மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.20 - 26

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.20 - 26
Updated on
3 min read

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை- சுக ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் மனதிடம் அதிகரிக்கும். பண வரத்து இருந்த போதிலும், சுபச் செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. குடும்பாதிபதி சுக்கிரன் சப்தம ராசியில் இருக்கிறார். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும்.

கணவன், மனைவிக்கு இடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாக பேசுவது நல்லது. உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த பூசல்கள் அகலும். தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பெண்களுக்கு எதை பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும். மாணவர்களுக்கு கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.

அஸ்வினி: இந்த வாரம் படிப்படியான முன்னேற்றத்தை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்தியளிப்பதாக அமையும். குடும்ப ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளை ஏற்படுத்தும்.

பரணி: இந்த வாரம் எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். சிலருக்கு அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளநிலையில் நடைபெற்றாலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களும் சற்று சிறப்பான லாபத்தைப் பெறஇயலும் என்றாலும் போட்டி பொறாமைகளையும் சந்தித்தே ஆகவேண்டும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து கந்தர் சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பண வரத்து திருப்தி தரும். சுபச் செலவுகள் அதிகமாகும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும் படியாக இருக்கலாம். நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

உறவினர்கள் நண்பர்கள் வகையில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.

பெண்களுக்கு ஏற்றம் ஏற்படும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் கவுரவமான பதவிகளை அடைய முடியும். மாணவர்களின் கல்வித்திறன் ஓரளவுக்கு உயரும்.அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் ஓரளவுக்கு உயர்வுகளைப் பெறுவீர்கள். சனிக்கு உரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

ரோகிணி: இந்த வாரம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் இக்காலத்திலும் தடைகளையே சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளையும் மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடும். நெருங்கியவர்களே எதிரிகளாக மாறுவார்கள்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்திலும் பொருளாதாரத் தட்டுப்பாட்டினாலும் வீண் சஞ்சலங்களும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் குறையும் என்றாலும் புத்திரவழியில் வீண் செலவுகளும் நிம்மதியற்ற நிலையும் ஏற்படும். சிலருக்கு அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களினாலும் வீண் செலவுகள் உண்டாகும்.

பரிகாரம்: சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்சனை தீரும்.

மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை- தன வாக்கு குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் அதிக முயற்சிக்கு எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பண வரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்துசேரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும்.

கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அடையும். சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விட்டுக் கொடுத்து நடப்பது நன்மை அளிக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பண வரத்து கிடைக்க பெறுவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.

முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உற்றார்- உறவினர்களிடம் சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல், டென்ஷனை சந்திப்பீர்கள். உங்களின் திறமைக்கு ஏற்ற உயர்வுகளும் தாமதப்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க நேரிடுவதால் வேலைப் பளு அதிகரிக்கும்.

திருவாதிரை: இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு சிறப்பான புத்திரபாக்கியம் அமையும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் பணம் பலவழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். பொருளாதார நிலை சிறப்பாக அமைவதால் கடன்களும் படிப்படியாகக் குறையும். புத்திரபாக்கியம் வேண்டு பவர்களுக்கு அழகான புத்திர பாக்கியம் அமையும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்ச நேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.

<div class="paragraphs"><p>இந்த மாதம் கிரகங்களின் நிலை:</p></div>

இந்த மாதம் கிரகங்களின் நிலை:

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in