துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.27 - டிச.3

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.27 - டிச.3
Updated on
3 min read

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- ராசியில் புதன், சுக்கிரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சனி, ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எடுக்கும் காரியங்கள் காரியங்கள் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும்.

பெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதை பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது.

சுவாதி: இந்த வாரம் கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல் படுவது நல்லது. சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் வேலைகளை செய்வது அவசியம்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: குல தெய்வத்தை வணங்க குடும்ப பிரச்சனை, தொழிற்பிரச்சனை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும்.

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- ராசியில் சூரியன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சனி, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது.

வழக்குகளில் மெத்தன போக்கு காணப்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒரு வித கவலை இருக்கும். மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம்.

அனுஷம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு.

கேட்டை: இந்த வாரம் குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்படும். குடும்ப செலவை சமாளிக்க பண வரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

பரிகாரம்: முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் தேவையற்ற மனக் கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம்.

பெண்களுக்கு தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பண வரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும்.

மூலம்: இந்த வாரம் அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே நிதானமாக செயல் படுவது நன்மையை தரும். எந்த பிரச்சனை யையும் சமாளிக்கும் திறமை கூடும். எதையும் அவசரப் படாமல் நிதானமாக செய்வது நல்லது.

பூராடம்: இந்த வாரம் பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக பாடுபடுவீர்கள்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குரு பகவானுக்கு முல்லை மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும்.

<div class="paragraphs"><p>இந்த வார கிரகங்களின் நிலை</p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in