மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ நவ.12 - 18

மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ நவ.12 - 18
Updated on: 
4 min read
மேஷம்:
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் குரு(அ), கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன்(வ) - லாப ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: வாழ்க்கையில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக உழைக்கவும் தயங்காத உங்களுக்கு இந்த வாரம் மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். தருமசிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும்.

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

கணவன் மனைவிக் கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும்.

அஸ்வினி: இந்த வாரம் பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்டதூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும்.

பரணி: இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும். கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் காரியங்களால் முன்னேற்றம் கிடைக்கும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். முக்கிய நபர்களின் உதவியும் அவசியமான நேரத்தில் ஆலோசனையும் கிடைக்க பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபார வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து வரும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் துர்க்கை அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வர காரிய தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறக்கும்.

ரிஷபம்:
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் குரு(அ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன்(வ) - தொழில் ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: எத்தனை இடையூறுகள் வந்தாலும் எதிர்த்து நின்று காரிய வெற்றி காணும் உங்களுக்கு இந்த வாரம் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். அதே வேளையில் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனவேதனையில் தெளிவான நிலை ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும்.

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம். பெண்கள் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனை குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலை தொடர்பாக பயணம் செல்ல நேரலாம். அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சுமூகமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனகசப்பு மாறும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். தேவையான நேரங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

ரோகிணி: இந்த வாரம் தேக்க நிலை மாறி ஆர்வமுடன் சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். காரியங்களில் தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். மரியாதையும், அந்தஸ்தும் கூடும். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். திடீர் கோபம் வரலாம். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் சமாளிக்கும் மனோதைரியம் உண்டாகும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். எந்த சிக்கலும் வராமல் இருக்க தீர ஆலோசனை செய்து முடிவுகள் எடுப்பீர்கள். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமை வெளிப்பட்டு அதனால் பாராட்டும் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வார்கள். அக்கம் பக்கத்தினரிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வர பாவங்கள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

மிதுனம்:
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(அ), கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன் (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: எப்போதும் சுறுசுறுப்பாக செயலாற்றும் உங்களுக்கு இந்த வாரம் பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மையால் நன்மை ஏற்படும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும்.

பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும். பெண்கள் உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கோபத்தை குறைத்துக் கொண்டு எல்லோரிடமும் நிதானமாக பேசுவது பிரச்சனை வராமல் தடுக்கும். மனோபலம் கூடும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற்று கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். திறமை வெளிப்படும். வீண் அலைச்சல், காரிய தாமதம் ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். தடை, தாமதம் ஏற்பட்டாலும் எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.

திருவாதிரை: இந்த வாரம் பயணங்கள் செல்ல நேரலாம். அடுத்தவர்களுக்கு நன்மை செய்யும் போது கவனமாக இருப்பது வீண் பிரச்சனைகள் வராமல் தடுக்கும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய ஆர்டர்கள் வருவது, புதிய வாடிக்கையாளர்கள் வருவதும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு இல்லாதது போல் தோன்றினாலும் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். அடுத்தவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மனகுழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த குழப்பம் நீங்கி, பாடங்களை நம்பிக்கையுடன் படிப்பீர்கள். சக மாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை தீபம் ஏற்றி தரிசித்து வர கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும்.

<div class="paragraphs"><p>இந்த வார கிரகங்களின் நிலை</p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ நவ.12 - 18
Akka: பெண்களின் ஆதிக்கமும் அதிகார யுத்தமும் | ஓடிடி திரை அலசல்

X