மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ அக்.29 - நவ.4

மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ அக்.29 - நவ.4
Updated on: 
3 min read
மகரம்:
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன் புதன்(வ), சுக்கிரன்(வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் நன்மைகளை கிடைக்கும். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும்.

திருமண முயற்சிகள் கைகூடும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வழக்குகளில் சுமூக முடிவுகள் வந்து சேரும்.

அரசியல்வாதிகளுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதால் முன்னேற்றம் அடைவார்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய மாதம். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும்.

திருவோணம்: இந்த மாதம் ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலை தேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலை வாய்ப்புகள் வந்து சேரும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த மாதம் திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள்.

பரிகாரம்: அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வலம் வரவும்.

கும்பம்:
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் குரு, கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் புதன்(வ), சுக்கிரன்(வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் தடைபட்ட பணம் கிடைக்கும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. விரும்பத்தகாத ஆசைகள் உண்டாகலாம். வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி கிடைக்கும்.

தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். எல்லா நற்பலன்களும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதப்படலாம். வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம்.

கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். அரசியல்வாதிகள் அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து குவியும். பெண்கள் எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் பிரிந்து சென்ற தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் மாதம். சோதனைகள் வெற்றியாக மாறும்.

சதயம்: இந்த மாதம் காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக்கொடுப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் கல்வியில் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.

பரிகாரம்: ஏதேனும் ஒரு ஆலயத்திற்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

மீனம்:
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- ராசியில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் புதன்(வ), சுக்கிரன்(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் வசதிகள் பெருகும். உறவினர்களுடன் சுமூக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பொருளாதார வளம் மேம்படும்.

தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரையமும் காரியத் தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும்.

வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். அரசியல்வாதிகள் வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். பெண்களுக்கு வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

உத்திரட்டாதி: இந்த மாதம் பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு.

ரேவதி: இந்த மாதம் தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் வராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வலம் வரவும்.

<div class="paragraphs"><p>இந்த வார கிரகங்களின் நிலை</p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ அக்.29 - நவ.4
Raghu Thatha: அறிவுஜீவி முகமூடிகளை அம்பலமாக்கும் க.பா - திரை தேவதைகள் 41

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in