Last Updated : 26 Jul, 2014 07:10 PM

 

Published : 26 Jul 2014 07:10 PM
Last Updated : 26 Jul 2014 07:10 PM

டிவி பார்க்கும் குழந்தைகள்: நன்மையா? தீமையா?

வீட்டில் குழந்தைகள் இருக்கும் அறையில் தொலைக்காட்சிப் பெட்டி இருப்பது கெடுதலே என்று சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

குழந்தைகளின் சமூக மற்றும் உணர்வு நிலை வளர்ச்சி தொடர்பாகவும், தொலைக்காட்சியின் விளைவுகள் தொடர்பாகவும் அமெரிக்காவின் லொவா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நடத்தினர்.

இந்த ஆய்வில், குழந்தைகள் உள்ள அறையில் டிவி இருக்கும்பட்சத்தில், அவர்கள் படித்துக்கொண்டிருந்தாலோ அல்லது விளையாடிக்கொண்டிருந்தாலோ, அவர்களது கவனம் தொலைக்காட்சியினால் சிதறக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர்.

மேலும், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் அல்லாமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பார்ப்பது குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

“குழந்தைகள் முன்பு நீங்கள் எதை காண்பித்தாலும், அவர்கள் அதனிடமிருந்து ஏதோ ஒன்று கற்றுக்கொள்வார்கள். அப்படியிருக்கையில், தொலைக்காட்சியை அவர்கள் முன் காட்டுவதன் மூலம் அவர்கள் என்ன கற்றுக்கொள்ளப் போகிறார்கள்?”, என்று அப்பல்கலைகழகத்தின் இணை பேராசிரியர் டிபோராஹ் லைன்பார்கர் (Deborah Linebarger) கேள்வி எழுப்புகிறார்.

அமெரிக்காவின் 1,150 குடும்பங்களிலுள்ள 2 முதல் 8 வரையிலான வயதுடைய குழந்தைகளை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வு ‘Journal of Developmental & Behavioural Pediatrics’ என்ற இதழில் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x