

பலன்கள்: இந்த வாரம் சமய சந்தர்ப்பம் அறிந்து காரியங்களை செய்வீர்கள். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலைகள் நீங்கும். வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. ராசியாதிபதி புதன் சஞ்சாரத்தால் திடீர் உடல் நல பாதிப்பு அகலும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. நிதானமான போக்கு காணப்படும். பண வரத்து தாமதப்படும்.
தொழில் வியாபாரத்திற்காக கடன் வாங்க நினைப்பதை தள்ளிபோடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலைப் பளுவால் மன சலிப்பும் உண்டாகும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் வார இறுதியில் மாறி சகஜ நிலை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.
பயணங்கள் தாமதப்படும். பெண்களுக்கு வீண் அலைச்சலும், காரிய தாமதமும் ஏற்படும். கலைத் துறையினருக்கு உடல் நலத்தில் அக்கறை தேவை. அரசியல் துறையினருக்கு நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.
அஸ்வினி: இந்த வாரம் உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். பண வரத்து திருப்தி தரும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். டென்ஷனை குறைத்து வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது.
பரணி: இந்த வாரம் பண வரத்து மன மகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வாக்கு வன்மையால் நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.
பரிகாரம்: குல தெய்வத்தை வணங்க வாழ்க்கை வளம் பெறும். மனதில் நிம்மதி ஏற்படும்.
பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியம் தாமதத்திற்கு பிறகு சாதகமான பலன் தரும். ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் மனோதிடத்தைத் தரும். அவசரப்பட்டு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்கள் தாமதமாக நடைபெறும்.
புதிய ஆர்டர்கள் கிடைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கு இடையே பந்த பாசங்கள் கூடும். வாழ்க்கை துணையின் மூலம் லாபம் கிடைக்கும்.
உறவினர்கள் உதவி கிடைக்கும். பெண்களுக்கு அவசரப்பட்டு எந்த வாக்குறுதியையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். அரசியல்துறையினருக்கு காரியங்களில் வேகம் ஏற்படும். மாணவர்களுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் கல்வியில் மேன்மை உண்டாகும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும். உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டு கட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும்.
ரோகிணி: இந்த வாரம் உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.
பரிகாரம்: சந்திரனை வணங்க குழப்பங்கள் நீங்கி மன தெளிவு உண்டாகும். பொருள் சேர்க்கை இருக்கும்.
பலன்கள்: இந்த வாரம் உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியமும், உற்சாகமும் கூடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவுகளை உண்பீர்கள். வார இறுதியில் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
பண வரத்து திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த மனக் கசப்புகள் விலகி ஓரளவு நல்ல ஒற்றுமையுடன் வாழ நேரிடும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
பெண்களுக்கு எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மனோதிடம் கூடும். கலைத்துறையினருக்கு உற்சாகமாக காணப்படுவீர்கள். அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும்.
திருவாதிரை: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புது வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை.
பரிகாரம்: சிவனை வணங்க காரிய தடை நீங்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.