மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ ஜூலை 30 - ஆக.5

மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ ஜூலை 30 - ஆக.5
Updated on
4 min read
மேஷம்:
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- தனவாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சூரியன், குரு - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - லாப ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அஷ்டமத்து சனியால் வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. முன்கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிபுரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்தபாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். கலைத்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வ நிலை உயரும். அரசியல்துறையினருக்கு இருந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மாணவர்களுக்கு மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும்.

அஸ்வினி: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடைகள் அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பணவரத்தும் இருக்கும். தொழிலாளர்களால் மிகுந்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும்.

பரணி: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கைகூடி வரும். வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் மந்த நிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நிவர்த்தியாகி உங்கள் சொற்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். வழக்கு விவகாரங்களில் கால தாமதமான நிலை காணப்படும். வெளியூர் பயணம் செல்லவேண்டி இருக்கும். மாணவர்களுக்கு பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ மகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.

ரிஷபம்:
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை- ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், குரு - சுக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தொழில் ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். திடீர் உடல்நலக்கோளாறு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள்.

உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.

கலைத்துறையினருக்கு நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. அரசியல் துறையினருக்கு வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும். மாணவர்களுக்கு மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். கலைத் துறையினருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

ரோகிணி: இந்த வாரம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையினர் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக மனிதர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் உழைப்பது அவசியம். மனதில் இருந்த கவலை, வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலியசென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தொழில் வியாபாரம் சீராகும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். போட்டிகள் குறையும்.

பரிகாரம்: ஆதி பராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும்.

மிதுனம்:
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சனி - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். பெண்களுக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும்.

கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்சனைகள் இழுபறியான நிலை காணப்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் லாபத்திற்கு பஞ்சமிருக்காது. மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.

திருவாதிரை: இந்த வாரம் வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்க தாமதமானாலும் கட்டாயம் கிடைக்கும். போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். நிதானமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் நல்ல பெயர் கிட்டும். மேலிடத்திலிருந்து அதிகமான சுமைகளைத் தருவார்கள். மனோ தைரியம் உண்டாகும். பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த் வாரம் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சனைகள் நல்ல முடிவை தரும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பதை கண்டு மனம் மகிழ்வீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகள் இழுபறியாக இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.

பரிகாரம்: ஸ்ரீ ரங்கநாதரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும்.

<div class="paragraphs"><p><em>இந்த வார கிரகங்களின் நிலை</em></p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ ஜூலை 30 - ஆக.5
GARGI: ஒற்றைக் கேள்வியில் நியாயத் தீர்ப்பு எழுதிய கார்கி | திரை தேவதைகள் 28

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in