Published : 23 Nov 2017 04:42 PM
Last Updated : 23 Nov 2017 04:42 PM

நெட்டிசன் நோட்ஸ்: இரட்டை இலை சின்னம்- இலையில் தாமரை மலருமா?

இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Ezhumalai Venkatesan

எதிர்பார்த்தபடியே முதலமைச்சர் அணிக்கு இரட்டை சிலை சின்னம், கட்சியின் பெயர், கட்சியின் கொடியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

தினகரனுக்கு ஒதுக்கியிருந்தால்தான் ஆச்சர்யப்படணும்..

Udhai Kumar

ஊடகங்களுக்கு எப்படி முன்கூட்டியே தெரிந்து?- டிடிவி தினகரன் கேள்வி..

இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்னு தமிழ்நாட்டு மக்களுக்கு எப்போதோ தெரியும். தேர்தல் ஆணையம், பல விசாரணைகள் மேற்கொண்டது எல்லாம், ஒரு நிறுவனத்தில் ஏற்கெனவே ரெக்கமன்ட்டேஷன்ல ஒரு ஆளை வேலைக்கு எடுத்துட்டு, இன்டர்வியூக்கு போனவங்களை எல்லாம் கேள்வி மேல கேள்வி கேட்டு அது சரியில்லே, இதுக்கு சரியான பதில் இது இல்லேன்னு ரிஜக்ட் பண்ற மாதிரி இந்த இரட்டை இலை சின்ன விவகாரமும்..

வாசுகி பாஸ்கர்

நித்தி வீடியோ உண்மை என்பது வந்தப்பவே தெரியும், இரட்டை இலை ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்குதான் கிடைக்குமென்பதும் சர்ச்சை எழுந்தப்பவே தெரியும்,

தெரிஞ்சதை ஏன் இவ்ளோ லேட் லேட்டா சொல்றாங்க; செய்றாங்க தெரியலை!

சீ இராஜேந்திரன்

இரட்டை இலை எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே: தேர்தல் ஆணையம் தீர்ப்பு.

எங்கே செல்லும் இந்த பாதை..? வேறெங்கே.. உச்ச நீதிமன்றம்தான்!

Krishna Kumar

இரட்டை இலை சின்னம் தீர்ப்பு- எழுந்திரு பேபிமா எழுந்திரு ,எழுந்திரு பேபிமா எழுந்திரு.

Priya Murali

இரட்டை இலை ரெட்டையர் அணிக்கு கிடைச்சதைக் கூட ஏத்துக்கலாம். இனி ஆளாளுக்கு நீதிக்கும் நேர்மைக்கும் தர்மத்திற்கும் கிடைத்த வெற்றி; அம்மாவின் ஆன்மா எங்க பக்கம்னுலாம் அளப்பாங்களே அத நினைச்சாத்தான்...

Barakath Ali

11 எம்.எல்.ஏ-களை வைத்து இரட்டை இலையை முடக்கினார் பன்னீர்செல்வம். 22 எம்.எல்.ஏ-கள் இருந்தும் தினகரனால் முடக்க முடியவில்லை. நீதிடா... நேர்மைடா.. (தேர்தல்) கமிஷன்டா!

Vishnupuram Saravanan

இரட்டை இலை சின்னம் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணிக்கோ, அதிமுக அம்மா அணிக்கோ வழங்கப்பட வேண்டும். ஆனால் இப்போது தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பது எடப்பாடி அணிக்கு. தேர்தல் ஆணையம் என்பது பாஜகவின் தலையாட்டிப் பொம்மையாக மாறிப்போய் விட்டதைத்தான் காட்டுகிறது.

அதுவும் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியவுடன் தேர்தல் ஆணையம் தனது முடிவை வெளியிடுவதன் மூலம், ஆர்.கே.நகரில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையமே விடாது என்பதைத்தான் காட்டுகிறது.

Dr S RAMADOSS @drramadoss

ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு: அப்புறமென்ன... இனி ஆர்.கே. நகர் தேர்தல் அவசரமாக நடத்தப்படும். உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்படும்!

MOHANAVEL @mohanvelz

பேக்கரி டீலிங் : இரட்டை இலையை நீங்க வச்சிக்கோங்க,

அதிமுகவை நாங்க வச்சிக்கறோம் - பாஜக.

maran @maranveera86

இரட்டை இலையை மட்டும் வைத்துகொண்டு என்ன பண்ணப் போறீங்க? ஓட்டுப்போட வாக்காளர்கள் வேணுமே...

RSP @Shivaprakasam

இனி இரட்டை இலையில் தாமரை மலரும்.

Priya Gurunathan @priyaGurunathan

ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கி தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு !

ஆனா முடக்கியது ஓபிஎஸ் Vs சின்னம்மா பிரச்சினைதானே பாஸ்... இதுல ஈபிஎஸ் எங்க வர்றார்... ஏதாச்சும் விளங்குதா?

பா. வெங்கடேசன்

இரட்டை இலை வேண்டும் என்றால் ஓபிஎஸ் வெளிமாநிலத்தில் கட்சி ஆரம்பித்துக் கொள்ளட்டும் என்று பேட்டியளித்த தினகரன் நிலைமையை யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

வாழ்க்கை மட்டுமில்லை, அரசியலும் ஒரு வட்டம்தான்!

D S Gauthaman

இரட்டை இலையை மட்டுமே சசியின் தரப்பு மலைபோல் நம்பியிருந்தது. ஏனெனில், தொண்டர்கள் பலம் அந்த அணிக்கு இல்லாதபோதும் இரட்டை இலை என்ற சின்னத்தின் மேஜிக் தங்களைக் காப்பாற்றுமென நம்பினார்கள். தற்போது அந்த குருட்டு நம்பிக்கை தவிடுபொடியானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x