

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி, ஞாயிறுகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘சரிகமப’. இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ், ரம்யா நம்பீசன் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தற்போது வரை அக்ஷயா, ஜீவன், புருஷோத்தமன், லகக்ஷனா ஆகியோர் பைனலுக்கு முன்னேறியுள்ளனர். மீதமுள்ள போட்டியாளர்களில் மேலும் ஒருவர் அல்லது 2 பேருக்கு பைனலுக்கு செல்லும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்கள் சவாலான பாடல்களைத் தேர்வு செய்து பாடும் சேலஞ்ச் ரவுண்ட் நடைபெற உள்ளது.
இதன் மூலம் பைனலுக்கு செல்ல போகும் 5-வது போட்டியாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும். இதைத் தொடர்ந்து கிராண்ட் பைனல் நிகழ்ச்சி 18-ம் தேதி மாலை 6 மணி முதல் தொடர்ச்சியாக 5 மணி நேரம் நேரடியாக ஒளிபரப்பாகிறது.