதிகா #நாச்சியார் #கெட்டவார்த்தை

Vel Kannan

நினைச்சேன்.. வியாபாரத்தை பாலா டீசர்ல இருந்தே ஆரம்பிச்சுட்டாரு..

Vadivullan Alagappan

இந்தியாவில் மனித உரிமை என்றால் என்ன என்று கேட்கும் காவல் நிலையத்தில் பல காவல் அதிகாரிகள் பேசுவதை பட்டவர்த்தமாக சொல்லியுள்ளார் இயக்குனர் பாலா. அவ்வளவே! - நாச்சியார்.

Aashi N Aashika

ஒரு ஆண் தவறு செய்தாலும் அவனைத் திட்ட அவனது தாயான பெண்ணைத்தான் இழுக்க வேண்டிய இழி நிலையில் கிடக்கிறது இந்த சமூகம். #நாச்சியார்

வாசுகி பாஸ்கர்

'அண்ணே, ஜோதிகா 'நாச்சியார்' டீசர்ல பேசினதை பார்த்திங்களா?'

எங்கவூர் பொம்பளைங்க சண்டை போட்டுகிறதை கேட்டா ஹாலிவுட் சென்சார் போர்ட்காரனே சிதறி ஓடுவான், இதையெல்லாம் ஒரு விஷயமா கேட்டுகிட்டு.

விஷ்வா விஸ்வநாத்

தே... பயலுக! அந்தப் பயலுகளின் செயல்களைக் குறிப்பிடுகிறதா? அவர்களின் அம்மாக்களின் செயல்களைக் குறிப்பிடுகிறதா இயக்குனர் பாலா ?? #பாலா #நாச்சியார்'

Arul Ezhilan

பாலாவோட 'நாச்சியார்' டீசர் பார்த்தேன். கடைசியில் ஜோதிகா பேசும் அந்த டயலாக் வைரலாக வேண்டும் என வைத்திருக்கிறார். முக்கியமாக ஜோதிகா அந்த வசனத்தையே பேசவில்லை. வேறு வசனம் பேசியிருக்கிறார் அதில் டப் பண்ணியிருகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அது லிப் சிங்க் ஆகவில்லை.

பா. வெங்கடேசன்

'நாச்சியார்' படத்தின் டீஸரில் பேசுகின்ற வசனம் இயக்குனர் பாலாவின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது.

D S Gauthaman

டீஸர் என்றால் யாரையாவது டீஸ் பண்ணணும். அதைத்தான் 'நாச்சியார்' டீஸர் பண்ணியிருக்கு. எதிர்பார்த்த விளம்பரமும் கிடைச்சுடுச்சு. அந்த வார்த்தை தவறென்றாலும் தவறாமல் பயன்பாட்டில் இருக்கத்தான் செய்யுது.

சாமுவேல் ராஜா

கெட்ட வார்த்தை பேசினது பிரச்சினையா இல்ல அதை ஜோதிகா பேசினது பிரச்சினையா!!

Nanda Periyasami

'நாச்சியார்' டீசர் வெளியாகி உள்ளது. கண்ணியமான சிவகுமார் வீடு இதை எப்படி எடுத்து கொண்டது? 'அகரம்' போன்ற அமைப்பை நடத்தும் சூர்யா இதை அனுமதித்தது ஏன்? பாலா போன்ற மாபெரும் இயக்குனர் ஏன் இப்படி டீசர் வெளியிடுகிறார்? இதன் மூலம் ஒரு முகம் தெரியாத தாயை... ஒரு பெண்மணியை... ஒரு பெண்ணே இழிவு படுத்துவது போலாகாதா ? அறம் விதைத்து செழிக்கத்தொடங்கிய தமிழ் சினிமாவில் இது தேவையா ?

Vijay Sivanandam

பாலா மனநிலை பாதிக்கப்பட்டவர் என பலமுறை நான் சொல்வதுண்டு. 'நாச்சியார்' டீசர் மீண்டுமொருமுறை அதை எனக்கு உறுதிப்படுத்தியது.

Rathi Rajesh

குழந்தைங்க கெட்டத பேச மாட்டாங்க.....கேட்டதை தான் பேசுவாங்க. குழந்தைங்க மனசுல நஞ்சை விதைக்காதீங்க #நாச்சியார்...

C P Senthil Kumar

மாமா, உங்க பொண்ணை நாச்சியார் போல் வளர்த்திருக்கறதா சொன்னீங்களே?வீரத்துல புலியா?

மாப்ள, நீங்க எதுனா தப்பு செஞ்சா கெட்ட வார்த்தைல திட்டுவாப்டி.

Vini Sharpana

மிகக்கடுமையான எதிர்ப்புகளும் கண்டனங்களும் சீறிப்பாயும் என்பது பாலாவுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் ஜோதிகாவை வைத்து இப்படியொரு டயலாக்கை பேசவைத்து டீசர் வெளியிடுவதன் மூலம் பப்ளிசிட்டி கிடைக்கவேண்டும் என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு என்னவாக இருக்கமுடியும்?

ஜோதிகா இப்படியொரு வசனத்தைப் பேச எப்படி ஒத்துக்கொண்டார்? '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்' என பெண்களின் முன்னேற்றத்திற்கான சினிமாவில் நடித்த ஜோதிகாவா இப்படி? பெண்களை வைத்தே பெண்களை கேவலப்படுத்துவது சில வக்கிர ஆண்களின் டெக்னிக். அதே டெக்னிக்கை பயன்படுத்தி சீப் பாப்புலாரிட்டியை தேடியிருக்கிறார் பாலா.

ரஹீம் கஸாலி

ஒருத்தனை கோபப்படுத்திவிட்டால் சர்வ சாதாரணமாக இந்த வார்த்தைதான் முதலில் வந்துவிழும். ஜோதிகா பேசிவிட்டார் என்பதாலேயே இந்த வார்த்தை பிரபலமாகப்போவதில்லை. பிரபலமான ஒரு வார்த்தையைத்தான் ஜோதிகா பேசியிருக்கார். நான் இதை நியாயப்படுத்தவில்லை. யதார்த்தத்தை சொல்கிறேன். இந்த வார்த்தையை இதுவரை உச்சரிக்காத, கேட்டிராத ஒரு ஆள் கைதூக்குங்க பார்ப்போம்.

Sabari Nathan

ஜோதிகா இந்த 'மகளிர்மட்டும்' -ல எதோ பெண்ணியம்னு எல்லாம் சொன்னிங்க இதான் உங்க பெண்ணியமா? #naachiyaar_teaser

பாலாவேல்

ஜோதிகாவையும் கெட்டவார்த்தை பேசவச்சிட்டீங்களே நாயமாரே... #நாச்சியார் #NachiyaarTeaser #Nachiyaar

விகடகவி @WritterRamesh

இனி தமிழக மீனவர்கள் பிரச்சனையை விட, ஜோதிகா கெட்ட வார்த்தை பேசியதுதான் பெரிய பிரச்சனையாக பார்க்கப்படும்.

Ramesh @RHoneykumar

36 வயதில் பெற்ற நற்பெயரை தொலைத்துவிட்டார் நாச்சியார்...

ஜோஜோ @Iam_Sajina

ஒரு பொண்ணு Bold and Strong-ங்கிறதை காட்ட, தைரியமா கெட்ட வார்த்தை பேசினா போதும்னு தப்பான இமேஜை உருவாக்கியது சினிமாக்கள் தான்..

நாச்சியார் : ஜோ | தரமணி :ஆண்ட்ரியா.

P Kathir Velu

ட்ரைலரில் வரும் ஜோதிகா இந்தக் காட்சியில் யாரோ ஒருவனை அடித்துவிட்டு வசனம் பேசுகிறார். அந்த அடிவாங்கும் பாத்திரம் செய்ததற்கு அவன் அம்மா 'அப்படித்தான்' கட்டாயம் இருக்க வேண்டுமா!?

'கற்பழிப்பு' எனும் சொல் மீது எப்படி காறி உமிழ்கிறோமோ... அதேபோல் அந்த சொல்லின் மீதும் காறி உமிழ்வோம்... சொல் மீது மட்டுமல்ல, அந்தச் சொல்லைப் பயன்படுத்துவோர் மீதும்..!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x