மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ அக்.8 - 14

மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ அக்.8 - 14
Updated on: 
4 min read
மேஷம்:
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் செவ்வாய், குரு - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் - களத்திர ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்து சேரும்.

வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும்.

கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்

அஸ்வினி: இந்த வாரம் ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றுவீர்கள். உங்கள் பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்து முடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம், அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும்.

பரணி: இந்த வாரம் தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும். சக தொழிலாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமையில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கிவர துன்பமும், தொல்லையும் நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும்.

ரிஷபம்:
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு - சுக ஸ்தானத்தில் சந்திரன், கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

ரோகிணி: இந்த வாரம் எடுத்த காரியத்தை தைரியமாக உறுதியுடன் செயல்படுத்துவீர்கள். வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய ஆடை அணிகலன்கள்- ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்தது இனி சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். அதே நேரத்தில் பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மை தரும்.

பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். வேலைப் பளு குறையும்.

மிதுனம்:
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், கேது - சுக ஸ்தானத்தில் சூரியன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழி வர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலை தூக்கலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.

பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும். காரிய தடை, தாமதம் உண்டாகலாம்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனக்கவலை ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.

திருவாதிரை: இந்த வாரம் உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும். அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும். வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். தொலை நோக்கு சிந்தனையுடன் புதிய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பீர்கள். நீங்கள் எடுத்த காரியத்தை நிதானமாக செய்து முடிப்பீர்கள். எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும்.

பரிகாரம்: நந்தீஸ்வரரை நெய் தீபம் ஏற்றி வணங்க கடன் சுமை குறையும். தொழில் முன்னேற்றம் உண்டாகும்.

<div class="paragraphs"><p>இந்த வார கிரகங்களின் நிலை</p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ அக்.8 - 14
Dorothy: சாதி, ஆண் திமிர் வளர்த்த பாலின பாகுபாட்டை தகர்த்த டோரதி | திரை தேவதைகள் 38

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in