Published : 08 Nov 2017 02:29 PM
Last Updated : 08 Nov 2017 02:29 PM

நெட்டிசன் நோட்ஸ்: முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி ஆயிரம் ரூபாய் நோட்டு

பணமதிப்பு நீக்க நாளான நவ.8 இன்று (புதன்கிழமை) எதிர்க்கட்சிகள் நாடுமுழுவதும் கண்டன நாளாக கடைபிடித்து வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளும் தேசிய அளவில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நாளை விமர்சித்து நெட்டிசன்களும் தொடர்ந்து தங்களின் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இதனால் இந்திய அளவில் #AntiBlackMoneyDay

#DemonetisationAnniversary என்ற ஷாஸ்டேகுகள் ட்ரெண்டாகியுள்ளன. 

அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

மதியழகன் ஆறுமுகம்

தனது முதல் பிறந்த நாளை கொண்டாடும் புதிய இந்தியாவிற்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

சீனிவாசன். ஜெ

ஆணவத்தால் ஒரு நாட்டையே சீர்குலைக்க முடியும் என்று நிரூபித்த நாள்!

முருகானந்தம் ராமசாமி

டாக்டர்.மன்மோகன் சிங்கின் நேற்றைய ஆவேசமான தாக்குதலை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்..!

அது ஒரு தலைமுறையை பொருளியல் ஏக்கங்களிலிருந்து விடுவித்த மேதையின் சத்திய ஆவேசம்..!

அதற்கு நன்றியுடன் அவருக்கு தலைவணங்குகிறேன்...!

பூபதி முருகேஷ்

சமூக வலைதளங்களில் Demonetisationக்கு தமிழ்நாட்ல இருந்து அதிக எதிர்ப்பு வரணும்.. அவனுங்க அந்த கடுப்புல 2ஜி கேஸ் தீர்ப்ப எழுதணும்..

சிவகுமார்.எஸ்

என்னதான் ஆயிரமாக இருந்தாலும் ஒருநாள் செல்லாக்காசு ஆகிவிடும் என்று அறிந்து கொண்ட தினம் இன்று

செந்தமிழ் செல்வன்

கருப்பு கருப்புன்னு சொல்லு இப்புடி பண்ணிப்புட்டீங்களேடா...

தட் " எல்லைல ராணுவ வீரர்கள்...."டே

#DeMoDisaster

#EconomicDisasterDay

நரைன் ராஜகோபலான்

கறுப்பினை ஒழிக்கிறேன் என்கிற பெயரில் ஒரு அரசாங்கம், ஒரு நாட்டின் குடிமக்களை இருட்டாக்கிய நாள்!

ராஜா ஜி

சொந்த நாட்டு மக்கள் மீதே நடத்திய Surgical strike #செல்லாக்காசு

#EconomicDisasterDay

அஷோக் . ஆர்

டீமானிடைசேஷனை உடனே எதிர்த்தவன் புத்திசாலி மனுசன். கொஞ்சநாள்ல எதிர்த்தவன் சராசரியான புத்தியுள்ள மனுசன். ரொம்பநாள் கழிச்சு எதிர்த்தவன் குறைபுத்தியுள்ள மனுசன். ஆனா இப்ப வரைக்கும் ஆதரிக்கிறவன் பாஜக மனுசன்.

எழிலன். எம்

"புதிய இந்தியா பிறந்தது" என ட்வீட்டிய எவரும் வங்கியில் கால் கடுக்க நிற்கவில்லை

விஜி பழனிசாமி

நாட்டுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளச் சொன்ன நாள்.

ஆனால் அவர்கள் கல்லா நிறைந்தது.

வாசுகி பாஸ்கர்

Bank'ல சம்பளம் போட்டு டிபிட் கார்ட் swipe பண்ணுற பெரும்பாலான கார்ப்பரேட் செக்ட்டார் தேஷ பக்தாள்களுக்கு ,கிராம பொருளாதாரம்னா என்னன்னே தெரியாதுன்னு புரிஞ்சிகிட்ட நாள்!

கார்த்திக் புகழேந்தி

கடைசியாக மிச்சமிருந்த ஐநூறு ரூபாய் தாளை இங்கே எங்கேயோதான் புதைத்தோம்..

மூன்றுபக்கம் கடலாலும், ஒருபக்கம் நிலத்தாலும் முட்டாத்தனமான ஆட்சியாளர்களாலும் சூழப்பட்ட தீபகற்ப தேசம் இந்தியா!

முத்து குமார்

ஒட்டு மொத்த இந்திய மக்களும் சந்தோஷமா பேங்க் க்யூல நின்னுட்டு இருந்தோம்.

மலரும் நினைவுகள்.

அசல் சுரேஷ்

பக்தாஸ்: எல்லைல வீரர்கள் கஸ்டபடும்போது உங்களுக்கு லைன்ல நிக்க என்ன நோகாடு//

இந்திர குமாரி

இந்தியாவின் பிரதமர் யார்

என்று தெரியாத மனிதனுக்கும்...

மோடி தான் இந்தியாவின் பிரதமர்

என்று அறிந்து கொண்ட தினம் இன்று...

புவனேஷ்வரன்

10% பேரிடம் இருக்கும் 90% சதவீத கறுப்பு பணத்தை ஒழிக்க நினைத்து 90% பேரிடமிருந்து 10% கறுப்பு பணத்தை ஒழிச்சு பல்பு வாங்குனதுதான் மிச்சம்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x