

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- ராசியில் புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி, ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் பொருளாதார முன்னேற்றம் பண வரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். குடும்பத்தில் திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும்.
வயது வந்த புத்திரர்கள் உள்ளவர்களுக்கு நல் உதவிகளும் கிடைக்கபெறும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆயுள் அபிவிருத்தி அடைவதற்கான வகையில் கிரகங்கள் கெயல்பட உள்ளதால் அதற்கேற்றவாறு பழக்கவழக்கங்களை அமைத்துக்கொள்ளுங்கள்.
பெண்கள் பணியில் ஈடுபட்டுள்ள தொழில் மேன்மை பெறுவார்கள். கலைத்துறையினர் நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். சுமூகமான உறவு ஏற்படும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், போட்டிகளும் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும். வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலைகளும் ஏற்படும்.
சுவாதி: இந்த வாரம் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டால் அபிவிருத்தி குறையும் என்பதால் முடிந்த வரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம்.
விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வீண் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எடுக்கும் பணிகளை சரி வரச் செய்து முடிக்க முடியும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும். மல்லிகை மலரை சாத்தி வழிபடவும்.
விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சனி, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் புதன் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். தொழிலதிபர்கள் புதிய வாடிக்கையாளர்களை நிரம்ப பெறுவார்கள். நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள்.
உத்தியோகஸ்தர்கள்: அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும். குடும்பத்தில் கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் அனுகூல பயன்கள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு சிறிது பொறாமைப் படுவார்கள். பெண்களுக்கு சீரான வாய்ப்புகள் வரும். குழப்பமான மனநிலை அகலும்.
கலைத்துறையினர் முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள்.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடை தாமதங்களுக்குப் பின் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் உண்டாவதைத் தவிர்க்க முடியும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
அனுஷம்: இந்த வாரம் அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதால் உடல்நிலை சோர்வடையும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டி இருக்கும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பெண்கள் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும்.
கேட்டை: இந்த வாரம் திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். தாய்வழி உற்றார்-உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டி வரும்.
பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபடுவது நன்மை தரும்.
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் புதன் - விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த தடங்கல் நீங்கும். தேவையற்ற மனக்கவலை அகலும். வழக்கு விவகாரங்களில் வேகமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு நீங்கும். கிடப்பில் இருந்த கடன்கள் வசூலாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கு இடையே திடீர் மன வருத்தம் அடையும் படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை.
பெண்கள் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து கொட்டும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள் செயல்பாடுகள் இருக்கும்.
மூலம்: இந்த வாரம் எதிர்பார்க்கும் பணவரவுகளும் தாமதப்படுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தடைகள் நிலவும். பொதுப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலைகள் உண்டாகும்.
பூராடம்: இந்த வாரம் புத்திரவழியில் வீண் கவலைகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்து மனநிம்மதி குறையும். கடன் அதிகரிக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெற முடியும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.
பரிகாரம்: ஸ்ரீமஹா கணபதியை வழிபடுவது கவலையை போக்கும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.