மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.4 - 10

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.4 - 10
Updated on
10 min read

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் நீங்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது துரிதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை அகலும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். வேலையை மனதிற்கு பிடித்து செய்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும் படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் மறையும். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள்.

பெண்கள் எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் அகலும். சுபச் செலவு கூடும். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.

அஸ்வினி: இந்த வாரம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

பரணி: இந்த வாரம் சுப காரியங்கள் கைக்கூடி மகிழ்ச்சியளிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். வெளி வட்டாரத் தொடர்புகளால் உங்களின் பெயர், புகழ், உயரும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திருப்தியான நிலையை அடைவார்கள்.

பரிகாரம்: முருக பெருமானை வணங்க எல்லா வற்றிலும் நன்மை உண்டாகும்.

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - சப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண் பழிவர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள்.

கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபார ரீதியாக புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள்.

ரோகிணி: இந்த வாரம் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக அமையும். கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். கடன்கள் குறையும். கலைஞர்கள் வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பினைப் பெறுவார்கள்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற வீண் விரயங்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் உணவு விஷயத்தில் மிகவும் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்: குரு பகவானை வணங்க செல்வம் சேரும்.

மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- தனவாக்கு குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். மனதில் இருந்த கவலை அகலும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபச்செலவு ஏற்படும். கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.

பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமையற்ற நிலை உண்டாகும். முயற்சிகளிலும் தடை தாமதங்கள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும்.

திருவாதிரை: இந்த வாரம் பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடனில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். புதிய ஒப்பந்தங்களில் கையழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகளை சமாளிக்கக் கூடிய ஆற்றலும் அதிகரிக்கும்.

பரிகாரம்: விநாயக பெருமானை ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- ராசியில் குரு(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். நல்ல பலன்களையே தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும் சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். உடல்நலக் கோளாறு அகலும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்கு வன்மையால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். சக தோழர்களுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் அமையும். கலைஞர்கள் எதிர்பார்த்த கதாபாதிரங்களுக்கான வாய்ப்பினைப் பெறுவார்கள்.

பூசம்: இந்த வாரம் பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் அனுகூலமானப் பலன்களும் உண்டாகும். அரசியல்வாதிகள் மேடை பேச்சுகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது உத்தமம்.

ஆயில்யம்: இந்த வாரம் மாணவர்கள் அதிக அக்கறையோடு படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று வாழ்வில் உயர்வினை அடையமுடியும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட மனோ தைரியம் கூடும்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சனி, ராகு - விரைய ஸ்தானத்தில் குரு(வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் தேவையற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். மன வருத்தம் நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பண தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள்.

சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம்.

கலைத் துறையினருக்கு காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். மாணவர்கள் புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.

மகம்: இந்த வாரம் மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உடல் சோர்வு, எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவற்ற நிலைகளால் மனக் குழப்பங்கள் ஏற்படும்.

பூரம்: இந்த வாரம் எதிர்பாராத பயணங்கள் உண்டாகி தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. குடும்பம், பொருளாதாரநிலை விசயத்தில் அடுத்தவர் தலையீடு வேண்டாம்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும், புத்திரர்களால் மனநிம்மதியற்ற நிலையும் உண்டாகும்.

பரிகாரம்: சிவனை வணங்கி வர மனக்கவலை நீங்கும்.

கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, ராகு - லாப ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மன குழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். தொழிலதிபர்கள் அதிக பொருளாதார வரவுகளை பெறுவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் அரசு தனியார் துறைகளில் உள்ளவர்களும் இதுவரை இருந்த ஆடம்பர செலவினங்களை தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபமங்களச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் உங்கள் நற்செயல்கள் இருக்கும்.

தந்தை வழி சார்ந்த உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை உங்களிடம் கேட்டு பெற வருவார்கள். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்து போவது நல்லது.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது உத்தமம். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகள் உண்டாவதைத் தவிர்க்கலாம்.

அஸ்தம்: இந்த வாரம் வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கல் கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் கொடுக்கல் -வாங்கலில் மிகவும் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். பண விஷயத்தில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதும், வாக்குறுதிகளைக் கொடுப்பதும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். வம்பு வழக்குகள் உண்டாகும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்குவது நன்மை தரும்.

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- ராசியில் புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி, ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பொருளாதார முன்னேற்றம் பண வரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். குடும்பத்தில் திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும்.

வயது வந்த புத்திரர்கள் உள்ளவர்களுக்கு நல் உதவிகளும் கிடைக்கபெறும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆயுள் அபிவிருத்தி அடைவதற்கான வகையில் கிரகங்கள் கெயல்பட உள்ளதால் அதற்கேற்றவாறு பழக்கவழக்கங்களை அமைத்துக்கொள்ளுங்கள்.

பெண்கள் பணியில் ஈடுபட்டுள்ள தொழில் மேன்மை பெறுவார்கள். கலைத்துறையினர் நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். சுமூகமான உறவு ஏற்படும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், போட்டிகளும் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும். வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலைகளும் ஏற்படும்.

சுவாதி: இந்த வாரம் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டால் அபிவிருத்தி குறையும் என்பதால் முடிந்த வரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வீண் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எடுக்கும் பணிகளை சரி வரச் செய்து முடிக்க முடியும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும். மல்லிகை மலரை சாத்தி வழிபடவும்.

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சனி, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் புதன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். தொழிலதிபர்கள் புதிய வாடிக்கையாளர்களை நிரம்ப பெறுவார்கள். நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள்.

உத்தியோகஸ்தர்கள்: அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும். குடும்பத்தில் கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் அனுகூல பயன்கள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு சிறிது பொறாமைப் படுவார்கள். பெண்களுக்கு சீரான வாய்ப்புகள் வரும். குழப்பமான மனநிலை அகலும்.

கலைத்துறையினர் முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள்.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடை தாமதங்களுக்குப் பின் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் உண்டாவதைத் தவிர்க்க முடியும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

அனுஷம்: இந்த வாரம் அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதால் உடல்நிலை சோர்வடையும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டி இருக்கும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பெண்கள் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும்.

கேட்டை: இந்த வாரம் திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். தாய்வழி உற்றார்-உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டி வரும்.

பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபடுவது நன்மை தரும்.

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் புதன் - விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த தடங்கல் நீங்கும். தேவையற்ற மனக்கவலை அகலும். வழக்கு விவகாரங்களில் வேகமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு நீங்கும். கிடப்பில் இருந்த கடன்கள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கு இடையே திடீர் மன வருத்தம் அடையும் படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை.

பெண்கள் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து கொட்டும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள் செயல்பாடுகள் இருக்கும்.

மூலம்: இந்த வாரம் எதிர்பார்க்கும் பணவரவுகளும் தாமதப்படுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தடைகள் நிலவும். பொதுப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலைகள் உண்டாகும்.

பூராடம்: இந்த வாரம் புத்திரவழியில் வீண் கவலைகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்து மனநிம்மதி குறையும். கடன் அதிகரிக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெற முடியும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீமஹா கணபதியை வழிபடுவது கவலையை போக்கும்.

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, ராகு - சப்தம ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் புதனின் சஞ்சாரம் பணவரத்தைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் தடங்கல்கள் அகலும் . புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.

குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். பெண்களுக்கு உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது.

அரசியல்துறையினர் வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும். கலைத்துறையினருக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவர்கள் முதல்தர மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவர்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் -உறவினர்களை அனுசரித்துச் செல்வது, வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளை பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது.

திருவோணம்: இந்த வாரம் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது உத்தமம். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு மன அமைதி குறையும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் உடன் இருப்பவர்களாலே வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். மாணவ- மாணவியர் கல்வியில் ஈடுபாடு குறையும். ஞாபக மறதி, மந்த நிலை உண்டாகும். படிப்பில் கவனம் குறைவதால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெறமுடியாது.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர அனுகூலம் உண்டாகும்.

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சனி, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும்.

கலைத்துறையினருக்கு மனோ தைரியம் அதிகரிக்கும். புதிய எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தேவையற்ற நண்பர்களின் சகவாசமும் பொழுதுபோக்குகளும் உங்களின் வாழக்கை நிலையையே மாற்றியமைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது.

சதயம்: இந்த வாரம் எதிலும் சற்று நிதானமாகச் செயல்படுவது நல்லது. தனவரவுகள் திருப்தி அளிப்பதாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளை ஏற்படுத்தும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் தொழில் ரீதியாக சில போட்டிகளைச் சந்திக்கநேரிடும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை குறையும். உற்றார்-உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.

பரிகாரம்: பைரவரை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும்.

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். கலைத்துறையினர் மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் உடல்நிலையிலும் தேவையற்ற பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அலைச்சல், டென்ஷன், உடல் சோர்வு ஏற்படும். புத்திர வழியில் வீண் செலவுகள் உண்டாகி மனநிம்மதி குறையும்.

உத்திரட்டாதி: இந்த வாரம் எந்தவொரு காரியத்தைச் செய்வது என்றாலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சனிக்கு உரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிவரும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.

ரேவதி: இந்த வாரம் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி ஒற்றுமை குறையும். உற்றார்-உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளையே ஏற்படுத்துவார்கள்.

பரிகாரம்: தினமும் அம்மனை வணங்கினால் கஷ்டம் நீங்கும்.

<div class="paragraphs"><p>இந்த வார கிரகங்களின் நிலை</p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.4 - 10
மேஷம் முதல் மீனம் வரை: டிசம்பர் மாத பலன்கள் @ 2025

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in