Published : 14 Nov 2017 02:48 PM
Last Updated : 14 Nov 2017 02:48 PM

நெட்டிசன் நோட்ஸ்: குழந்தைகள் தினம்- அலாதி அன்பு!

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்நிலையில் ட்விட்டரில் #ChildrensDay என்ற ஹேஷ்டேக் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இது தொடர்பான நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Nsiva Nesan

எல்லாரும் தூங்கிய பிறகு

அப்பா சோறூட்டுகையில்

சிணுங்கும் அம்மா குழந்தைதான்..

 

எதற்கும் கலங்காத அப்பா

மகளை புகுந்த வீடு அனுப்புகையில்

வெடித்து அழும்போது அவரும் குழந்தைதான்..

 

சீக்கிரம் தின்றுவிட்டு

தங்கையிடம்

ஸ்நாக்ஸ் கெஞ்சுகையில்

அண்ணனும் குழந்தைதான்..

 

ஐம்பது ரூபாய் நோட்டை எடுக்காமல்

ஐம்பது பைசா சாக்லேட் எடுக்கையில்

குழந்தைக்கு நிகர் குழந்தைதான்... #ChildrensDay

Ramesh Kmdk

காணிக்கை செலுத்தியும் வேண்டுதலை நிறைவேற்றுவதில்லை தெய்வங்கள்!

சாக்லெட் கொடுத்தவுடன் முத்தம் தந்துவிடுகின்றன குழந்தைகள்!

Malar Vizhi

குழந்தை போல மனசு உள்ளவங்களும் குழந்தைதான். அதனாலே அப்படியே எனக்கும் வாழ்த்து சொல்லிட்டு போங்க... #November_14

Chelli Sreenivasan

எத்தனை வயதானாலும் உள்ளே இருக்கும் குழந்தைத் தனத்தையும் குறும்புத் தனத்தையும் விடவே கூடாது. குழந்தை மனமும் குணமும் நம்மிடம் எந்த வயதிலும் போகாமல் பார்த்துக்கொண்டாலே போதும், எந்த சூழலையும் எளிதாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து விட முடியும் !

சந்திரசேகர் தனிஒருவன்

குழந்தை வரம் கேட்டு கோவில் கோவிலாக அலையும் தம்பதியர் யாருக்கும் தெரிவதில்லை..

அம்மா வரம் கேட்டு அனாதை ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளை!

குழந்தைகள் தின வாழ்த்துகள்.

Clever Vky

வயதுதான் குழந்தைப் பருவத்தை தீர்மானிக்கிறது என்றால்

நான் பெரியவன்..

மனம்தான் பருவங்களை தீர்மானிக்கிறது எனில்

இன்றும் நான் இருக்கிறேன் குழந்தையாகவே..!

Sekar Karuppannan

உலகில் பசியால் அழும் குழந்தை ஏதேனும் ஒரு மூலையில் இருக்கு வரை, நாம் செய்யும் எந்த அபிஷேகமும் இறைவனடி சேராது.. #ChildrenDay2017

மகிந்தன் @MSRajRules

ஆயிரம் கவலைகள் இருந்தாலும் அதை எல்லாவற்றையும் மறக்க வைத்து நம்மை மிக சுலபமாக சிரிக்க வைப்பது குழந்தைகள் மட்டுமே..!

கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar

குழந்தைகள் தவறு செய்தால் நம்மிடம் பயப்படலாம்!

நம்மிடம் பேசுவதற்கே பயப்பட்டால் தவறு நம் மீதுதான்!

குழந்தைகள் தின வாழ்த்து.

அஜ்மல் அரசை @ajmalnks

கள்ளங்கபடமற்ற மனசுகளுக்கு சொந்தக்காரர்கள் குழந்தைகள் மட்டுமே...

அஜய் முருகேஷ் @ajay_aswa

தனக்கு பிடித்தமாதிரி பதில் சொல்பவர்களிடம் அடிக்கடி கேள்வி கேக்க தொடங்கிவிடுகின்றனர். #குழந்தைகள்

HAJA MYDEEN

குழந்தைகள் சொல்லும் ரைம்ஸ்

பெற்றோர்களுக்கு தாலாட்டு..!

அஜய்

வாழ்க்கையில் எந்த உயரத்துக்குப் போனாலும்

தன் குழந்தைப் பருவ நியாபகங்களை நினைக்காமல்

வாழ்க்கை நமக்கு நிறைவடைவதில்லை. #குழந்தைகள்_தினம்

சிலந்தி @nandhu_twitts

மீண்டுமொரு ஜென்மம் கிடைக்குமாயின் அதில் அனுதினமும் குழந்தையாகவே வாழ்ந்திட முனைகிறேன்..

வளர்ந்துவிட்டால் நிறைய நேரங்களில் இந்த உலகில் பொய்யாகவும், போலியாகவும் நடிக்க வேண்டியதாயிருக்கும் என்பதால்..

#குழந்தைகள்_தினம்_சுகம்.

இசை @BhargaviKissan

குழந்தைகள் அழகு என்றால் அவர்களின் பேச்சு அதைவிட அழகு...

தூயோன் @Deepan_Offl

அம்மா அடித்தாலும் அம்மாவையே கட்டிப் பிடித்துக் கொண்டு 'அம்மா, அம்மா 'என அழும் குழந்தைகளின் அன்புதான் எத்தனை அலாதியானது?

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.

Mani Tamil

விதைக்கும் விதைதான் நாளை விருட்சம் ஆகும். குழந்தைகளும் விதைகள் போலத்தான்... நல்ல உணர்வுகளை விதையுங்கள். ஊக்கம் எனும் உரத்தை ஊட்டுங்கள். தரமாக வளர்வார்கள். தமிழனத்தை உயர்த்துவார்கள். தன்னம்பிக்கையோடு வாழத்துங்கள். இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

பொரி உருண்டை @raajsh01

உங்கள் கனவுகளை பிள்ளைகளின் விழிகளில் காணாதீர்

பிள்ளைகளின் கனவுகளை உங்கள் விழிகளில் காணுங்கள்

குழந்தைகளை குழந்தைகளாக காணுங்கள்

டாக்டராகவோ இன்ஜினியராகவோ அல்ல

#குழந்தைகள்தினம்

பொறியாளன் @Ramu_vfc

உலகிலேயே நம் சோகங்கள் மற்றும் மன அழுத்தங்களை நொடியில் போக்குகிற சிறந்த நிவாரணி குழந்தைகள்தான் ... #HappyChildrensDay

Ganesan @Ganesan10401070

பேசத் தெரியாது..பேசினாலும் புரியாது - ஆனாலும் புன்னகைத்தபடி இந்த உலகத்தை ஆள்கிறார்கள்...குழந்தைகள்!

Bala Murugan @Balamur97891372

தினங்களைக் கொண்டாடுவதை விடுத்து குழந்தைகளை எப்பொழுது கொண்டாடப் போகிறோம்?- கவிக்கோ.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x