மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ செப்.24 - 30

மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ செப்.24 - 30
Updated on
3 min read
மேஷம்:
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் செவ்வாய், குரு - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் - களத்திர ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சந்திரன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க, விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது.

அஸ்வினி: இந்த வாரம் திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். கடன் தொல்லை குறையும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் இருந்து வந்த தடைகள் அகலும்.

பரணி: இந்த வாரம் உறவினர்கள் நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் எந்த ஒரு பிரச்சினையும் இன்றி நல்லபடியாக நடைபெறும். எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன்நிறுத்தி தான் தப்பித்துக் கொள்ள வேண்டிவரும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும்.

பரிகாரம்: தேவி கருமாரியம்மனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.

ரிஷபம்:
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், ராகு - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எதிலும் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.

பெண்கள் அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வ பக்தி அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சூழ்நிலை காரணமாக மனச் சங்கடம் ஏற்படும். மற்றவர்களுக்காக நீங்கள் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பீர்கள். அதனால் மன உளைச்சல் அதிகமாகும்.வருமானத்திற்கு குறைவிருக்காது.

ரோகிணி: இந்த வாரம் வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். மேலிடத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். தக்க சமயத்தில் ஒருவருக்கு உதவி புரிவீர்கள்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் சிலரிடம் கண்டிப்பாக நடந்து கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்தமான ஆலயத்திற்குச் சென்று வருவீர்கள். விலை உயர்ந்த பொருள் ஒன்றை பரிசாக பெறுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.

பரிகாரம்: அஷ்ட லட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

மிதுனம்:
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சூரியன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், ராகு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மை தரும்.

பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். கணவன், மனைவி ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து போவது பிரச்சினைகளை தவிர்க்கும். தெய்வத்தை வழிபட நன்மைகள் நடக்கும்.

திருவாதிரை: இந்த வாரம் சிறு தடங்கல்கள் வரலாம். நன்மைகளை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். வெளிநாடு செல்ல விரும்புவர்கள் சிறிது காலம் அதை ஒத்திப்போடுவது நல்லது. பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டிய கால கட்டம்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் அலைச்சல் அதிகமாக இருக்கும். ஆனால் அதற்குத் தக்க வருமானமும், வெகுமதியும் கிடைக்கும். நல்லோர் சிலரை சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: உப்பிலியப்பன், பூமிதேவியை வணங்கிவர திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

<div class="paragraphs"><p>இந்த வார கிரகங்களின் நிலை:</p></div>

இந்த வார கிரகங்களின் நிலை:

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ செப்.24 - 30
Sara's: தாய்மையில் இருந்து விடுவித்துக் கொண்ட சாராவின் சாய்ஸ் | திரை தேவதைகள் 36

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in