Last Updated : 21 Nov, 2017 04:26 PM

 

Published : 21 Nov 2017 04:26 PM
Last Updated : 21 Nov 2017 04:26 PM

ஸ்மூல் படுத்தும் பாடு: ப்ரேம்ஜியின் ட்வீட்களும் குலுங்கி சிரிக்கும் நெட்டிசன்களும்

ஆடைகள் வாங்கணுமா ஆன்லைன், மளிகை வாங்கணுமா ஆன்லைன், ரயில் டிக்கெட் அல்ல சினிமா டிக்கெட் முன்பதிவு செய்யவும் ஆன்லைன். அட இதெல்லாம் விடுங்க.. திருமணத்துக்கு மாப்பிள்ளை, பெண் பார்ப்பதுகூட ஆன்லைன் ஆகிவிட்ட காலத்தில் பாட்டு பாடுவதற்கு என்று ஓர் ஆன்லைன் ஆப் இல்லாவிட்டால் எப்படி? அப்படித்தான் கரோகேவையே மிஞ்சிவிட்டதே என்று பலரும் வியக்கும் அளவுக்கு ஓர் ஆப் உருவாகி உலாவருகிறது. அதுதான் ஸ்மூல். ஸ்மூல் பற்றி நாம் இங்கே அறிமுகப்படுத்தத் தேவையில்லை.

அட அதான் தெரியுமே... நங்கள் நிறைய பேர் பயன்படுத்துகிறோமே என்கிறீர்களா?

இருக்கட்டும் அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஸ்மூல் ஆப்-பில் பாட்டுக்கள் பாடாய் படுவதுதான் பிரச்சினை. ஒரே ஒரு கல்பனா பேல்ஸ் இருந்த நெட்டிசன்கள் உலகில் இப்போது லட்சக்கணக்கான கல்பனா பேல்ஸ்களை உருவாக்கிவிட்டிருக்கிறது ஸ்மூல்.

இந்த சின்ன குரல், கந்தர்வ குரல் இத்யாதி இத்யாதி குரல் தேடுல்களுக்கான போட்டிகளில்.. கொஞ்சம் ஸ்ருதி கம்மியா இருக்கு, தாளம்தான் மிஸ் ஆகுது மத்தபடி ஓகே.. உச்சரிப்பு ஸ்பஷ்டமாக இல்லை அப்படி இப்படின்னு சொல்வது போல் இந்த ஸ்மூல் ஆப் பாடல்களைப் பார்த்து நீங்கள் கருத்துகளை சொல்ல முடியாது. ஏன்னா.. நீங்கள் உங்கள் சுயத்தை மறந்து சிரித்துக் கொண்டிருப்பீர்கள். என்ன பாடச்சொல்லாதே நான் கண்டபிடி பாடிப்புடுவேன்னு ஆண்பாவம் படத்தில் ரேவதி அழகாக பாடியிருப்பாரல்லவா.. இங்கே உண்மையிலேயே பலரும் கண்டபிடி பாடியிருப்பார்கள். இப்போதெல்லாம் காமெடி சேனல்கள் பல செய்யும் வேலையை இந்த பாடுதளங்கள்தான் செய்து கொண்டிருக்கிறது.

ஆனால், பாட்டில் ஆர்வமும் நல்ல குரல்வளமும் இருக்கும் அலுவலக நண்பர்களோ ஸ்மூல் வரப்பிரசாதம் என்கிறார்கள். அவர்களது சில பதிவுகளையும் பார்த்தேன் ஆஹா என்றும் ஒன்ஸ் மோர் என்றும் கேட்கும் அளவுக்கு அழகாக இருந்தது. உண்மையில், பாடும் திறன் உள்ளவர்களுக்கு ஸ்மூல் நிச்சயம் வரப்பிரசாதம்தான். கொஞ்சம் சுமாராக பாடுபவர்கள்கூட அடிக்கடி ஸ்மூலில் பாடி தங்கள் குரலை செம்மைபடுத்திக் கொள்ளலாம். ஆனால்.. சிலரது பாடல்கள் இருக்கே அதை நீங்கள்தான் மதிப்பீடு செய்ய வேண்டும்.

அண்மையில் ஒரு செய்தி வெளியானது. "இணையத்தில் பாடப்படும் கரோக்கி செயலியான ஸ்மூலில் குறிப்பிட்ட பாடல்களைப் பாட பணம் வசூலிக்கப்பட்டதை அடுத்து, ரசிகர்கள் பாடிய இளையராஜாவின் அனைத்துப் பாடல்களும் நீக்கப்பட்டுள்ளன. தனக்கு சொந்தமான பாடல்களைப் பாடி யாரும் பணம் வசூலிப்பதை இளையராஜா விரும்பாததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது".

ஆனால், உண்மையிலேயே இளையராஜா இந்தப் பிரச்சினைக்காகத் தான் கட்டுப்பாடு விதித்தாரா இல்லை பொறுக்க முடியாமல் விதித்தாரா என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.

இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன் தனது ட்விட்டர் தளத்தில் சில ஸ்மூல் பாடல் பதிவுகளை வெளியிட்டிருக்கிறார். அவற்றைப் பாருங்கள். யார் வேண்டுமானாலும் பாடுவதற்காகத் தான் இந்த ஆப் என்றாலும் கொஞ்சம் நியாயம் வேண்டாமா? என்று விளையாட்டாக கேட்கச் சொல்கிறது.

அப்புறம் அந்த பொறுப்பு துறப்பு வாசகம் கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும். இந்தப் பதிவு யார் மனதையும் காயப்படுத்துவதற்காக அல்ல. அப்புறம் இதை எழுதியவரின் தனிப்பட்ட கருத்துகள் இவை.

இங்கே சில சேம்பில்கள்: (ப்ரேம்ஜியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை)

 

Smule 1

smule 2

smule 3

smule 4

smule 5

smule 6 

இப்ப புரியுதா இதை ஏன் எழுத வேண்டும் எனத் தோன்றியது என்று?!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x